புங்கை மரம்
புங்க மரம் :
ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். அதிக நிழலை தரக்கூடியது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று. வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான வெப்ப நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.
தட்ப வெப்பநிலை மற்றும் வளரிடம் :
எந்தப் பகுதியிலும், எத்தகைய வெப்ப நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும், மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
அமைப்பு :
இது பெரிய மர வகுப்பைச் சேர்ந்தது. சுமார் 18மீ உயரம் வரை வளரும். சமவெளிகளிலும் 3000 அடி உயரமான இடங்கள் வரையிலும் வளரும்.
முட்டை வடிவச் சிற்றிலைகளையும், காய்கள் பச்சையாக தட்டையாக இருக்கும்.
இதன் பூக்கள் இளஞ்சிவப்பும், வெண்மையும் கலந்த நெற்பொறி போன்று கொத்துக் கொத்தாக இருக்கும்.
இவைகள் வெளியிலிருந்து வரக்கூடிய கிருமிகளையும், தூசிகளையும் வடிகட்டி நமக்கு சுத்தமான காற்றை தருகிறது.
புங்கையின் சிறப்பு :
புங்க மர விதையிலிருந்து பயோடீசல் உருவாக்கும் திட்டத்தைப் பற்றி மஹாராஷ்டிர அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த விதைகளிலிருந்து 30 - 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
புங்கையின் மருத்துவப் பயன்கள் :
புங்க இலையின் சாறு இருமல், சளி, பசியின்மை போன்றவற்றைப் குணமாக்கும்.
தோல் வியாதிகளை குணப்படுத்தும் தன்மை புங்க விதைகளுக்கு உண்டு.
புங்க மரத்தின் வேர்கள் பற்கள் மற்றும் ஈறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.
உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் சக்தி புங்க மரத்தின் பூக்களுக்கு உண்டு.
புங்கை இலைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி உள்ளது.
தீக்காயம், நாள்பட்ட ஆறாத புண்கள், வடுக்கள், தழும்புகள், கரப்பான் நோய்கள், சொரி, சிரங்கு இவற்றிற்கு புங்க எண்ணெயை லேசாக சூடாக்கி அவற்றின் மீது பூசி வந்தால் குணமாகும்.
புங்கமரத்தின் பால் புண்களையும், வாய்வையும் நீக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பொன்போன்ற நிறத்தைக் கொடுக்கும்.
புங்க இலையை வதக்கி வீக்கங்களுக்கு கட்டலாம்.
புங்க எண்ணெய் சருமத்தை பாதுகாப்புடன் பளபளக்கச் செய்யும். தினமும் உடலில் புங்க எண்ணெய் தடவி வந்தால் சரும நோய்கள் ஏதும் ஏற்படாது.
No comments:
Post a Comment