WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Showing posts with label செவ்வாய் தோஷம் என்றால் என்ன.! திருமணத்திற்கு தடையா. Show all posts
Showing posts with label செவ்வாய் தோஷம் என்றால் என்ன.! திருமணத்திற்கு தடையா. Show all posts

Sunday, 26 January 2014

செவ்வாய் தோஷம் என்றால் என்ன.! திருமணத்திற்கு தடையா, இல்லையா.!!



 செவ்வாய் தோஷம் என்றால் என்ன.! திருமணத்திற்கு தடையா, இல்லையா.!!

கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம்.
ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என சோதிடம் கூறுகிறது.
லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும். அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் தெசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கணிக்கிறது.
2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.
இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.
மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும்.
குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.
சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
2 -ம்  இடம் மிதுனம், அல்லது கன்னி ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.   
4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரம் ஏற்படக்காரணம் என்ன  

7-ம் அதிபதி கெட்டு கெட்டவர்கள் வீட்டில் அமையப்பெற்றால் இருதார யோகம் உண்டு
7-ம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது
7-ம் இடத்தில் அசுபர் இருந்தாலோ இரண்டு அசுபர்கள் 2-ம் இடத்தில் அமைந்தாலோ
7-ம் அதிபதி 10-ல் அமையப் பெற்று ஆட்சி, உச்சம், நட்பு பெற்று 10-ம் அதிபதியால் பாக்கப்பட்டாலோ
11-ம் வீட்டில் இரண்டு வலிமையான கிரகங்கள் அமையப் பெற்று இருந்தாலோ
7-ம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து இருந்தாலோ அம்சத்தில் சேர்ந்து காணப்பட்டாலோ
7-ம் அதிபதி கெட்டு 11-ல் இரு கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலோ
7-ம் இடத்தில் சுக்கிரன், சனி இணைந்து காணப்பட்டாலோ
சுக்கிரன் இரட்டை ராசியில் அமையப்பெற்று அந்த வீட்டிற்கு அதிபதி உச்சம் பெற்று 7-ம் அதிப்தி ஆட்சி பெற்று இருந்தால் இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரங்கள் உண்டாகின்றது. 7-ம் இடத்தில் எத்தனை சுபகிரகங்கள் உண்டோ அத்தனை தாரங்கள் எனக் கொள்க.


விதவைப் பெண்
7-ம் இடத்தில் உள்ள செவ்வாய் சூரியன் சேர்கை பெற்றால் அவள் விதவையாவாள்.
மூன்று அசுபர்கள் 7-ம் இடத்தில் அமையப்பெற்றால் அந்தப் பெண் மாங்கல்ய பலம் இழந்து விடுவாள்.
8ம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது, போன்ற அசுபர்கள் அமையப்பெற்றாலும் விதவையாகி விடுவாள்.
7-ம் இடத்தில் சனி, செவ்வாய் போன்ற அசுபர்கள் இணைது இருதால் இளவயதில் மாங்கல்ய பலம் இழ்க்க நேரிடும்.

விவாகரத்து
மங்கையர்களின் ஜாதகத்தில் 7-ம், 8-ம் இடங்கள் கெட்டிருந்தாலும்
லக்கினாதிபதி7-ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும்
12-ம் இடத்தில் ராகு, 6-ம் இடத்தில் கேது அமையப் பெற்ற பெண்களும்
7-ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் விவாகரத்து அமையப் பெறும்
6-ம் வீடும், 7-ம் வீடும் தரும் களத்திர தோஷம்
திருமணம் என்றால் உடனே நினைவுக்கு வருவது 7-ம் வீடு தான்.  ஏனென்றால் அது களத்திர ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது.  7-ம் வீடு களத்திர ஸ்தானமென்றால் 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடான 6-ம் வீடு திருமண பந்தத்திற்கு எதிர்மறையான பலனைக் கொடுக்கும் வீடாகும்.  தம்பதியர்க்குள் கருத்து வேற்றுமை, பிரிவு, ஆகியவை களைக் கொடுக்கும்.  ஆகவே திருமணப் பொருத்தம் பார்க்கும்போதே 7-ம் வீடும், 6-ம் வீடும் சம்பந்தப்பட்டு இருக்கிறதா எனப் பார்த்து ஜாதகங்களைச் சேர்த்தல் நலம்.
வெறும் பத்துப் பொருத்தங்களை மட்டும் பார்த்து ஜாதகங்களை இணைப்பது அவ்வளவு நல்லது அல்ல; சிலர் தசப் பொருத்தம் மட்டும் பார்ப்பர்; சிலர் சமசப்தமம் இருந்தால் மட்டும் போதுமென்று ஜாதகங்களை இணைப்பர். சிலர் நட்சத்திர ஆதிக்க பலம் உள்ளவைகளான மிருகசீரிஷம், மகம்,சுவாதி, அனுஷம் ஆகிய 4 நட்சத்திரங்களுக்கும் தசப்பொருத்தம் தேவை இல்லை என்று ஜாதகங்களைச் சேர்ப்பார்கள். நாம் 6-ம் வீடும், 7-ம் வீடும் சமமந்தப் பட்டால் எவ்வாறு பாதிப்புக்களை, பாதகங்களை ஏற்படுத்துகின்றன என்று பார்ப்போம்.




