இலக்கியம் - பெரியபுராணம் மற்றும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
1.பெரியபுராணத்தை இயற்றியவர் ----------- ஆவார் - சேக்கிழார்
2.சேக்கிழாரின் இயற்பெயர் -அருண்மொழித்தேவர்
3.சேக்கிழார் ----------- என்னும் பட்டம் பெற்றவர் - உத்தமசோழப் பல்லவர்
4.பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்
5.இன்னமுது என்பதனை பிரித்தெழுதுக. -இனிமை + அமுது
6.தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் -------------- - அப்பூதியடிகளார்
7.மேதி என்பதன் பொருள் - எருமை
8.பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ எனச் சேக்கிழாரை புகழ்ந்துப் பாடியவர் - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
9.ஆ என்பதன் பொருள் - பசு
10.செலவோழியா என்பதனை பிரித்தெழுதுக. -செலவு + ஒழியா
11.சேக்கிழார் பிறந்த ஊர் - காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூர்
12.சந்தம் என்பதன் பொருள் - அழகு
13.சேக்கிழார் வாழ்ந்த காலம் - கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
14.அங்கணர் என்பதன் பொருள் - அழகிய நெற்றிக்கண்ணையுடைய சிவன்
15.நான்மறை எனபதனை பிரித்தெழுதுக. -நான்கு + மறை
16. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள பெருமாள் திருமொழியை பாடியவர் - குலசேகர ஆழ்வார்
17. பெருமாள் திருமொழியில் ------------------ பாசுரங்கள் உள்ளன - 105
18. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை பாடியவர்கள் - பன்னிரு ஆழ்வார்கள்
19. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் - கேரள மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களம்
20. பற்றில்லேன் என்பதனை பிரித்தெழுதுக -பற்று + இல்லேன்
21. போன்றிருந்தேன் என்பதனை பிரித்தெழுதுக - போன்று + இருந்தேன்
22. குலசேகர ஆழ்வார் -------------- ஆழ்வார்களுள் ஒருவர் - பன்னிரு
23. தார்வேந்தன் என்பதன் பொருள் -மாலையணிந்த அரசன்
24. குலசேகர ஆழ்வார் ---------------- எனவும் அழைக்கப்பட்டார் - குலசேகர பெருமாள்
25. குலசேகர ஆழ்வாரின் காலம் - கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
No comments:
Post a Comment