இலக்கியம் - மணிமேகலை மற்றும் ஐம்பெரும் - ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்
1. மணிமேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியில் பிச்சையிட்டவள் - ஆதிரை
2. தண்டமிழ் ஆசான், சாத்தான் நன்னூற்புலவன் என்று சாத்தனாரைப் புகழ்ந்துப் பாராட்டியவர் - இளங்கோவடிகள்
3. சீத்தலைச் சாத்தனார் வாழ்ந்த காலம் -கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
4. கூலம் என்பதன் பொருள் - தானியம்
5. யார் உதவியால் மணிமேகலை அமுதசுரபியைப் பெற்றுப் புகார் நகரை அடைகிறாள் - தீவதிலகை
6. எழுந்தெதிர் என்பதனை பிரித்தெழுதுக -எழுந்து + எதிர்
7. பேதைமை என்பதன் பொருள் - அறியாமை
8. நன்மொழி என்பதனை பிரித்தெழுதுக -நன்மை + மொழி
9. சீத்தலைச் சாத்தனாரும் ------------ சமகாலத்தவராவர் - இளங்கோவடிகளும்
10. எனக்கிடர் என்பதனை பிரித்தெழுதுக -எனக்கு + இடர்
11.ஐஞ்சிறுங் காப்பியங்கள் யாவை? -உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி
12.கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் - மணிமேகலை
13.மணிமேகலை பிறந்த ஊர் - பூம்புகார்
14.மணிமேகலை மறைந்த ஊர் - காஞ்சிபுரம்
15.தமிழின் இரண்டாவது காப்பிய நூல் -மணிமேகலை
16.மணிமேகலை ஒரு ------------------ காப்பியம். -பௌத்த காப்பியம்
17.பிணிநோய் என்பதன் பொருள் - நீங்கா நோய்
18.மணிமேகலை நூலின் முதல் காதை -விழாவறை காதை
19.மணிமேகலை நூலின் இறுதி காதை -பவத்திறம் அறுக
20.யாக்கை என்பதன் பொருள் - உடம்பு
21.சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் -சீத்தலை (திருச்சிராப்பள்ளி)
22.சீத்தலைச் சாத்தானாரின் இயற்பெயர் -சாத்தன்
23.உண்டென்று என்பதனை பிரித்தெழுதுக -உண்டு + என்று
24.கோடு என்பதன் பொருள் - கொம்பு
25.வேட்கை என்பதன் பொருள் - விருப்பம்
No comments:
Post a Comment