இயற்கை
மருத்துவதால் குணமாகும் நோய்கள் – தேமல்!
1. கீழாநெல்லி இலை, கொத்துமல்லி
இலை ஆகியவற்றை பாலில் அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள்
கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி
ஆகியவைகள் குறையும்.
2. கமலா ஆரஞ்சு
தோலை பொடி செய்து தினமும் தேயத்து குளித்து வந்தால் தேமல் குறையும்.
3.மலைவேம்பு
இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு
குறையும்.
4.கீழாநெல்லி
இலை, கொத்தமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து தேமல் உள்ள
பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல் குறையும்.
5.வெள்ளைப்
பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர
தேமல் குறையும்.
6.கருஞ்சீரகத்தை
வறுத்து பொடி செய்து நல்லெண்ணெயில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர தேமல் குறையும்.
7.முள்ளங்கிச்
சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச்
சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.
8.வெள்ளைபூண்டு,வெற்றிலை அரைத்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி
குளித்து வர தேமல் குறையும்.
9.சந்தனத்தை
எலுமிச்சைச் சாற்றில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர தேமல் குறையும்.
10. நாயுருவி
இலை சாறை தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி வர தேமல் குறையும்.
11. ஆரஞ்சு
தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் தேய்த்து குளித்து வர தேமல் குறையும் இறந்த வரை எழுப்ப முடியுமா? கொலைகாரர் நல்லவராக முடியுமா?
திருமுறைப்
பாடல்களில் உள்ள சொற்கள் சிவபெருமானின் திருவாக்குகளே ஆகும். எனவே, அவை
இறந்தாரையும் எழுப்பும் தகைமை வாய்ந்தன. ஊழ்வினையை மாற்றும் பெற்றிமை பெற்றுள்ளன.
வீடு பேற்றை வழங்கும் திறன் திருமுறைகளுக்கு உண்டு. சிவச் சின்னங்களில் தலையாய தாகிய திருநீற்றின்
பெருமையைத் திருமுறை பேசுகிறது. சிவபெருமான் ஒருவரே கடவுள், பிற எல்லாம் உயிர்கள். எனவே, திருமுறை
சிவபரத்துவம் பேசுகிறது. சைவர்கள் எந்நேரமும் நினைவில் கொண்டிருக்க வேண்டிய
திருவைந்தெழுத்தின் பெருமையைப் பெரிதும் சிறப்பாகத் திருமுறைகள் முழக்குகின்றன. பன்னிரு திருமுறைகளை சமய தீக்கை பெறாதவர்களும் பெண்களும்
ஓதலாம். திருமுறைகள் ஓதுவதற்கு வயதில் ஏற்றத் தாழ்வோ, சாதி மத வேறுபாடோ கருதாமல் யாவரும் ஓதலாம்.
வடமொழி
வேதங்களால் அடைக்கப்பட்ட திருக்கோயில் கதவைத் திறக்கும் திறன் படைத்தது தமிழ்
வேதமாகிய திருமுறை. பாடுபவர் உள்ளத்தையும் கேட்பவர் நெஞ்சத்தையும் உருக்க வல்லது.
நெருப்பில்
அழியாதது. ஆற்றுநீரை எதிர்த்துச் செல்ல வல்லது. இசைக்குள் எளிதில் அடங்காதது.
கொடியவர்களும், கொலைகாரர்களும் கூடத் திருமுறை ஓதினால் நல்லவராக மாறுவது
திண்ணம். சிவ சம்பந்தத்தைத் தருவது. திருமுறையின் அருமை பெருமைகளுக்கு அளவே இல்லை.
ஆண்டு கணக்காக இதன் பெருமைகளை பேசிக் கொண்டே இருக்கலாம்.
திருமுறை
ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.
No comments:
Post a Comment