WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday 31 October 2014

பாரம்பரிய மருத்துவம் இந்த உடலானது அழிந்து விட்டால் உயிர் இருக்கும்


Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037

பாரம்பரிய சித்த மருத்துவம் தொகுதி
கற்பம் (அகம்) உள்ளடக்கம்
(1)முன்னுரை (2) நாயனாரின்சொல் (3) திருமூலர் சொல் (4) கருவூரார் சொல் (5) குமரி கற்பம் (6) ரோமரிஷி சொல் (7) அகத்தியர் சொல் (8) முடிவுரை

முன்னுரை

நாம் சென்ற தொகுதியில் கற்பம் என்பது பற்றி சித்தர்கள் புறப்பகுதியில் சொல்லிய கருத்துக்களைப் பார்த்தோம். இந்த பகுதியில் அகத்தில் கற்பம் உட்கொள்வது பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் என்பது பற்றியும் பார்ப்போம். இருவேறு கருத்துக்களையும் ஒப்பிட்டு நோக்கி சித்தர்களின் உண்மைக்  கருத்துக்களை நாம் அறியமுடியும். நீடகாலம் வாழவேண்டும் என்ற மனிதனின் தேடலே இவைகளுக்கு காரணம் அப்படியானால் அப்படி வாழ்ந்தவர்களை அல்லது அந்த நெறி முறைகளைக் கடைப் பிடித்து வாழ்ந்து வருபவர்களை நாம் இதுவரை கண்டதில்லை என்பதே உண்மை. புராணக் கதைகளில் மட்டுமே மார்க்கண்டேயர், அனுமான் போன்ற புராண மாந்தர்கள் சிரஞ்சீவி வாழ்நாள் பெற்றதாக படிக்கிறோமே தவிர மற்ற எவரையும் யாரும் கண்டதுமில்லை. சரி சித்தர்கள் இது பற்றி சொல்லியுள்ளார்களே அவர்களை இன்று யாராவது நாம்மில் பார்த்துள்ளனரா என்றால் அவர்கள் நம் கண்ணில் தெரியமட்டார்கள் அந்த விதியிருந்தால் அவர்கள் கண்ணுக்கு தெரிவார்கள் என்று விதிக்கட்டுப்பாட்டினையும், சிலர் அங்கு பார்த்தேன் இங்கு பார்த்தேன் என்று சொல்லுகிறார்கள் இதில் எதை நம்புவது ஆகவேதான் சித்தர்களின் சொற்க்களை கருத்துக்களை அவர்களின் நூல்களில் இருந்து பாப்போம்.

நாயனாரின் சொல்

விந்துவிட்டால் நாதமது கிட்டாதென்றே
வேறுபல விதமாகச் சொன்னார் சித்தர்
சிந்தைதன்னில் கற்பமுண்ணக் கலங்குகின்றார்
தெளிவாக கூறாத குற்றத்தாலே
நொந்து கெட்டார் ஞாலமதில் மாந்தர்கோடி
நுட்மது இன்னதென் றறியவில்லை
சிந்தைதன்னில் பெண்மயக்கம் கொண்டாலன்றே
சிதறிப்போம் காயமுடன் யோகசித்தி

இப்பாடலில் இவர் விந்தாகிய சுக்கிலம் வீனடிக்கப்பட்டால் நாதம் (ஒலி) கிடைக்காது போய்விடும் என்று பலவிதமாகச் சித்தர்கள் சொல்லி தெளிவாக சொல்லாமல் போய்விட்டனர் இதனால் மனதில் கற்பம் உண்ண மனிதர்கள் தயங்குகின்றனர். அதன் கருத்து என்ன என்றும் தெரியாது உள்ளனர் பெண்மேல் ஆசை கொண்டால் அதனால் சுக்கிலத்தை செலவழித்தால் நம் உடல் வலுவிழந்து யோகநிலையில் நிலைக்கவும் முடியாமல் போய்விடும். என்று ஒழுக்க நெறி முக்கியம் என்பது பற்றியும் சுகிலத்தின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

யோகசித்தி யாவதற்கு உலகத்துள்ளே
உத்தமனா யிருப்பார்க்கு அருளுன்டாகும்
மோகமுடன் மெய்ந்நாறும் யோநிகுள்ளே
மூழ்கினவர்க் காவதுதான் நரகமாகும்
வாகுடனே காயமது இருக்கவென்றார்
வரையாகக் கற்பமதை  யுண்ணவேண்டும்
வேகமுடன் வாலையவள் அருளும்வேண்டும்
வீணான உலகமத்தை மறக்கவேண்டும்

உலகத்தில் பெண் மேல் ஆசை கொண்டு உடலுறவில் ஆசைகொண்ட பேர்க்கு அதனால் உண்டாவது நரகம்தான் உலகில் நல்லவனாய் இருந்தால் யோகசித்தியும் அருளும் உண்டாகும். இதற்கு உடலை நிலைத்து நிற்க முறையாக கற்பம் உண்ண வேண்டும். வாலையவள் அருளும்வேண்டும். 
இனி அடுத்து ஞான வெட்டியான் 1500 பாடல் இதனைப் பார்ப்போம்


