ஞாபக சக்திக்கு முக்கியமான உணவாக விளங்கும் வல்லாரை கீரை
வல்லாரைக்கீரை :
வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது.
மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர்.
கல்வித் தெய்வம் கலைவாணிக்கு இணையாக பூமியில் படைக்கப்பட்டதுதான் வல்லாரை. கல்வி, கேள்வி ஞானங்களில் சிறப்பாக விளங்குவோருக்கு கலைவாணியின் அருள் இருக்கிறது என்பார்கள். அந்த சரஸ்வதியின் அருளைப் பெற வல்லாரை என்ற மூலிகைதான் உதவுகிறது.
வாழிடம் :
இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப் பகுதிகள் உணவாகப் பயன்படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். தரையில் படர்ந்து வளரும் இயல்புடையது.
வல்லாரைக்கீரையில் உள்ள சத்துகள் :
இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து எ, உயிர்சத்து சி மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
வல்லாரையின் மருத்துவப் பயன்கள்:
வல்லாரையில் இருக்கும் வல்லாரின் என்கிற அல்கலாய்டு நரம்புகளுக்கு மிகப்பெரிய சக்தியை தருகிறது.
உயர் இரத்த அழுத்த நோயை குணமாக்குவதில் வல்லாரைக்கு முக்கிய பங்கு உண்டு.
தூதுவளையுடன் வல்லாரை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும்.
வல்லாரை உடற்சோர்வு, பசி, தாகம் போன்றவற்றை குணப்படுத்தும்.
இளம் பருவத்தினர் காலை வேளைகளில் வல்லாரையை பச்சையாக தின்று வந்தால், மூளை பலம் பெறுவதோடு மட்டுமல்லாமல், ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
வல்லாரை இலையை சாப்பிட்டு வந்தால் குடல் புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும்.
வல்லாரையில் இருக்கும் உனை தோலில் ஏற்படும் பலவித நோய்களை குணப்படுத்துகிறது.
இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதிலும் வல்லாரை முக்கிய பங்கு வகிக்கிறது.
உடலின் வலு அதிகரிக்கவும் வைரஸ் நோய்க்குப் பிறகு உடல் தேறவும் உதவுகிறது.
வல்லாரையிலுள்ள ஏஸியாடிக்கோசைடு என்னும் பொருள், புண்களைக் குணமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
No comments:
Post a Comment