மாமரத்தின் மருத்துவம்
மூக்கனிகளுள் ஒன்று மா. மாம்பூ, மாந்தளிர், மாவிலை, மாம்பிஞ்சு, மாங்காய், மாம்பழம் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
♠ மாந்தளிர்:
நீரிழிவு உள்ளவர்கள், மாவின் கொழுந்து இலையை உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
♠ மாம்பூ:
வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன.
♠ மாவிலை:
மாவிலையைத் தேன்விட்டு வதக்கி நீர்விட்டுக் காய்ச்சிக் குடித்துவந்தால் தொண்டைக்கட்டும் குரல் கம்மலும் நீங்கும். தீயினால் ஏற்பட்ட காயங்களுக்கும் கொப்புளங்களுக்கும் மாவிலையைச் சுட்டுச் சாம்பலாக்கி வெண்ணெய் கலந்து தடவினால் எரிச்சல் குறையும்.
♠ மாம்பிஞ்சு :
மாம்பிஞ்சு புளிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளை உடையது. மாம்பிஞ்சுக்கு உள்ளழலை ஆற்றும் தன்மையுடையது, வற்றச் செய்யும் தன்மை உடையது, வயிற்றுக் கோளாறுகளைப் போக்க வல்லது. பசியைத் தூண்டக் கூடியது. உடலுக்கு உ~;ணத்தைத் தந்து உள்ளுறுப்புகளைத் தூண்டச் செய்வது.
♠ மாங்காய் :
மாங்காய் அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக சப்பிடுவதால் பல் கூச்சம் மற்றும் பல பிரச்சனைகளை தரும்.
♠ மாம்பழம் :
மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.
♠ மாம்பட்டை :
மாம்பட்டைத் தூளுடன் தேனும் பாலும் கலந்து சாப்பிட ரத்த அதிசாரம் என்கிற ரத்தபேதி, ரத்தக்கசிவு குணமாகும்.
♠ மாங்கொட்டையின் பருப்பு:
பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தூளாக்கி உண்டால் வயிற்றுப்போக்கு, அதிகமான ரத்தப்பெருக்கு ஆகியன கட்டுப்படும். பருப்புப் பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து நீருடன் இரவில் உண்டு வந்தால் குடலில் உள்ள உருளைப் புழுக்கள் நீங்கும்.
No comments:
Post a Comment