ஒலிவெளிமதி  தாண்டி சிவசிவா
ஒன்பது வாசலுங் கட்டறுத்து
தெளியவும் பொரி புலனும்
சிக்கருத்துச் சிந்தையகற்றி மனதொருப்படுத்தி
பொழியவும் மமிர்தரசம் பொசிக்கவின்பம்
பூசிக்கப் பூசிக்கப் ஞானம் பூரணமதாய்
சுழிதனிலெழுந்த தொறு வாசியென்னும்
சோதியைக் கண்டவனும் நான்கானும்
நம் உடலில் உள்ள ஒன்பது வாசல்கள் எனப்படும் கண், காது, மூக்கு, வாய், மலவாய், சிறுநீர் உறுப்பு, ஆகிய ஒன்பது ஓட்டைகளின் வழியாகவும் ஐம்பொறிகள் அதன் மூலமாக உண்டாகும் புலனுணர்வுகள் செயலை கட்டுப்படுத்தி  நம் மனமானது செல்லாமல் மனத்தை ஒரு நிலைப் படுத்தி வாசியோகம் செய்து அதனால் கிடைக்கும் அமிர்தமாகிய கற்பத்தை உட்கொள்ள விருப்பம். இவ்வழியாக ஞானம் பெற்று அதன் முலம் சோதியை கண்டவன் என்று சொல்கிறார். இதிலிருந்து வாசியோகம் செய்தால் மட்டுமே கற்பம் கிடைக்கும் என்று தெரிகிறது. இனி நாயனாரின் கருத்துக் ஒன்றுபட்டு திருமூலரின் கருத்தைப் பார்ப்போம். இவர் சித்தர்களின் முன்னோடி.

திருமூலரின் சொல்


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்தேனே

திருமந்திரம் 717
இந்த உடலானது அழிந்து விட்டால் உயிர் எதில் இருக்கும் அது அழிந்து விடும். இதனால் உண்மையான அறிவையும் அடைய முடியாது போய்விடும். அதனால். உடம்பு அவசியம் என்று கருதி அதனை பாதுகாத்தேன். இதற்கான வழியை நான் அறிந்துள்ளேன். அடுத்த பாடலில் இந்த உடல் நீண்டகாலம் இருக்க வேண்டிய

அவசியம் என்ன அது பற்றியும் சொல்கிறார்.
உடம்பினை முன்னம் அழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஒம்புகின்றேன்

முன்பு நான் இந்த உடல் பற்றிக் கவலைப் படாமல் இதனால் பிரயோசனம் இல்லை என்றும் கருதி இருந்து வந்தேன் பின் சிந்தித்ததில் இவுடல் இயக்கத்திற்கு காரணம் எதுவாக இருக்கும் என்று ஆலோசித்ததில் அதற்கான காரணப் பொருளை தெரிந்து கொண்டேன். அப்பொருள் இந்த உடலை வீடாக கொண்டுள்ளதையும் (வாழ்விடம்)  அந்த நல்லவன் வாழ்வதற்கு இந்த உடம்பை பாதுகாத்து அந்த உயிராகிய இயக்கு பொருளை பாது காக்கின்றேன்.  இனி கருவூராரின் சிலபாடல்களைப் பார்ப்போம்.

கருவூரார் சொல்

அமுதரச கற்பத்தை நீயறிந்தின்ன தென்றறிந்து
சமுத்தாய் வழலையுடன் இவைரெண்டுந் தான்சேர்த்தெடுத்திடுவாய்
இரசவாத கற்பமத்தை விடாமல் நாட்டமுடன் கொண்டாக்கால்
நிசமாய் மலஜலங்கள் பட்டயிடம் நிதிவேதை காணுமப்பா
அட்டலோகம் பேதிக்கும் வெகு ஆச்சரியமயிருக்கும்
திட்டமாய்த் தான்பழுக்கும் இது சிவனானைதப்பாது
என்குருவு போகநாதர் முன்னம் இனிமையுடன் சொன்னதிது
தன்மையுடன் சொன்னேனப்பா இனித்தவராமற் செய்திடுவாய்
தாரணை விடாமற் செய்தால் பின்பு சர்வமும்தான் பொன்னாகும்
பாரினிலே வெளியாக உனக்கு பண்பாகத் திறந்துவிட்டேன்

கருவூரார் வாதகாவியம்


அமுதமாகிய கற்பத்தை நீ சரியாகத் தெரிந்து அது இன்னது தான் என்று கண்டு சமர்த்தாக உட்கொள்வாய். இந்த இரசவாத கற்பத்தை விடாமல் விருப்பமுடன் உட்கொண்டால் எட்டு வித உலோகங்களும் மாறுபடும். உனது மலசலங்கள் பட்ட இடம் மாறி ஆச்சரியம் திடமாய் தங்கமாகும். இது சிவன் மேல் ஆணை. எனவே தவராமாமல் செய்திடுவாய் தாரணை தொடர்ந்து பார்த்தால் பின்பு எல்லாமே பொன்தான் இதை நான் மனம் திறந்து வெளியில் சொல்லிவிட்டேன்.

குமரி கற்பம்

அற்புதமதாக வொரு   மருந்து
அரைகிறேன் இன்னதென்று தெரிந்து கொள்ளும்
கற்பமொன்று விள்ளுகிறேன்   நல்ல
கற்றாழஞ்சோறேடுத்து விஸ்தாரமாய்
திரிகடுகு பொடிபன்னி   வெருகடி
தீர்க்கமுடன் கற்றாழஞ் சோற்றுடனே
பிராட்டியே தின்றுவரக்  காயம்
பிலக்குமப்பா நரைதிரை மாறும்

நான் இன்னும் ஒரு மருந்தாகிய கற்பம் சொல்கிறேன். அதை இன்ன தென்று தெரிந்து கொள்ளு சுக்கு, மிளகு, திப்பிலி இது மூன்றும் கலந்த மருந்து திகடுகு என்று அழைக்கப்படும் இந்த திகடுகு பொடி செய்து அதில் வெருகடி அளவு ஏழு தடவை கழுவி சுத்தம் செய்த கற்றாழைச் சோற்றுடன் கலந்து சாப்பிட்டுவர உடல் பலப்படும் நரை திரை மாறும்.