உதாரண ஜாதகம் - 1 

 சூரி/
 சனி
 சுக்/
 ராகு
     11
     12
 புதன்
          ராசி
   /குரு
 சந்திர
 
     2

       6
      5
  செவ்/
கேது
      3









         2
 புதன்
       4
  சந்தி        
ல/ கேது
 
       அம்சம்
  குரு
சூரி 
   ராகு
11
செவ்/ சுக்
  சனி
         8








உதாரண ஜாதகம் எண் 1- ஐப் பாருங்கள்.
இது கடக லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ம் வீட்டில் சந்திரன். இது கஜகேஸ்வரி யோகம்.  ஆகவே மிகுந்த நல்ல பலனைக் கொடுக்கும் என்று கூறலாம். ஆனால் உண்மையில் அவ்வாறில்லை.  திருமணமாகி சில மாதங்கள் தான் கணவன், மனைவியாக வாழ்ந்தனர்.  அதற்குப் பின் பிரிவுதான். திரும்பவும் அவர்கள் சேரவே இல்லை.  இதற்குக் காரணம் என்ன  7-ம் வீட்டிற்கு குருவின் பார்வை. குரு பார்க்கக் கோடிப் புண்ணியம் அல்லவா என்று நீங்கள் கேட்க்கலாம். குருவின் பார்வை  நம்மையைச் செய்யவில்லை.
மாறாகத் தீமையைத்தான் செய்து இருக்கிறது. எப்படி குரு 6-ம் வீட்டிற்கு அதிபதியல்லவா 6-ம் வீடு 7-ம் வீட்டிற்கு எதிரிடையான பலனைக் கொடுக்க வேண்டுமல்லவா 7-ம் வீடு திருமணமென்றால் 6-ம் வீடு பிரிவினை அல்லவா ஆக குருவின் பார்வை திருமண வாழ்க்கையில் பிரிவினையைக் கொடுத்து விட்டது. அதைத் தவிர செவ்வாய் 7-ம் வீட்டை வேறு பார்க்கிறார். ஆக இருவரும் சண்டை போட்ட்டுக் கொண்டு பிரிந்து விட்டனர்.
உதாரண ஜாதகம் - 2
         2
 செவ்
     4
  சுக்/ ராகு   
ல/ குரு 
       ராசி
சூரி/
புதன்
    12
சந்தி    
கேது
    10
 சனி
    8










         2
 
 சனி/
  ராகு
        4
  சுக்கி   
  ல/
சூரிய 
       அம்சம்
   செவ்
       12

    7 

       11
      10
  குரு/
கேது
  புத்/
  சந்தி










இரண்டாம் ஜாதகத்தை பாருங்கள்.
இது கும்ப லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ல் சந்திரன். இதுவும் கஜகேஸ்வரி யோக ஜாதகம் தான். உடனே களத்திர ஸ்தானத்தில் கஜகேஸ்வரி யோகம் ஏற்படுவதால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தால் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.  7-ல் சந்திரன். அவர் யார் அவர் 6-ம் வீட்டின் அதிபதி. 6-ம் வீட்டின் அதிபதி 7-ல்; 7-ம் வீட்டின் அதிபதி சூரியன் 6-ல்; இரண்டு அதிபதிகளும் பரிவர்த்தனையாகி விட்டார்கள்.  இந்தப் பரிவர்த்தனை திருமண வாழ்க்கையை முற்றிலுமாகக் கெடுத்து விட்டது. 7-ம் வீடு, 6-ம் வீடும்  பரிவர்த்தனை யில் சம்மந்தப்பட்டு விட்டதால் திருமண வாழ்க்கை கசந்து, இவர் மனைவியுடன் வாழ்த நாட்கள் மாதங்கள் மூன்று மட்டுமே. சுமார் 60 வயது வரை வாழ்ந்த இவர்  தனிமையிலேயே தன் வாழ்நாட்களைக் கழித்தார். பார்த்தீர்களா 6-ம் வீடு செய்கின்ற கோலத்தை.
உதாரண ஜாதகம் -3
         6
 
       7
  சுகி/
  சனி
  சூரி  
         5 
       ராசி
 கேது/
செவ்/புத
        ராகு

சந்தி

       குரு
      2
   ல/
     12










         2
 
       3
        4
  சூரி/
  குரு  
ல/
 புதன் 
       அம்சம்
கேது/சனி
சந்தி
     ராகு

சுக்கி

      11
      செவ்
   9
     8











மூன்றாவது ஜாதகத்தைப் பாருங்கள்.
துலா லக்கின ஜாதகம்.  7-ம் வீட்டிற்குக் குருவின் பார்வை.  குரு 6-ம் வீட்டின் அதிபதியல்லவா  6-ம் வீட்டின் அதிபதியாகி 7-ம் இடத்தைப் பார்ப்பதால் திருமண பந்தம் Divorce வரை சென்று விட்டது.  ஆம். திருமணபந்தம் விலகி இருவரும் விவாக ரத்துச் செய்து விட்டனர்.

