மங்கள் பாண்டே
பிறப்பு :
விடுதலைப் போராட்ட வீரர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர் மங்கள் பாண்டே. இவர் 1827 ஜூலை மாதம் 19 ஆம் தேதி உத்திரபிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டம், நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார்.
பணி :
இந்தியாவின் முதல் விடுதலைப் போரான சிப்பாய்க் கலகத்திற்குக் காரணமான மங்கள் பாண்டே, தனது 22வது வயதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவத்தில் இணைந்தார். இந்திய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவப் படையில் சிறப்புப் படையான 34வது பிரிவில் சிப்பாயாகப் பணிபுரிந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் மங்கள் பாண்டேயின் பங்கு :
மங்கள் பாண்டே அவர்கள் கல்கத்தாவின் பராக்பூர் நகரில் 1857 ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பில், கண்ணில் படும் ஆங்கிலேயர்கள் அனைவரையும், சுட்டுத் தள்ளுவேன் என்று சூளுரைத்து கையில் துப்பாக்கி ஏந்திச் சென்றார். அதே வேளையில் இந்தியச் சிப்பாய்கள் பலர் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்தனர்.
இந்த வி~யம் கிழக்கிந்திய கம்பெனியின் லெப்டினண்ட் போ என்பவனது காதுகளை எட்டியது. உடனே லெப்டினண்ட் போ சிப்பாய்களை அடக்க அவ்விடத்திற்குக் குதிரையில் விரைந்தான். துப்பாக்கியுடன் திரிந்த மங்கள் பாண்டேவைக் கண்டதும் லெப்டினண்ட் போ சுட ஆரம்பித்தார். இவர்கள் இருவருக்கு இடையேயான மோதலில், பாண்டே சிறை பிடிக்கப்பட்டார்.
சிறைப்பிடிக்கப்பட்ட மங்கள் பாண்டே, ராணுவ நீதிமன்றத்தின் முன்பாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். அவருடைய இந்த செயலுக்கு யார் தூண்டுதல், யார் யார் அவருக்குத் துணையாக இருந்தார்கள் என்று கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மங்கள் பாண்டே, தான் பிறந்த நாட்டைக் காப்பாற்றவும், தங்கள் கலாச்சாரங்களுக்கு அவமரியாதை நேரிடுவதை எதிர்த்தும் தான் இந்தப் போரில் ஈடுபட்டதாகக் கூறினார். மங்கள் பாண்டே மீதான குற்றத்தை விசாரனை செய்த கிழக்கிந்திய நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை அளித்தது
இறப்பு :
நம் பாரத புண்ணிய பூமியின் சுதந்திரப் போருக்கு ஒரு மங்கள் பாண்டே கிடைத்தார். இந்திய மண்ணில் கோடானக் கோடி பேர் பிறந்து வாழ்ந்து மறைந்தாலும் மங்கள் பாண்டே போன்ற மாவீரனின் பெயர் இன்றளவும் மக்கள் நெஞ்சங்களில் நிறைந்திருப்பதற்கு அவரது தேசபக்தியும், மகத்தான தியாகமுமே காரணம். அவ்வாறு இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட மாவீரர் அவர்கள் 1857 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்பட்டபோது மங்கள் பாண்டேவின் வயது 29 ஆகும்.
நினைவுகள் :
இந்திய அரசு மங்கள் பாண்டே அவர்களின் நினைவாக 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 5ல் அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது. The Riding என்ற திரைப்படம் மங்கள் பாண்டேயின் வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படமாக 2005 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
No comments:
Post a Comment