சித்தருக்குச் சித்தனப்பா பர
தேசியர்க்குப் பரதேசிகனாம்
ஞானிக்கு ஞானியப்பா  அஞ்
ஞானிக்குஞ் ஞானியாயத் தோனுப்பா
இல்லத்துக்கு இல்லன்னுமாய்க்  கோடிவய
திருப்பான் பதினாறு வயதுபோல்
இதுவொரு வருடங் கொண்டால்  இவனுக்
இப்பிறவி போகப் பிற்பிறவியில்லை

முன் கூறிய குமரி கற்பம் மருந்தை ஒருவருடம் கொண்டால் பிறவி போய்விடும் இவனுக்கு பிரவியில்லை பதினாறு வயது போல் இருப்பான் என்று சொல்கிறார்.

தேவலோகம் நாகலோகம்  முழுதும்
தேவனிவநென்றே செப்பலாகும்
நேராகவே தோன்றும்  மல
நீர் விட்ட இடங்களில் வர்ணம்பேதிக்கும்
அமிர்தம் ரசத்தைக் கட்டும்  அவன்
அவனியிர் பேர்பெற்ற சித்தனப்பா
தலை மேலிருக்கும் கற்பம்  அதற்கு
தான் சிறகுமுண்டு வாலுமுண்டு

மேற்கண்ட பாடலில் குமரிச் சாற்றில் திரிகடுகு பொடியைக் கலந்துகொண்டு சாப்பிட்டால் கற்பம் என்று சொல்லி வந்தவர் இந்தப் பாடலில் சிறிது மாறுபடுவதைக் கவனிக்கவும் தேவலோகம், நாகலோகம் எல்லாம் இவன் தேவன் இவன் என்று சொல்லுவார்கள். இவன் நீர் பட்ட இடங்களில் வர்ணம் உண்டாகும். ( தங்க நிறம் ) இவன் உலகில் பேர் பெற்ற சித்தனாவான் தலை மேல் இருக்கும் கற்பம் என்று சொல்கிறார். அப்படியானால் மனித தலைமேல் ஒரு கற்பம் உண்டா இதுவரை சொல்லிவந்த விபரங்கள் கற்பம் அல்ல என்று பொருள் படுகிறது. இனி அடுத்த பாடலை பார்ப்போம்.

சரத்திற்குங் காலுக்கும்
ஒன்றாய்மூடிபிறக்கும் போதடைத்தப்பா  இனிப்
பின்னிறந்து போகும்போது திறப்பதில்லை
அறைக்கத வுள்வாசல்  ஐந்தும்
அடைத்ததைத்திறந்தா லிருப்பார்கள்
சித்தரிஷ்கள் எல்லாம்  யோகத்திற்
திடங்கொண்டுஇருப்பார்கள்  கடம்போட்டுத்
தலைகீழாய் நின்று பார்பார் கழுத்து

பிறக்கும் போது அடைத்ததப்பா என்றால் என்ன  குழந்தைகளுக்கு பிறந்தவுடன் பார்த்தோமானால் தலையின் நடுப்பகுதியில் மண்டை ஓடானது நெருங்கி மூடாமல் இருக்கும் இதை அவ்விடத்தில் கைவைத்துப் பார்த்தால் தெரியும். பெரியவர்கள் இன்னும் உச்சிக்குழி மூடவில்லை என்று தெரிவிப்பதை பார்த்து இருப்பீர்கள். இக்குழியானது பின் சில வாரங்களில் மூடிவிடும். பின் இது நாம் இறக்கும் போதும் திறப்பது இல்லை இதையே மேற்கண்ட பாடலில் சொல்லியுள்ளார். அடுத்து யோகநிலையில் கடயோக முறையில் சிரசாசனம் செய்து நீண்டநேரம் நிற்பார்கள் என்கிறார். இனி இதே கருத்தை குதம்பைச் சித்தர் சொல்வதைப் பார்ப்போம்.

உச்சிக்கு மேற்சென்றுயர் வெளிகண்டோர்க்கு
இச்சிப்பிங்கேதுக்கடி  குதம்பாய்
இச்சிப்பிங்கேதுக்கடி

இந்த இடத்தில் யோகநிலையில் ஆதாரங்களின் வழியாக மனத்தை செலுத்தி தலை உச்சியில் உள்ள சஹாஸ்ராம் எனப்படும் ஆயிரம் இதழ் தாமரை யாகிய மூளையில் மனத்தை செலுத்தி சமாதி நிலையில் இருப்பவர்களுக்கு இவ் உலக வாழ்க்கையில் உள்ள இன்பங்கள் எதுக்கு என்று சொல்கிறார்.

இனி கருவூரார் வாதகாவியம் 700 பாடலினை தொடர்வோம்.


