WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Showing posts with label கர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் -அகத்தியர்.. Show all posts
Showing posts with label கர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் -அகத்தியர்.. Show all posts

Thursday, 5 May 2016

கர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் -அகத்தியர்.



கர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் -அகத்தியர்.

 விதியைப் பற்றியும், கர்மவினை பற்றியும்
உலகம் முழுவதும் பரவலான நம்பிக்கை
மக்களிடையே இருந்து வருகின்றது.''

இதில் நோய்கள் தோன்றுவதே கர்மவினையால்
தான் என்ற கருத்தை பொதுவாக இன்றைய
ஹோமியோபதி மருத்துவம் தவிர எந்த ஒரு
மருத்துவ முறைகளிலும் ஏற்றுக்
கொள்வதில்லை.
அதே சமயம் சித்தமருத்துவ முறையிலும்
இதனை ஆதாரங்களுடன் விளக்குகின்றது.

சித்தர் அகத்தியர் பெருமான் இயற்றிய பல
லட்சம் பாடல்களில்
"அகத்தியர் கன்ம காண்டம் -300" என்ற சிறப்பு
வாய்ந்த நூலில் எந்த வித கர்ம வினையினால்
என்னென்ன நோய்கள் தோன்றும் என
மிகத்தெளிவாக விளக்கமளிக்கின்றார்.
ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பிக்
கொடுக்காத பாபத்தால் "ஈளை நோய்" வரும்.

[ ஈளை, இளைப்பு, ஆஸ்த்மா ]
பசுமையாய் வளர்ந்த இளம் செடி,கொடிகளை
வெட்டுவதும்,சிறு பூச்சிகளின் கை,
கால்களை வெட்டினால் "வாதநோய் -
பக்கவாதம்" வரும்.

பிறர் குடியை கெடுத்தல்,நல்லோர் மனதை
நோகச் செய்தல், பிறர் பசியில் இருக்க அவர்
பார்வையில் தான் உணவு உண்டால் வரும்
நோய் "குன்மநோய் எட்டு" அதாவது அல்சர்,
குடற் புண்
,இதில் எட்டு வகை நோய் வரும்.[இன்று
ஏராளமான பேருக்கு இந்நோய் உள்ளது]
மலராத அரும்பு பூக்களை கொய்தல்,
நந்தவனம் அழித்தல், பெற்றோர் மனம் நோகச்
செய்தல் இதனால் "குஷ்ட நோய்" வரும்.

ஊர்ந்து செல்லும் சிறு விலங்குகள்,பறவைகள்
போன்றவைகளைக் கொன்றால் வரும் நோய்
"வலிப்பு நோய்" ஆகும்.

பிஞ்சு காய்கறிகள், இலை தழை
பறித்தல்,பட்டை வெட்டுதல்,வேர் மற்றும்
கொடிகள் வெட்டுவதால் பீனிசம்,[சைனஸ்]
,"ஒற்றைத் தலை வலி, மண்டைக்குத்து,
மண்டைக் கரப்பான்" போன்ற நோய்கள் வரும்.

இளம் பயிரை அழித்தல், விந்து அழித்தல்,
கன்றுக்குரிய பாலைக் குடித்தல்,இதனால்
"குழந்தையின்மை" குழந்தை பிறக்காது.

வீண் வம்பு பேசுதல், பிறரைப் பழித்தல், பொய்
பேசல், ஆங்காரம் , ஆணவம் போன்ற வற்றால்
"சோகை ,பாண்டு" [இரத்த சோகை, கல்லீரல்
மண்ணீரல் வீக்கம்] நோய் வரும்.

உயிர்களை வதைத்தல்,ஊன் தின்னல், நன்
மங்கையரைக் கற்பழித்தல், பிறர் செய்யும்
புண்ணிய காரியங்களைக் கெடுத்தல்,
குடிநீரைக் கெடுத்தல் போன்றவற்றால்
"கிராணி, கழிச்சல்",[சீத பேதி] நோய் வரும்.

பொய் மிக பேசல், பிறரை திட்டுதல், வஞ்சகம்
பேசுதல்,கொடுத்த வாக்கை மறுத்தல்,
விஷமிடல் போன்றவற்றால் "கண், கன்னம்,
வாய்" பல் போன்றவற்றில் பல வகை நோய்
வரும்.

சற்குருவை தூற்றுதல், வழியிலே முள்ளிட்டு
வைத்தல் இவற்றால் "வண்டுகடி, ஊறல்,
கரப்பான்" நோய் வரும்.

