நீரிழிவு நோய்
(பகுதி 2)
சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் :
♣ நாம் உண்ணும் உணவைக் குறைந்தது 20 நிமிடமாவது மெதுவாகச் சுவைத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.
♣ உணவு உண்ணும்போது இடையில் தண்ணீர் அருந்தக் கூடாது. உணவும், தண்ணீரும் ஒன்றுசேர்ந்து நீண்ட நேரம் வயிற்றில் சுற்றிக்கொண்டே இருக்கும். விரைவில் செரிமானம் ஆகாது. இது சர்க்கரை நோய் வர மிக முக்கியமான காரணம். சாப்பிட்டு முடித்த கால் மணி நேரமோ அல்லது அரை மணி நேரமோ கழித்து 2 தம்ளர் வெந்நீர் மட்டும் குடித்துப் பழக வேண்டும்.
♣ காலை 9 மணி முதல் 11 மணிவரை மண்ணீரல் வேலை செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதுவும் சாப்பிடாமல், தண்ணீர்கூட குடிக்காமல் ஒரு விரதம் போன்று இருந்தோமானால் எப்படிப்பட்ட சர்க்கரை நோயும் விரைவில் கட்டுக்குள் வந்துவிடும்.
♣ மூளைக்கு வேலையா? உடலுக்கு வேலையா? என்று பார்க்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர் முன் குளிர் அறையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் உடலில் வியர்வை வரும்படி தினமும் 1 மணி நேரமாவது உழைக்க வேண்டும்.
♣ வாரத்திற்கு ஒருமுறை அரை தம்ளர் இஞ்சிச்சாறு குடிக்க வேண்டும். முழுக்க முழுக்க கால்சியம் உள்ள உணவு இஞ்சி. இஞ்சிச்சாறு குடித்து வரும்பொழுது எலும்பு, எலும்பு மஜ்ஜைகளுக்கு நல்ல பலம் தரும். நல்ல இரத்தத்தை உருவாக்கும். இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
♣ உற்சாகமின்மைக் கூட சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்து மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
♣ உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். பி.எம்.ஐ. அளவைக் கண்டறிந்து, அதன்படி உடல் எடை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
♣ பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் வந்த பின் செய்ய வேண்டியவை :
♣ சர்க்கரை நோய்க்கு தீர்வு இல்லை. ஆனால், வெற்றிகரமாக அதைக் கட்டுக்குள் வைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, கட்டுப்பாடுமிக்க உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மற்றும் டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நன்மை தரும்.
♣ உணவுக் கட்டுப்பாடு ஏன் அவசியம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாம் வழக்கமாகச் சாப்பிடும் உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்று தெரிந்துகொள்வது மிகமிக அவசியம். எவை எல்லாம் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்ற புரிதல் வேண்டும்.
♣ புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது.
♣ தினமும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும்.
- மேலும் சர்க்கரை நோய் பற்றிய தகவல்களை நாளை காண்போம்.
No comments:
Post a Comment