கண்ணிரண்டையுமூடிக்  கிடந்து
கலையமுதம் முத்திக் தில்லை என்று
பூதத்தைப் பின்னுங் காலுப்  பெருவிரலைப்
பொருந்தவே கட்டியதை மாறிப்பிடித்து
திட்டியினார் பார்ப்பார்  யோகத்
திருந்துமே நோக்குவாரிரவுபகல்
உற்பன கபாலவாசல்  திறக்க
ஒற்றைக்கால் தவசிருந்தொருகாலை
மேற்தூக்கிக் கழுத்துக்குள்ளே  அமுக்கிக்கை
விரைவாகப் பெருவிரலில் புமியிலூன்றி
தவமது செய்திருப்பார்  யோகங்கள்
தான்செய்திருந்திடனும் அமுதம் வரா
மண்டலம் ஆகாரம்  அருந்தாமல்
வத்தி வரண்டுமேனி யுலர்ந்திருப்பார்
சிரத்தில் வருமமுதம்  பின்னுஞ்
சீராய்க் கபால வழிவீழாது

சிலர் ஹடயோக பயிற்சி முறையில் கண்களை மூடிக் கொண்டும் ஒற்றைக் காலில் நின்றும் ஒருகாலை வளைத்து பிடறி மார்க்கம் கொண்டு சென்றும் கால் இரு பெருவிரல் கலை பின்னி பிடித்தும் பலவித ஆசனங்கள் போட்டு இருப்பார் உணவு அருந்தாமல் இருந்து வத்தி வரண்டு போவர். ஆனால் தலையில் இருந்து வரும் அமுதம் ஒழுங்காக வாராது.

இப்படிக் கொற்ற அமுதம்  உதிரத்தி
லிறங்கிடும் வகை யொன்று சொல்லுகிறேன்
ஆவின்நெய் சுத்தநெய்யாய்  காலரைக்கால்
அன்பாகப் பீங்கான்தனில்வைத்து
கரிப்பான் இனிங்கியுடன்  பிடிங்கிக்
கற்பமது கொள்ளுதற்கு நன்றாயரைத்துச்
தேங்க்காயளவுருட்டி  நெய்யுடன்
சீனிக்காரம் கொஞ்சமிட்டு அடுப்பேத்தி
மெழுகு பதத்திறக்கி  வடிகட்டி
வாய்பாகம் பீங்கனில் விட்டு நன்றாய்
வண்டுகட்டி வைத்துக் கொண்டு  சிவனை
மனதில் தியானித்துப் பத்தியதாய்ப்
உதயந்தனில் யெழுந்து  பருக
யுதிக்கமுன் காலககடன் முடித்து
யோகமது புரிந்து  எங்க
உமையாளை பிரதட்சணம் புரிந்து
மெழுகு பதத்திற்கு  வடிகட்டி
வியப்பாகப் பீங்கானில் விட்டு நன்றாய்
வண்டுகட்டி வைத்துக் கொண்டு  சிவனை
மனதில் தியானித்துப் பத்தியதாய்ப்
உதையந்தன்னிலெழுந்து  பருதி
யுதிக்குமுன் காலைக்கடன் முடித்து
யோகமது புரிந்து  எங்கள்
உமையாளை பிரதட்சனம் புரிந்து

அமுதமது இறங்குவதற்கு ஒரு வழி ஒன்று சொல்கிறேன். கரிசலாங்கண்ணி செடி பிடிங்கி வந்து அறைத்து ஒரு தேங்காய் அளவு உருட்டி காலேஅரைக்கால் படி நெய்யில் சிறிது சினிக்காரம் சேர்த்து கரிசலாங்கண்ணி உருட்டி வைத்து இருப்பதையும் சேர்த்து காய்ச்ச வேண்டும். இந்த நெய்யில் வலது கை பெருவிரலை தோய்த்து எடுத்து நம் வாயில் நாக்கின் அடியில் உள்ளே தடவிவர வேண்டும் மற்றும் அடுத்த பாடலில் சொல்கிறார் நெய் கச்சும்போது மெழுகு பதத்தில் காய்ச்ச வேண்டும் என்று சொல்கிறார். மெழுகு பதம் என்பது நெய்காய்ச்சும் போது நெய்யின் அடிவன்டலை சிறிது எடுத்து விரல்களுக்கு இடையில் வைத்து உருட்டினால் உருட்ட வரும் அதை அழுத்தினால் விரல் ரேகைகள் பதிவாகும் அந்த பதத்தில் அடுப்பை விட்டு இறக்கி விடவேண்டும். இவ்வாறு எடுத்துக் கொண்ட நெய்யினை வடிகட்டிக் கொண்டு ஒரு பீங்கானில் விட்டு பதனம் செய்யவேண்டும் அதை தூசு பூச்சிகள் விலாவண்ணம் துணியால் பீங்கான் வாயிற்கு துணியால் வேடுகட்டச் சொல்கிறார். இந்த நெயினை சூரிய உதயத்திற்கு முன் காலைக் கடன்களை முடித்து விட்டு தடவ வேண்டும்.


கற்பமதைஎடுத்து கிழக்கு முகம்
காட்டவே யிருந்துதிட்டமுடனே
பரமனை மந்திரத்தால்  தியானித்து
பண்பாகச் சிவசிவா வென்று சொல்லி
வலது கைபெருவிரலால்  அம்மையை
மந்திரத்தாற் செபித்து விந்தையுடனே
இடமது மேலவாசல்  கண்டு
இனிமையாய்த் தொட்டுவை நீவாசலினில்

சக்தியை வணங்கி கரிசாலை நெய்யை எடுத்து வலதுகை பெருவிரலால் நெய்யில் தோய்த்து வன்மையுடன் வாயினுள் உள்ள உள் நாக்கின் அருகில் உள்ள தமர் வாசலில் வலமாக சுற்றித் தடவவேண்டும்.

