மறந்து போன கோடைகால திரவ உணவுகள்
நம் பெரியோர்கள்nn கோடைக்கால சூட்டின் தாக்கத்தை குறைக்க ஆங்காங்கே கிடைக்கும் பல திரவ உணவுகளை தயாரித்து உண்டு வாழ்ந்தனர். ஆனால் இப்போது அதை மறந்து கடைகளில் விற்கும் கூல்ட்ரிங்க்ஸைத் தான் விரும்பி அருந்திகிறோம்.
கோடை வெப்பத்தை தவிர்க்க சில பயனுள்ள டிப்ஸ் :
♠ சத்தான கொழுப்பு அல்லாத உணவுகளை சாப்பிடுங்கள். திட உணவுகளை விட திர உணவுகளை எடுத்து கொண்டால் நல்லது.
♠ கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தின் சாறு பருகலாம். இது உடலுக்கு நல்லது.
♠ குளிர்பானத்தில் துளசி விதைகள் போட்டு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.
♠ உண்ணும் உணவில், சர்க்கரை இல்லாமல் சாப்பிடலாம். கடையில் விற்கும் ஜூஸை விட வீட்டில் பழங்களை வைத்து நாமே ஜூல் தயாரித்து சாப்பிடுவது நல்லது.
♠ எலுமிச்சை சாறு, தேங்காய் தண்ணீர் மற்றும் மெல்லிய மோர் குடிப்பதன் மூலம் வியர்வையை தவிர்க்க முடியும்.
♠ கஞ்சி, கூழ், இளநீர் என திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
♠ வழக்கமாக சாப்பிடும் சோறு, சாம்பார், ரசம், பொரியலுக்கு பதிலாக நீர்ச்சத்துள்ள காய், பழங்களின் சாறு ஆகியவை சாப்பிடுவது நல்லது.
♠ நாம் வெயிலில் சென்று வந்ததும் பிரிட்ஜில் உள்ள தண்ணீரை குடிக்கிறோம். அதற்கு பதிலாக மண்பானையில் தண்ணீர் ஊற்றி அதை பருகலாம்.
♠ நன்னாரி சர்பத் குடிக்கலாம். இது உடலின் நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும்.
♠ அந்த கால மக்கள் இயற்கையாக கிடைக்கும் சோளம், கம்பு, கேழ்வரகு இவற்றை பயன்படுத்தி கூழ், சோறு தயாரித்து உண்பார்கள்.
♠ கம்பங்கூழ், கேழ்வர கூழ் இவற்றுடன் மோர் சேர்த்து உண்பதால் நம் உடலின் வெப்பம் தணிந்து குளிர்ச்சி தரும்.
No comments:
Post a Comment