உதாரண ஜாதகம் - 4

        6
 
  சனி/
  புதன்
  சூரி/
  செவ்
  சுக்கி
  ராகு 
       ராசி
 10
     4
 கேது

            3
      2
  ல/
கு/சந்
     12









         11
 
       12
    ல/
        2
  சூரி/ராகு
       அம்சம்
     3
         9

   கேது  

          8
  குரு
புத/சு
சனி/சந்
     செவ்









நான்காவது ஜாதகத்தைப் பாருங்கள்.
இதுவும் துலா லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ம் வீட்டிற்கு 6-ம் வீட்டிற்குடைய குருவின் பார்வை.  இத்துடன் 7-ல் சனி வேறு.  திருமணமாகி 3-மாதங்கள் சேர்ந்து இருந்தனர்.  பின்பு சண்டையிடுக் கொண்டு அந்தப் பெண் தாய் வீட்டில் தஞ்சமடைந்து விட்டாள்.  திருமணமாகி ஒன்றறை ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. அதில் 3 மாதங்கள்தான் சேர்ந்து இருந்தனர். இன்னும் சேர வில்லை.  பார்த்தீர்களா 6-ம் வீட்ட்டதிபர்  7-ம் வீட்டைப் பார்த்ததினால் விளைந்த விபரீதத்தை. சரி! இவர் மனைவியின் ஜாதகத்தைப் பார்ப்போமா
 உதாரண ஜாதகம் - 5
    புதன்  
 சூரி/
  சந்   
  ல/ சனி
செவ்/சுக்
      2
       10
       அம்சம்
 கேது
ராகு
     4  
குரு      
       7
        6
         5








   ராகு    
 சூ/ சனி  
ல/
சந் சுக்
       செவ
       10
       அம்சம்
    3
         9
 குரு    
8    
7
புத    
கேது









ஐந்தாம் ஜாதகதைப் பாருங்கள்
இவர் ரிஷப லக்கினம்.  லக்கினத்தில் செவ்வாய், சனி, சுக்கிரன்.  மூவரும் 7-ம் இடத்தைப் பார்க்கிறார்கள்.  செவ்வாய், சனி இரண்டும் இயற்கையிலேயே அசுப கிரகங்கள்.  லக்கினத்தில் இருப்பதால் இவரின் குணம் கெட்டு விட்டது. செவ்வாய் இருப்பதால் முரட்டு சுபாவம் உள்ளவராகவும், சனி இருப்பதனால் மிகத் தாழ்ந்த சுபாவம் உள்ளவராகவும்  இருக்கின்றார். இவர் தன் கணவருடன் சேராததற்குக் காரணம் இவர் சுபாவமே. தன் கணவன், தன் தாயார், தந்தையரை விட்டு தன்னுடன் வர வேண்டுமென்பது இவரது வாதம். இவர்கள் பிரிந்து வாழ்வதற்கு இதுதான் காரணம். செவ்வாய், சனி இருப்பதுடன் லக்கினத்தில் சுக்கிரனும் இருக்கிறார்.  சுக்கிரன் யார் சுக்கிரன் 6-ம் வீட்டிற்கு அதிபதி. 6-ம் வீட்டின் அதிபதி லக்கினத்தில் இருந்து 7-ம் வீட்டைப் பார்ப்பதனால் அவர்களுக்குள் பிரிவு ஏற்படக் காரணமாயிற்று.  சுக்கிரன் ஓர் அழகிய கிரகமல்லவா அவர் லக்கினத்தில் இருப்பதனால் அவருக்கு அழகிய உருவ அமைப்பை சுக்கிரன் கொடுத்து விட்டார். ஆனால் அதே சுக்கிரன் 6-ம் வீட்டு அதிபதியாகி 7-ம் வீட்டைப் பார்த்ததினால் பிரிவையும் உண்டாக்கி விட்டார்.

பொதுவாக ஜாதகங்களைச் சேர்க்கும்போது 10-ப் பொருத்தங்களை மட்டும் பார்க்காது 7-ம் வீடு பாதிக்கப் பட்டு இருக்கிறதா என்று பார்த்துச் சேர்ப்பது நல்லது.  அதே போன்று சந்திரனுக்கு செவ்வாய், சனி, ராகு போன்ற தீய கிரகங்கள் சேர்க்கை இல்லாது பார்த்துச் சேர்ப்பது நல்லது. இவர்கள் சேர்க்கை இருப்பின் அந்த ஜாதகத்தை ஒதுக்கிவிடவும்.