வலம்கொண்டு சுற்றிவர  ஆறுதடவை
வன்மையுடன் தொட்டுத் தொட்டு வாசலிலே
நலமுடன் தான் தடவிப்  பின்பு
நன்மையுடன் குகைவாசல் தன்னிலேதான்
தடவின பின்பு தானே  ஒரு
சாமாம் மட்டும் பட்டினியாயிருந்து
திட்டமுடன் அப்பாலே  பசிதீரத்
தீற்கமுடன் சாப்பிடலாம் உறவுடனே

இவ்வாறு வலமாக ஆறுதடவை உறுதிபட நெய்யைத் தொட்டுத் தடவி பின்பு மூன்று ( ஒரு சாமம் ) மணிநேரம் ஒன்றும் சாப்பிடாமல் இருந்து பின்பு பசிதீர நல்ல முறையில் உணவு சாப்பிடலாம். இனி காகபுசுண்டரின்இருபாடலைப் பார்த்து பின் இதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.


இருக்கலாம் செடிபூடு கற்பமில்லை
ஏகாந்த மானதொரு பிரமந்தன்னில்
உருக்கியே மனதடங்கிப் பார்க்கும் போது
உத்தமனே காயமது வுறுதியாச்சு
காக புசுண்டர் ஞானம் 80-பாடல் -58
எத்தியே திரியாமற் பிடரிமார்க்கம்
ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந்தானே

காக புசுண்டர் ஞானம்


இந்த இருபாடல்களையும் பார்த்தல் செடி பூண்டுகள்  எல்லாம் கற்பம் இல்லை தனிமையில் இருந்து மனத்தை ஒரு நிலையில் வைத்து பிரமம் தன்னில் பார்த்து இருந்தாலே உடல் வலுவாகி விடும். கண்டபடி திரியாமல் முதுகந்தண்டு வாகிய அடிப்பகுதியில் மூலாதாரம் எனப்படும் ஆதாரத்தின் வழியாக சுவாசத்தையும் மனதையும் செலுத்தி பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியுந்தான் கற்பமாகும். இனி ஞானக் கும்மியில் ஒரு பாடலைப் பார்ப்போம்.

நெல்லியிருக்குது காட்டுக்குள்ளே கரு
நெல்லியிருக்குது வீட்டுக்குள்ளே
கொள்ளி மலைக்குத் திரிந்தாலும் குரு
கொண்டு வருவாரோ ஞானப் பெண்ணே

கருநெல்லி என்பது ஒன்று உண்டு அதை உண்டால் நீண்டநாள் வாழலாம் என்ற நம்பிக்கை உண்டு ஆனால் இவர் சொல்கிறார் சாதரணமாக நெல்லி காட்டுக்குள் உள்ளது. ஆனால் கருநெல்லி என்பது நம் உடலாகிய வீட்டுக்குள் இருக்கும் போது கொள்ளி மலை சென்று காடு மேடு சுற்றித்திரிந்தாலும் கரு நெல்லியை கொண்டு வர முடியுமோ என்று சொல்கிறார். இந்த மேற்காட்டிய பாடல்களை எல்லாம் பார்க்கும் போது நிச்சயமாக புறத்தில் உள்ள பொருள்களில் கற்பம் என்பது இல்லை என்பதைப் புரிந்து கொள்ளாலாம் இன்னும் எண்ணற்ற பாடல்களில் சொல்லியுள்ளனர். இனி நாம் மீண்டும் கருவூராரின் பாடலுக்கு செல்லுவோம்.
பத்தியம் புகை புளியைத்  தள்ளிப்
பசுவின் மோர்விட்டுச் சாப்பிடலாம்
மத்தது ஆகாது  ஒரு
மனடலங் கழித்த பின் பத்தியமில்லை
கற்பமதைக் காலமேதான்  மண்டலங்
கணக்காக வலமாகத் தடவிவர
மேல்வாசல் திறக்குமப்பா  இன்னும்
வேண்டிய விதிகளுஞ் சொல்லுகிறேன்

மேற்கண்ட கற்பம் ஒரு மண்டலம் தடவிவர மேல் வாசல் தமர்த்திறக்கும் இக்காலத்தில் உணவு புகை புளியை நீக்கி பசுமோர் விட்டு சாப்பிட வேண்டும் வேறு கூடாது ஆனால் ஒரு மண்டலம் கழிந்த பின் மற்ற ஆகாரங்கள் சாப்பிடலாம்.

கால் மண்டலம் கழிந்தால்  தனியே
கதவு திறக்குமப்பா பூட்டுகள் விட்டுத்
திறந்து ஒருவாசல்  அமுதம்
சிந்தியேவரும் பின்பு நால்வாசலும்
ஒரு மண்டலந்தடவ  நாலு வாசல்
உடனே திறந்துவிடும் திடமுடனே
பொய்யல்ல மெய்யதுவும்  செய்திறந்து
புகழுடன் யாருக்குஞ் சொல்லாதே

மேல் வாசல் நான்கில் கால் மாண்டலம் சென்றபின் ஒருவாசல் ( ஓட்டை) திறக்கும் அமுதம் என்ற கற்பம் சிந்தும். அதன் பின்னும் தொடர்ந்து ஒருமனடலம் செய்து வர நான்கு வாசல்களும் திறந்து விடும் இது பொய்யல்ல உண்மையாகும். இதைசெய்தால் புகழுடன் வாழலாம்.