வெடி வைத்தல், கல்லெறிதல், சிவ யோகிக்கு
சினம் உண்டாக்குதல் இதனால் பிளவை எனும்
"இராஜபிளவை" முதுகு தண்டில் வரும்.
பெண்களை மோகக்கண் கொண்டு, காம
எண்ணத்துடன் உற்றுப் பார்த்தல்,கோழி ,ஆடு
போன்றவற்றை வெட்டும் போது பார்த்தல்,
ஆலயம் செல்ல விரும்பாமை,தெய்வ நிந்தனை
போன்றவற்றால் "கண்நோய் 96" - வகைகள்
தோன்றும்.

 வைத்திய தர்மம் - அகத்தியர் !!

அரசரென்றால் பொருள் கொடுத்து
நோய்தீர்த்து கொள்வாரதனலே யுந்தனக்குத்
தருமமில்லை
நீசனென்ற எளியோர்க்கு வயித்தியஞ் செய்ய
நிலையாத தருமமது நிலைக்குமென்று
பிரியமுடனென்குரு வேதியர்தான் சொன்னார்
பிள்ளையென்று புலத்தியனே
யுனக்குச்சொன்னேன்
பரிசனமாய் மனதில்வைத்தால் முத்தி சேர்வாய்
பாலகனே யிதைமறந்தால் பலித்திடாதே,

பலித்திடவேணுமென்றால் புலத்தியனே ஐயா
பாரிலுள்ள வுயிரெல்லாந் தன்னுயிர்
போலெண்ணி
சலித்திடாயொரு போதுந் தருமஞ் செய்ய
சந்தையங்கள் செய்யாதே சதிசெய்யாதே
சலித்திடவே கருமத்தால் பிறவிகிட்டுந்
தருமத்தால் சாயுச்ய பதவிகிட்டும்
சலித்திடாய் சற்குருவை யடுத்துக்காரு
சதாகாலஞ் சதாசிவனைப் போற்றிப்பாரே.
-அகத்தியர் பரிபூரணம் 400

பொருள்:
நாட்டை ஆளும் அரசன் என்றால் எவ்வளவு
பொன்,பொருள்
கொடுத்தும் தன் நோயை தீர்த்துக்கொள்வான்,
அப்படி நீ அவர்களிடம் நிறைய பொருள்
வாங்கிக்கொண்டு
வயித்தியம் செய்வதால் உனக்கு தருமம்
உண்டாகாது.

வறுமையில் வாழும் ஏழை, எளியோர்க்காக
சேவை
அடிப்படையில் பணம் வாங்காமலும் அல்லது
குறைந்த
அளவில் பணத்தை பெற்றுக்கொண்டும் நீ
செய்யும்
வயித்தியத்தில்தான் உனக்கு தருமம்
உண்டாகும்.

அத்தர்மம்தான் நிலைத்து நிற்கும் என
வேதநாயகனான
என் குரு(சதாசிவன்)தான் இதை எனக்கு
சொன்னார்.

என் பிள்ளைபோல் நினைத்து புலத்தியனே
உனக்கு
இதை சொல்கிறேன், அக்கறையோடு இதை
மனதில் வைத்து
செயல்பட்டால் முத்தி நிலையை அடைவாய்
இதை மறந்தால் நீ செய்யும் வயித்தியங்கள்
பலிக்காமல்
போய்விடும்.

நீ செய்யும் வயித்தியங்கள் பலிக்க
வேண்டுமென்றால்
உலகிலுள்ள உயிர்களையெல்லாம்
தன்னுயிர் போல எண்ணி தர்மம் செய்வதற்கு
ஒரு போதும் சலித்துக்கொள்ளாமல் செயல்பட
வேண்டும்.

பணத்திற்க்காக வயித்தியம் செய்யாதே,
ஏழைகளிடம்
பேரம் பேசாதே, யாருக்கும் சதி(கெடுதல்)
செய்யாதே,
அப்படி செய்தால் நீ செய்யும் கர்மவினையால்
மிண்டும், மீண்டும்
பிறவிகளை எடுத்துக்கொண்டே இருப்பாய்.

தர்ம சிந்தனையுடன் எப்போதும் தர்மம்
செய்வாயானால்
பிறப்பு, இறப்பற்ற மோட்ச நிலை உண்டாகும்,
பரலோக பதவி
கிடைக்கும்.எனவே எப்பொழுதும் தர்ம
சிந்தனையோடு
தன் குருவை மனதால் நினைத்து வணங்கி
விட்டு மருந்தை
செய்யவும். மருந்தை செய்து முடித்ததும்
இம்மருந்தை
உண்பவர் பூரண குணம்
பெறவேண்டுமெனவும்,
தனது வயித்தியம் பலித்திட
வேண்டுமெனவும்
சதாசிவனை நினைத்து பூசை செய்து பின்னர்
மருந்தினை
உன்னை நாடி வருவோர்க்கு வழங்க வேண்டும்
என்கிறார் அகத்தியர்.

