தமிழ் வருடம் : துன்முகி (துர்முகி)
துன்முகி வருடம் “துர்முகி” என்ற பெயர் தாங்கி வருகிறதே, அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை. “துர்முகி” என்றிருக்கிறதே என்ற அச்சமும் பலருக்கு உள்ளது !
சித்திரை மாதம் :
♣ தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.
♣ வான் மண்டலத்தை பன்னிரு இராசிகளாக பிரித்த நம் முன்னோர், அதில் முதல் இராசியான வருடையில் (மேஷத்தில்) சூரியன் நுழையும் நிகழ்வை புத்தாண்டாக கொண்டாடினார். வருடை என்பது ஒரு வகை வரையாடு. மேஷ இராசியை குறிப்பது. வருடையில் ஆண்டு பிறப்பதால் வருடப்பிறப்பு என்று அழைக்கப்படுகிறது.
♣ இராசிச் சக்கரத்தில் மேஷ இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும்.
♣ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியர்களால் பின்பற்றப்படும் சூரியசந்திர நாள்காட்டியின்படி ஒரு புது வருடத்தின் பிறப்பாக சித்திரை கருதப்படுகிறது.
துன்முகியின் சிறப்புகள் :
♣ சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை மாதத்தில் “துன்முகி வருடம்” பிறக்கிறது.
♣ ஒவ்வோரு தமிழ்ப்புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சமம் அடங்கியுள்ளது. “துர்முகி” புத்தாண்டின் பெயரில் தான் அப்படி என்ன சூட்சமம் உள்ளது என்பதைக் காண்போம்.
♣ துர்முக என்றால் குதிரை என்று அர்த்தம். துர்முகி தமிழ்ப்புத்தாண்டு முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுக்கிரனுக்கு அடுத்ததாக ஆதிக்கமும், அதிகாரமும் பெறுவது, கல்விக்கு அதிபதியான புதன் பகவான். புதனின் அதிதேவதை ஸ்ரீ ஹயக்ரீவர். இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஸ்ரீ ஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்குத் துணையிருந்து வழிகாட்ட இருப்பதால், ஸ்ரீ ஹயக்ரீவ பகவானின் பெண்ணாகிய இப்புத்தாண்டுக்கு “துர்முகி” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
♣ ஞானம், கல்வி, அறிவாற்றல், நினைவாற்றல், ஒழுக்கம், நேர்மை, ஆகியவற்றை அளிப்பவர் ஹயக்ரீவர். பரி (குதிரை) முகத்தைத் கொண்டுள்ள ஸ்ரீ ஹயக்ரீவரின் அனுக்ரகத்தை அள்ளித்தரப் போகும் ஆண்டாகத் திகழப் போவதை துர்முகி என்ற பெயர் சூட்சமமாக எடுத்துக்காட்டுகிறது
ஹயக்ரீவரின் ஸ்லோகம் :
“ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே”
இந்த ஸ்லோகத்தை கூறினால் தூய மென்மை வடிவம் கொண்ட ஹயக்ரீவர் நமக்கும் அறிவையும், ஆற்றலும் தந்து சிறந்த கல்வியினைக் கொடுப்பார்.
வாஸ்து தோஷம் விலக..!
வாஸ்து படம் ஒன்றை வாங்கி வீட்டின் சுவற்றில் மாட்டி வைக்கலாம். மணி பிளானட் அல்லது மூங்கில் செடியை ஹாலில் வைக்க வேண்டும். அல்லது சிரிக்கின்ற குபேர பொம்மையை வீட்டின் ஹாலில் உள்ள டிவியின் மீது வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment