நீரிழிவு நோய்
(பகுதி 1)
இது தொற்றுநோயும் இல்லை, தொட்டால் ஒட்டிக்கொள்ளும் நோயும் இல்லை என்றாலும் உலகில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிற நோய்களில் முக்கிய இடம் இதற்கு உண்டு. உலகில் 20 கோடிப் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. இந்தியாவில் 7 கோடிப் பேருக்கும் தமிழ்நாட்டில் 90 லட்சம் பேருக்கும் இந்நோய் உள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. நீரிழிவு நோய் அதிகரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சர்க்கரை நோய் வருவது எதனால்?
♠ நாம் சாப்பிடும்போது, உணவை எரித்துச் சக்தியாக மாற்றுவதற்கான இன்சுலினை நம் உடலில் உள்ள கணையம் உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது. கணையம் பாதிக்கப்பட்டாலோ, இன்சுலின் குறைவாகச் சுரந்தாலோ அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ இந்நோய் வருகிறது.
♠ ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது, அதிக நேரம் படுக்கையில் படுத்து உறங்குதல், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, நீர்வாழ் உயிரினங்களை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்ளுதல், அடிக்கடி பால் சாப்பிடுதல், புதிய அரிசி, வெல்லத்தினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுதல், நேரத்துக்குச் சாப்பிடாதது, எந்தச் சத்துமில்லாத அரிசி, மைதா உள்ளிட்ட உணவையே முதன்மையாகக் கொண்டிருப்பது, போதிய உறக்கமின்மை, சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் நம் உடலில் குளிர்ச்சி, உடல்கனம், மந்தநிலை, ரத்தத்திலும், சதையிலும் கொழுப்பு, வழுவழுப்பு போன்ற குணங்கள் அதிகரிக்கின்றன.
♠ இதை வெளியேற்றுவதற்கான வழியை உடல் தேடுகிறது. சிறுநீரகம் இந்தக் குணங்களை இழுத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. இதனை தொடர்ந்து செய்யும் போது ரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரையின் அளவு மிகைப்பட்டு நீரிழிவு நோய்க்கு ஆளாகின்றோம்.
சர்க்கரை நோய் அறிகுறிகள் :
♠ சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம். ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
♠ அதிகமாகச் சிறுநீர் கழிப்பது, அதிகத் தாகம், அதிகப் பசி, உடல் சோர்வு, உடல் எடை குறைதல், மங்கலான பார்வை, கைகள் மரத்துப்போதல், சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள் போன்றவை மெதுவாகவே குணமாகுதல், சரும வறட்சி, வீக்கமடைந்த ஈறுகள் போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.
- மேலும் சர்க்கரை நோய் பற்றிய தகவல்களை நாளை காண்போம்.
No comments:
Post a Comment