 பாவங்கள் விலக மந்திரம்-அகத்தியர் !!

மனிதனாக பிறந்த நாம் அறிந்து
அறியாமலும் நித்தம் பல
பாவங்களை செய்து கொண்டுதான்
இருக்கிறோம். அதன் பயனாய்
வறுமை, உடல் நலக்குறைவு,
காரியத்தடை, தீராத கவலை என
எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம்.

அப்படி நம்மை பாடாய்படுத்தும் அந்த
பாவங்களை களைய வழியே இல்லையா?,
செய்த பாவங்களுக்கு பிரயாசித்தம்தான் என்ன?

இனியாவது மனம் திருந்தி நல்வழியில்
வாழ்ந்து மோட்ச நிலையை
அடையமுடியாதா? என ஏங்குவோரும் நம்
முன்னோர்கள் செய்த பாவங்களால் பிள்ளை
இல்லாமல் போவது, குடும்பம் வறுமையிலே
இருப்பது, அனைத்திலும் தோல்வி உண்டாதல்,
தீராத நோய்க்கு ஆட்படுதல் கை,கால்
ஊனமாதல், மூளை வளர்ச்சி இன்மை, அற்ப
ஆயுளில் மரணம் ஏற்படுதல் போன்ற
பாவவினைகளை அனுபவிப்பவர்களும்
இனியாவது மனசுத்தியோடு நீண்டகாலம்
நிம்மதியாக வாழ்ந்து மோட்ச நிலையை
அடைய இப்பதிவு ஒரு விளக்கின் ஒளி போல
உங்களுக்கு வழிகாட்டடும்.

பாவங்கள் விலக மந்திரம்-அகத்தியர்

காணவே யின்னமொரு சூட்சங்ககேளு
கருணையுட னுலத்தோடிருக்கும்போது
பூணவே கண்ணாரக் கண்டபாவம்
புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்
பேணவே காதாரக் கேட்டபாவம்
பெண்வதைகள் கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக் கொன்றபாவம்
ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே.

காரப்பா கருணைவிழி மனக்கண்ணாலே
காலறிந்து யோகமதால் அங்லங்கென்று
நேரப்பா நிலையறிந்து நிலையில்நின்று
நீ மகனே நூற்றெட்டு உருவேசெய்தால்
வீரப்பா கொண்டுயிரைக் கொண்டபாவம்
வெகுகோடி பாவமெல்லாம் விலகுந்தானே.
-அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:
உங்களின் பாவங்கள் நீங்க ஒரு சூட்சமத்தை
சொல்கிறேன்
கேளுங்கள், நீங்கள் கருணை உள்ளம்
கொண்டவராக இருந்தாலும்
யாருக்கும் எந்த பாவமும் செய்யாதிருந்த.                      
போதிலும் உங்கள்
வாழ்வில் பாவங்கள் சேர்ந்துகொண்டுதான்
இருக்கிறது.

அது எப்படி என்றால் ஒருவன் செய்யும்
பாவச்செயலை கண்டும்
அதை தடுக்காமல் போவதும்( கண்ணாரக்
கண்டபாவம்),
தீய சொற்களையும், தீயவர்களின்
வஞ்சகப்பேச்சுகளை,
அவச்சொற்களை கேட்பது(காதாரக்
கேட்டபாவம்)
உங்கள் மனமகிழ்ச்சிக்காக பிறரை
துன்புறுத்துவது(மனதாரச் செய்தபாவம்)
பெண்களை
கொடுமைப்படுத்து, பசுக்களை
துன்புறுத்துவது ஓரறிவு முதல்
ஆரறிவு வரையிலான உயிர்களை கொன்ற
பாவங்கள் உங்களின்
முன்னோர்கள் செய்த பாவமென எத்தனை
கோடிப்பாவங்கள்
இருந்தாலும் அவைகள் நீங்க ஒரு சூட்சம
மந்திரத்தைசொல்கிறேன் கேளுங்கள்.

உடல் சுத்தியுடன் சுத்தமான இடத்தில்
மான்தோல் விரித்து
(இன்றைய நிலையில் அது சாத்தியம் இல்லை
என்பதால் அதற்கு
நிகர் கம்பளியை விரித்து வடமேற்கு திசை
நோக்கி அமர்ந்துகொண்டு
மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக
இழுத்து அடக்கிக்கொண்டு
மனஓர்நிலையோடு மனதினுள் "ஓம் அங் லங்"
என்ற மந்திரத்தை
108 -உரு செபிக்க வேண்டும். இப்படி
செபிப்பதால் உயிரைக்கொன்ற
பாவம் முதல் எப்படிப்பட்ட
கொடியபாவங்களும் விலகி விடும்
என்கிறார் அகத்திய மாமுனிவர்.