தீட்டு
♣ நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல, கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு துடக்கு எனப்படும் “தீண்டத்தகாமை”, “தூய்மை இன்மை” என்னும் ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
♣ ‘தீட்டு’ மனம் சார்ந்த வி~யம். பசுமாடு, கடவுளை வேண்டியது... ‘அய்யனே! கன்றை ஈன்றெடுத்த என்னிடமிருந்து பால் பெறும் பொருட்டு மற்றவர்கள் என்னை 10 நாட்கள் தீண்டக்கூடாது என்கிற வரத்தை அருளுங்கள்’ என்று கேட்டது. கடவுளும் அப்படியே வரம் தந்தார். இதைச் சான்றாக வைத்து, பிறந்த தீட்டை பத்து நாட்களாக நாமும் கடைப்பிடிக்கிறோம்.
♣ தீட்டு, துடக்கு, அடைப்பு, குற்றம், ஆசௌசம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும். ஒருவரின் வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் அதை தீட்டு என்று சொல்வார்கள்.
♣ இறந்த பின் அந்த வீட்டில் சடங்குகள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் இறந்தவரின் ஆத்மா சாந்தியாகும் என்பது ஐதீகம். இதற்காகத்தான் ஆண்டு தோறும் திதி கொடுக்கப்படுகிறது.
இறந்த பின் செய்யகூடாதவை :
♣ இறந்தவர் வீட்டில் சுப காரியங்களை மாதங்கள் மற்றும் ஆண்டு கழித்து செய்ய வேண்டும்.
♣ ஒருவர் இறந்த நேரத்தின் போது வரும் சில அசுப நட்சத்திரங்களுக்கும் தோஷம் உண்டு. அவிட்டம் முதல் ரேவதி வரையிலான ஐந்து நட்சத்திரங்கள் தனிஷ்டா பஞ்சமி என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த நட்சத்திரம் வரும் போது ஒருவர் இறந்தால் ஆறு மாதங்களுக்கு அடைப்பு என்பர்.
♣ இது தவிர கார்த்திகைக்கு ஆறு மாதங்களும், ரோகிணி மற்றும் மகத்திற்கு ஐந்து மாதங்களும், புனர்பூசம், உத்திரம், உத்திராடம் மற்றும் விசாகத்திற்கு மூன்று மாதங்களும், மிருகசீரிஷம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களுக்கு இரண்டு மாதங்களும் தீட்டாகும்.
♣ இந்த அடைப்புகள் உள்ள காலத்தில் சுப காரியங்கள் மற்றும் கோயிலுக்கு செல்லவதை தவிர்க்க வேண்டும்.
♣ தீட்டுகள் முடிந்ததும் குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்து விட்டு பிறகு கோயிலுக்கு செல்வது நன்மை தரும்.
ராகுகேது தோஷம் நீங்க..!
ஒரு வெள்ளி நாகத்தினை தாம்பாளத்தில் வைத்து சாந்தி பரிகார மந்திரங்களைச் சொல்லி, அதற்கு அபிஷேகம், பூவினால் பூஜை செய்து, ஒரு பெரியவருக்கு தானிய தானம் அளித்து, அந்த நாக வடிவை உண்டியலில் சேர்த்தால் ராகுகேதுவினால் உண்டாகும் தடைகள் அனைத்தும் நீங்கும்.
No comments:
Post a Comment