மண்டலமொன்று கொள்ள  இடையிலே
மறந்துவிடாதே சொன்னேன் திறந்தகதவு
உறைந்தங்கே யடையுமப்பா  தேவ
ரும்உம்பர்களாலுமிதை விள்ளப்போமோ
கதவு திறந்த பின்பு  நீயுங்
கட்டாய மாய்வூது திட்டமுடன்
இறவாமலே இருக்கக்  கற்பவகை
இயம்பினேன் திருமூலர் அருளாலே

இவ்வாறு ஒரு மண்டலம் யோகத்தை செய்து வரும் போது திறந்த அந்த (தமர்)  ஒட்டையானது மூடிக் கொள்ளும் இந்த சுவாசப் பயிற்சியின் போது மூலாதார தீ யானது பிரமரந்திரம் என்றும் கொடி மரம் என்றும் பலவித குறியீட்டுப் பெயர்களால் சுட்டிக் காட்டப்படும் நடு நாடியில் தீ உணர்வானது மூலாதரத்தின் வழியாக மேல் நோக்கி சென்று தாக்குவதால் மேற்கண்ட இடத்தில் புண்ணாகி இரத்தமாகிய ஊண் நீர் வடியும் இதனால் வடிந்த இரத்தமானது உறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இதற்ககாக இதானால் ஏற்படும் வலிகளைத் தாங்கிக் கொண்டு திடமாக மனத்தை லட்சியத்தில் வைத்து சுவாச பயிற்சியை செய்ய வேண்டும் அப்போது தான் இறவாமல் இருக்கமுடியும் இதை திருமூலர் அருளால் சொன்னேன்.


கொங்கணவர் கொண்டதோர் கற்பம்  இதனைக்
குவலையத்தோர்களும் அறியார்கள்
காசினியில்லுள்ள சித்தரும்  தெரிந்து
கற்பமது தடவியே விற்பனர்களாய்
இறவாமலிருந்து விட்டார்  கற்பத்தால்
இருந்தாரே கொடி ரிஷிகளுந்தான்
பேரு பெற்றார் இவர்கள்  வெகு
பிரபலமாயிருந்தார்கள் கிரிதனிலே

கொங்கனவர் உட்க்கொண்ட கற்பத்தை மற்றவர்கள் அறிய மாட்டார்கள். ஆனால் சித்தர்கள் தெரிந்து கொண்டு அவர்களும் கரிசாலை நெய்யை தடவி யோகம் செய்து கற்பமதை சாப்பிட்டு இறவாமல் இருந்தார்கள். (இந்த யோகக்கலையை நந்தியிடம் இருந்து திருமூலர், பதஞ்சலி, வியாக்கிரம பாதர், சனகர் என எட்டுப்பேர் யோகம், மருத்துவம் போன்ற கலைகளை பயின்றவர் ஆவர். இவர்கள் எண்மரும் கயிலாய வர்க்கம் என அழைக்கப்பட்டனர்.

கற்பம்தெரியாமல்  இந்தக்
காசினிதனிலே யோகி என்று
பெண்ணாசைதனில் விழுந்து  புவியிற்
பெரியோனெனவே பேரும்வைத்து
சடைமுடி தான்வளர்த்துக்  காவிகள்
தானனிந்து யோகதண்டும் பிடித்துக்
காதிற்குழை பூண்டு  விபூதியைக்
கணக்காக யுத்தளமாய்ப் பூசி

இவ்வாறு கற்பம் என்பது எது என்ன என்று தெரியாமல் இந்த உலகில் தங்களை பெரியயோகி என்றும் சொல்லிக் கொண்டு காதில் குழை எனப்படும் நகை அணிந்து உடலெல்லாம் விபுதி எனப்படும் சாம்பலை பூசிக்கொண்டு கையில் யோகதன்டம் ( யோகதண்டம் என்பது சுவாசப் பயிற்சியில் இடுபடுவோர் தங்கள் சுவாசமானது கலை மாறி வருமானால் (இடகலை,பிங்கலை) அதனை சரிசெய்ய பயன்படுத்தும் கருவியாகும் ) வைத்துக் கொண்டு ஆனால் மனதில் பெண்ணாசை கொண்டு காவியில் திரிவார்கள்.

உலகில் வயிர்வளர்த்து  இறந்து
உடனே பிணமாகிச் சடத்தை விட்டுப்
போனார்வெகு பேர்கள்  நல்ல
புத்தி கெட்ட மடையரின் பேச்சை நீ விட்டு
மாதர் மயக்கம் விட்டு  ஏறி
வல்லவர்கள் தன்மையமாய்ப் பரமனிடம்
நின்று பிறந்தாக்கால்   வெகு
நிச்சயமாகவே கற்பங்கொள்வார்
நடை முறை வாழ்வியலில் பார்த்தால் காவிகளைக் கட்டிக் கொண்டு உயிர்வளர்க்க அறிவுரைகள் சொல்லிக்கொண்டு தங்களை பெரியோனாக காட்டிக்கொண்டு திரிந்து இறந்து போவார்கள். இந்த புத்தி கெட்ட மடையரின் பேச்சை நீ கேட்காமல் பெண் மயக்கம் இல்லாமல் வாசியோகத்தில் ஏறி பரம்பொருளிடம் மனத்தை வைத்தால் நிச்சயமாக கற்பம் உட்க கொள்வார்கள்.


