கிருத்திகை நட்சத்திரம்
27 நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இந்ந நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் ஆவார். கிருத்திகை நட்சத்திரத்தின் 1ஆம் பாதம் மேஷ ராசியிலும், 2,3 மற்றும் 4 ஆம் பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் அ, ஆ, இ, ஈ, உ, எ, ஆகியவை ஆகும்.
நட்சத்திரத்தின் பொது பலன்கள் :
ஆறுமுக கடவுளான முருகப்பெருமானும் இந்த கிருத்திகை நட்சத்திரத்தில் தான் பிறந்தார். கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு எந்த பாதிப்புமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல உடல் வலிமையும், புத்திசாலிதனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. இவர்களிடம் முன்கோபமும் அதிகமிருக்கும். ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர். கனவுலகத்தில் சஞ்சரிப்பதெல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய் மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்களாகவும், காரசாரமாக வாதிடுபவர்களாகவும் இருப்பார்கள்.
நட்சத்திரத்தின் திசை பலன்கள் :
✭ கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சூரிய திசை மொத்தம் 6 வருடங்கள் நடைபெறும். சூரிய திசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் பெற்றோருக்கு பல இன்னல்களும் உண்டாகும்.
✭ இரண்டாவது திசையாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வேறு ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும், சுப பார்வை சேர்க்கையுடன் சந்திரனிருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
✭ மூன்றாவது திசையாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். இவர்களுக்கு முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.
✭ நான்காவது திசையாக வரும் ராகு திசை 18 வருடங்கள் நடைபெறுவதால் இந்த காலத்தில் நல்ல யோகத்தையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஐந்தவதாக வரும் குரு திசை காலங்கள் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆறாவதாக வரும் சனி திசையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். கிருத்திகை நட்சத்திரத்தை மார்கழி மாதத்தில் இரவு உச்சி வானில் காணலாம்.
நட்சத்திரத்திற்கான வழிபாட்டு ஸ்தலங்கள் :
காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
மருதமலை முருகன் கோவில்
No comments:
Post a Comment