செல்வ வளம் பெருக
வீட்டில் எத்தனை வளங்கள் இருந்தாலும் செல்வம் பெருக வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகளாகும். இல்லத்தில் செல்வம் பெருக மகாலட்சுமியின் அருள் வேண்டும்.
செவ்வ வளம் பெருக சில வழிமுறைகள் :
காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்.
குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்க வேண்டும். பின்புதான், முகத்தை துடைக்க வேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.
பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கப்படும் லுங்கிகள் அணியக்கூடாது.
சாப்பிடும் போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.
பூஜை அறையில் இராஜ அலங்காரத்துடன் கூடிய பழனியாண்டவர் சிலை வைத்து வழிபடவும்.
இரவில் தயிர் சேர்த்து கொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாட்சம் காணாமல் போய்விடும்.
வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.
வீட்டின் முன்பு கண் திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகன் படங்களை மாட்டவும். அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும்.
லட்சுமி படத்திற்கும், கள்ளாபெட்டிக்கும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.
லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும். அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல 'ஓம் ஐஸ்வரேஸ்வராய நம" என்றாவது கூற வேண்டும்.
பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.
திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்.
செவ்வ வளம் பெருக சொல்ல வேண்டிய மந்திரம்:
விஷ்னு பத்னீம் க்ஷமாம் தேவீம்
மாதவீம் மாதவப்ரியாம் லக்ஷ்மீம்
ப்ரிய ஸகீம் தேவீம் நமாம்
யச்யுத வல்லபாம்.
ராகு-கேது தோஷம் நீங்க..!
திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால் ராகு-கேது தோ~ம் நீங்கும்.
No comments:
Post a Comment