பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை சாஸ்திரங்கள்
✡ சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது.
✡ பெண்கள் பூசணிக்காயை உடைக்கக் கூடாது. அரிவாளாலோ, கத்தியினாலாவது முழுக்காயை உடைக்கலாகாது.
✡ கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக் கூடாது. உடைக்கும் அதிர்ச்சி நுண்ணலைகள் மூலம் கர்ப்பத்தைத் தாக்கும்.
✡ இரவில் வீட்டைப் பெருக்கலாகாது. பெருக்கினாலும் குப்பையை தெருவில் கொட்டக் கூடாது. பகலில் குப்பையை வீட்டினுள் ஓரிடத்தில் குவித்து வைக்கலாகாது. அப்படி மூலையில் குவித்து வைத்தால் நல்ல நாளில் எல்லோருடனும் கலந்து இருக்க முடியாமல் விலக்கிவிடும்.
✡ அதிகாலையில் எழுந்து சாணம் தெளித்து கோலம் போட வேண்டும். வேலைக்காரர்களை வைத்து கோலமிடக் கூடாது. அந்த வீட்டின் பெண்ணே இந்த வேலையை செய்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.
✡ உணவுக்கு இலை போடு முன் இலைக்குக் கீழே பசும் சாணி அல்லது வெறும் ஜலத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.
✡ கையால் அன்னத்தையோ காய்கறிகளையோ பரிமாறக் கூடாது.
✡ தன் கணவன் உத்தரவின் பேரில் தானதர்மம் மற்றும் விரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
✡ எந்தப் பொருளையும் இல்லை என்று கூறாமல் அந்தப் பொருள் வேண்டும். இந்தப் பொருள் வேண்டும், வாங்கி வாருங்கள் என்றே கூற வேண்டும்.
✡ எந்தக் குறையையும் எண்ணிக் கண்ணீர் விடக்கூடாது, அழுத வீட்டில் செல்வம் நிற்காது.
✡ வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போதும் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் போது எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.
✡ பிரதோஷ காலத்தில் அதாவது மாலை 6 மணியளவில் பெண்கள் வீட்டில் படுத்திருக்கக் கூடாது.
✡ அம்மி, உரல் மீது அமரக் கூடாது. வீட்டு வாசற்படியை மிதிக்கக் கூடாது.
✡ கஷ்டம் வரும்போது அசப்தங்களைக் கூறக்கூடாது.
✡ அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.
✡ மாலை நேரங்களில் தீபம் ஏற்றி நமஸ்கரிக்கும் பெண்மணிக்கு ஆசிகூறத் தேவர்கள் இல்லங்களுக்கு வருகின்றார்கள். எனவே தீபம் வைக்கும் நேரத்தில் பெண்கள் வேறு இடங்களுக்குச் செல்லக் கூடாது.
✡ பெண்கள் கையில் வளையல் அணியாமலும், தலையை விரித்துப் போட்டும் விளக்கேற்றக் கூடாது.
No comments:
Post a Comment