1-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..!
உதிரத்தை உழைப்பாக்கி.!
உலகத்தை உயர்த்திடும்..!
உண்மையான தொழிலாளியை உள்ளத்தால் வணங்குவோம்..!
அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..!
தொழிலாளர் தினம்
தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் உலக முழுக்க உள்ள உழைத்த தொழிலாளர்களுக்கு உயரிய நாள். காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தொழிலாளர் அமைப்புகள் தொடர் போராட்டங்களை மேற்க்கொண்டது.
தொழிலாளர் கூட்டத்தின் முதல் உரிமைக்குரல் 1806 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒலித்தது. அதுவரை நடைமுறையில் இருந்த 15 முதல் 20 மணி நேர வரையிலான அசுரத்தனமான உடல் உழைப்பை எதிர்த்து 10 மணி நேரம் வேலை கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
1856 இல் தொளிலாளர் வர்க்கத்தின் தொடர் போராட்டத்தின் பயனாக மே 1 ஆம் தேதி அதற்காக விடியல் கண்டது. 8 மணி நேர வேலை, 8 மணி நேர மன மகிழ்வு, 8 மணி நேர உறக்கம் என வகுக்கப்பட்டது. இப்புரட்சியின் நினைவாக மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
பின்னணிப் பாடகர் மன்னா டே
இந்தியத் திரையுலகின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான மன்னா டே 1919 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பாரம்பரியம் மிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதில் குத்துச் சண்டையில் சிறந்து விளங்கிய இவருக்கு இசையில் ஆர்வம் பிறந்தது. கல்லூரிகளுக்கு இடையேயான பல இசைப் போட்டிகளில் முதல் பரிசுகளை வென்றார்.
சச்சின் தேவ் பர்மனிடமும், பின்னர் மற்ற இசையமைப்பாளர்களிடமும் உதவியாளராக பணிபுரிந்தார். செம்மீன் திரைப்படத்தில் 'மானச மைனே வரூ" என்ற பாடல் மூலம் தென்னிந்திய திரையிலகில் பிரபலமானார். கவாலி, இந்துஸ்தானி சங்கீதம், மெல்லிசை, துள்ளலிசை என அனைத்து பாணி இசையிலும் தனது தனி முத்திரையைப் பதித்தவர். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை இரண்டு முறை வென்றுள்ளார்.
60 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த இவரது இசைப் பயணத்தில் இந்தி, வங்காளம், மராட்டி, கன்னடம் உள்ளிட்ட 16 மொழிகளில் 4000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூ~ண், தாதாசாகேப் பால்கே விருது என பல விருதுகளையும் பெற்றுள்ளார். பாடல்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம்பெற்றுள்ள மன்னா டே, 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தனது 94வது வயதில் காலமானார்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் இந்திய பொதுவுடமை கட்சியின் தலைவருமான பி. சுந்தரய்யா அவர்கள்
1913 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி பிறந்தார்.
தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகரான அஜித் குமார் 1971 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி பிறந்தார்.
இராமகிருஷ்ணா மிஷன்
1897ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது.
No comments:
Post a Comment