புத்திதான் மடையருக்குச்  சொன்னாற்
புத்திவருமோ வொருநாளும் வராது
ஆயிரத்துக் கொருவனுமாய்ப்  பிறந்து
அஞ்ஞானம் கடந்து மெய்ஞ்ஞானத்தை அடைவான்
சித்தராய்த் தானிருப்ப்பான்  ராச்சியத்திற்
செகஜாலனாயிருந்து உலகோர்க்கு
மருந்துகள் கொடுத்திடுவான்   உலகில்
வல்லசித்தனனென்று பேரும் பெறுவான்

இந்த புத்தி கெட்ட மடையருக்கு என்ன சொன்னாலும் புத்தி வருமோ ஒரு நாளும் வாராது. ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த கெட்ட அறிவு நீங்கி உண்மை அறிவு ஏற்பட்டு சித்தராய்த் தானிருப்பான். உலகில் வல்லவனாய் மக்களுக்கு மருந்துகள் கொடுத்து தொண்டுகள் செய்து நற்பேர் பெறுவான்.

இப்படியாய் எல்லோரும்  சித்தனா
இருந்தால் கையிலையிலிடமேது
என்று தான் ஈஸ்வரனார்  கற்பத்தை
இகத்தோர்களறியாமல் மறைத்து வைத்தார்
கற்பத்தையறியாமல்  வெகுபேர்
காலத்தை போக்கியே செத்தார்கள்
உரிவெண்ணைய் யறிவரோ  நல்ல
உற்பன கபாலமது கற்பமாமென்றே
சரியாய்த் தெரியாமல்  பேரின்ப வீட்டை
தானரியாமல்வன வாசங்களுற்று
மாறிவரும் வாசியைக் கொண்டே  யோகம்
வருந்தியே முடித்தார் பொருந்தியேதான்.

எல்லோரும் சித்தர்களாய் விட்டால் கைலாயத்தில் இடமிருக்காது என்று சிவன் கற்பம் தெரியாமல் இருக்கச் செய்து விட்டார். இதனால் வெகுபேர் சரியாக புரிந்து கொள்ளாமல் காலத்தை வீணாகச் செய்து கழித்து விட்டனர். நம் உடலிலேயே கற்பம் இருக்க இது அறியாமல் உரி வெண்ணை நம் வீட்டில் இருக்க நெய்க்கு தேடி அலைவது போல் அலைவார்கள். நமது கபாலமத்தில் இருக்கும் கற்பத்தை சரியாய் தெரியாமல் பேரின்ப வீட்டை தான் அறியாமல் காடுமேடுகள் சுற்றி நமது சுவாசமானது மாறிவருவதை அறிந்து முடிப்பார்கள் அறிவுடையோர். இனி இவர் பாடலுக்கு மற்ற சித்தர்களின் பாடலில் சொல்லியதைப் பார்ப்போம்.

ரோமரிஷி சொல்



செனித்திடாதிருக்கவல்லோ சித்தரெல்லாம்
செப்பினார் சாச்திரங்களனந்தங் கோடி
தனித்திடா மனதுவை ராக்கியத்தால்
சாதிக்க அநேக நாள் சமாதியுற்று
கனித்திடாக் கற்பங்களுண்டு கொண்டு
கருணை நிதிக் கடாச்சதால் சித்திபெற்று
பினித்துமே மனது வைராக்கியத்தால்
பெரியோர்கள் பதமிறைஞ்சிப் பிடித்துக் கேட்டே

உரோமரிஷி பரிபாசை 300


பிடித்துமே மன்தோர்மையாக நின்று
பேரான யோகியரைப் புத்திகேட்டு
மடித்துமே பென்னுறவு மயக்கந்தீர்ந்து
மாயமென்ற மாயமெல்லாம் அடித்துதள்ளி
நொடித்துமே பிரபஞ்ச செகசாலத்தே
நுணுக்கமாய்ச் கீழ்த்தள்ளி மாயையற்று
படித்ததுமே வேதாந்தக் கூட்டத்தோடு
பராபரத்தாய் பதமனைப் பத்தினரே

பாடல் -92

பத்தியே வஸ்த்து சுத்திப்பானம் பண்ணிப்
பாங்கான குண்டலியிலகரம் வைத்து
புத்தியாய் மேலேறி உன்மனையைத்தாண்டி
போக்கோடே தெருவீதி வலமாய்வந்து
அத்தி என்ற தத்துவமாங் குப்பை யெல்லாம்
ஆராஞ்சு அங்கங்கே யெல்லாங் கண்டு
சித்தி என்ற நடனவொளி செவியிற் கேட்டு
சிற்சபையில் குடியிருந்து சிறந்திட்டாரே

பாடல் 93

எண்ணற்ற நூல்கள் சித்தர்கள் பாடினார்கள் எதற்க்காக மீண்டும் பிறவாமல் இருப்பதற்க்காக. மனதில் வைராக்கியமும் நீண்டநாள் யோகநிலையில் சமாதியில் இருந்து கற்பம் உண்டு பரம்பொருளின் அன்பால் சித்திகள் பெற்று மனதில் நேர்மையாக இருக்கவேண்டும். பென்னுறவு, உலகியல் விருப்பங்கள் நீக்கி நல்ல கருத்துக்களை பேசும் அன்பர்களுடன் பழக்கம் வைத்துக் கொண்டு குண்டலியில் எந்நேரமும் மனத்தை வைத்து சுவாசத்தை அதன் வழியாக மேல் நோக்கி செலுத்த வேண்டும். இந்நிலையில் காதில் நாத வொலி கேட்டு அந்த சிற்சபையில் மனது வைத்து இருந்தவர் வெற்றி பெற்றனர்.



