கோடைக்காலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு
கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? என்பது பற்றி இங்கே பார்போம்.
கோடையில் குழந்தைகள் பாரமரிப்பு :
☘ கோடை காலங்களில் மிகவும் மெல்லியதான பஞ்சு மற்றும் பருத்தியிலான ஆடைகளை குழந்தைக்கு அணிவிக்க வேண்டும். கூடுமானவரை, குழந்தையை வெளியிடத்திற்கு தூக்கிச் செல்வதை தவிர்ப்பது நல்லது.
☘ வேர்க்குருவை தவிர்ப்பதற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பதும், விளையாடிய பிறகு கால், கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுவதும் உடல் தூய்மையை அதிகரித்து நோய்தாக்கத்தை குறைக்கிறது.
☘ சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள். எனவே பெற்றோர்கள் குழந்தைக்கான தடுப்பூசிகளில் அக்கறை செலுத்துவது நல்லது.
☘ வெயில் காலத்தில் பொதுவாக தண்ணீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் என்பதால், குழந்தை மருத்துவரின் அனுமதி பெற்று, பால் குடிக்கும் குழந்தைக்கு, சுட வைத்து ஆற வைத்த தண்ணீரையும் அவ்வபோது கொடுக்கலாம்.
☘ வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உ~;ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.
☘ அதிக வெயிலால் சில குழந்தைகளின் உடம்பில் அரிப்பு, சொறி, சிவப்பு நிற தழும்புகள் போன்ற கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால், அவ்வபோது குழந்தையின் உடம்பை சோதித்துப் பார்க்க வேண்டும்.
☘ வெளியில் செல்லும் போதோ (அ) விளையாடும் போதோ தலையில் தொப்பியும், குழந்தைகளின் கண்களை பாதுகாக்க, கண்கண்ணாடி (வெப்பத் தடுப்பு) அணியசெய்வதும் அவசியம்.
☘ உடம்பில் குறைந்த நீர்சத்தை சமன் செய்ய போதிய அளவு நீர், இளநீர், பழச்சாறு போன்றவைகளை விளையாடும்போது அல்லது பயிற்சி செய்யும் முன்பும் மற்றும் பின்பும் குடித்தல் சிறந்தது.
☘ வெளியில் செல்லும்போது, சுகாதாரமற்ற முறையில் இருக்கும் சிலகடைகளை தவிர்த்து, எளிய எலுமிச்சைசாறு பானத்தை வீட்டிலேயே தயாரித்து எடுத்துச்செல்வது நல்லது. மாற்றி மாற்றி தண்ணீரை குடிப்பதால் உருவாகும் தொண்டை சம்மந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம்.
☘ குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.
☘ குழந்தைகளுக்கு பச்சை காய்கறிகள் தருவது அவர்களின் உடலில் சத்துகள் அதிகரிக்க உதவுகிறது. எனவே அவர்களுக்கு பிடித்தவாறு காய்கறிகளை சமைத்து கொடுக்கலாம்.
☘ வெள்ளரி, குடைமிளகாய், மாங்காய் மற்றும் மாம்பழம், கேரட் போன்றவைகளை பச்சையாக துண்டுகளாக்கியோ அல்லது துருவியோ கொடுக்கலாம்.
No comments:
Post a Comment