கண்டுபார் சர்வநோயெல்லாம் தீரும்
கணகமாந்தேகமது கற்பகாலம்
உண்டுவர காயசித்தி சித்தனாவாய்
ஒருவருக்கும் இக்கருவை யுரைக் கொன்னாது
விண்டுபார் தனக்குள் அவிழ்தமெல்லாம்
வீட்டில் வைத்து காட்டினிலே அலைகின்றார்கள்
பண்டுள்ள நோய் தீரஅவிழ்த மெங்கெ
பகற கற்பக் கருவெங்கே கண்டீரே

போகர் 700

அகத்தியர் சொல்
அகத்தியர் செந்தூரம் 300 என்னும் நூலில் இருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

பாரப்பா வாசியினால் போதமாகும்
பரிவான தீட்சையினால் சித்தியாகும்
காரப்பா சாபமெல்லாம் நிவர்த்தியாகும்
கற்பத்தில் முதல்கற்பம் அயக்காந்தம் கொள்ளு
சேரப்பா சித்தி பெற்று இதனாலே

பாடல் -22

பாரப்பா ஆடிகொடுத்து கற்பங்கொண்டு
பரிவாக உண்டுவரும் காலந்தன்னில்
சாரப்பா வாதமொடு பித்தத்தாலே
தணிந்த சிலேற்பனத்தாலே தாறுமாறாய்
சூழப்பா பாராமல் கற்பங்க்கொண்டு
அழன்று நீ அலையாதே நோய்கள்வரும் நேரம்
காரப்பா செந்தூரமிளகங்கள் தோருங்
கட்டாய்ச் செந்தூரித்துக் கடக்கவையே

பாடல் 29

வையப்பா கற்பங்கள் கொள்ளுமுன்பே
வகையான லேகியங்கள் சூரணங்கள்
செய்யப்பா கிருதமொடு தயிலம்
செய்துகொண்டு திஷ்ட்டியப்பா கருமத்தோடு
பொய்யப்பாவுரைப்ப தென்ன புத்திசொன்னேன்

பாடல் -42

அப்பனே கற்பத்தை யுறிதிபண்ணு
விகன்டமே வாராது விசமெல்லாம்போம்
வேனபடி கற்பத்தை திண்ணு திண்ணு
அகண்டமெல்லாம் நீயாச்சு மலைக்க வேண்டாம்
அப்பனே வழலை தள்ளிக் கடுக்காய் கொண்டு
இகம் பெறவே மூலி கற்பம் கொள்ளும்போது
இனியில்லா நோய்களெல்லாம் எதிர்க்கும் பாரே

 பாடல் 43
எதுத்து வருங் நோய்களெல்லாம் துரத்திவிட்டு
இகத்தை விட்டுப் பரத்துக்குள்ளாக பண்ணும்
மதிக்கவருங் கற்ப மெல்லாம் வளமாயேற்று
மனம் நினைவை யறிவோடே வளர்ந்தே யேறுந்
துதிப்பதற்கு நாதவொலி காதிற் கேட்டுக்
சொற்பெரியகுண்டலிக் குணந்திமீறங்

முடிவுரை

சித்தர்கள் ஒழுக்க நெறியோடு புத்த, சமண மதக் கருத்துக் களையும் நெறிகளையும் உள்வாங்கிக் கொண்டு அதனைத் தங்கள் வழியில் விக்கராக ஆராதனை போன்ற மூடநம்பிக்கைகளைச் சாடியும் மனித நேயம் எவ்வுயிரும் தன்னுயிர்போல் நினைத்தல் மண் ஆசை, பெண்ணாசை, பொருளாசை போன்ற செயல்களை விட்டு விலகி எல்லாவற்றிலும் தன்னைத் தானே பார்த்து தன்னில் ஒன்றியவர்கள். சித்தர்கள் கடவுள் என்ற வார்த்தையை அதிகம் பிரயோகிக்கவில்லை ஆனால் பரம்பொருள், பராபரை, பிர்மம், காராணன் என்ற வார்த்தைகளையும் சொல்லியே அதனுடன் கலத்தலே உன்னத நிலை உயரிய நிலை என்று கருதினர். இவ் உன்னத நிலையை அடையும் வரை இந்த உடல் அவசியம் என்று என்னினர். அகவே இந்த உடலை பாதுகாக்க அதற்க்கு மூலிகைகள் மருந்துகள் மூலம் உடலை வலுப்படுத்திக் கொண்டனர். உடலின் மனம் சார்ந்து உடல் உறுப்புக்கள் சார்ந்து உள்ள 36 தத்துவங்கள் அடங்கிய நிலைப்பாடுகளை நிலை நிறுத்தி தன்னில் இருந்து வரும் அமுத கற்பத்தை தினமும் உண்டு இயம, நியம ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வருவதே உண்மையான கற்பம் என்று சொல்கிறார்கள்.

 Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com