பொது அறிவு - இந்திய அரசியல் - தேர்தல்கள்
1.பல கட்சி ஆட்சி முறைக்கு ----------------- சிறந்த எடுத்துக்காட்டுகளாகும் - இந்தியா மற்றும் பிரான்சு
2.மக்களாட்சியின் வெற்றி என்பது ஒரு நாட்டில் குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு நடத்தப்படும் -------------- ஐ பொறுத்து அமைந்துள்ளது - தேர்தல்
3.தேர்தலை நடைமுறைப்படுத்த எல்லா ஜனநாயக நாடுகளும் ----------------- என்பதை நடைமுறைப்படுத்தி பின்பற்றி வருகின்றன - வயது வந்தோர் வாக்குரிமை
4.இந்தியாவில் --------------- வயது நிரம்பியவர்கள் தேர்தல்களில் வாக்குகளைச் செலுத்த உரிமையுள்ளவராகிறார்கள் - 18
5.இந்தியாவில் ---------------- குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர் - நேரடித்தேர்தல் மூலமாகவோ (அ) மறைமுகத் தேர்தல் மூலமாகவோ
6.குடிமக்கள் தாங்களே நேரடியாக வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை ---------------- எனப்படும் - நேரடித் தேர்தல் முறை
7.இந்தியாவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை ------------------ முறையிலேயே அமைந்துள்ளது - நேரடி தேர்தல்
8.குடிமக்கள் நேரடியாக தங்களது வாக்குகளை செலுத்தாமல், தங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை -------------- முறையாகும் - மறைமுகத் தேர்தல்
9.-------- வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் தேர்தலில் போட்டியிடலாம் - 25
10.இந்திய அரசியல் கட்சிகளை ------------- வகைகளாகப் பிரிக்கலாம் - இரண்டு (தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள்)
11.இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6 சதவீத வாக்குகளைப் பெறும் கட்சிகள் ------------ என்றழைக்கப்படுகின்றன - தேசிய கட்சிகள்
12.மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 6 சதவீத வாக்குகளைப் பெற்று, குறைந்த பட்சம் இரண்டு இடங்களைக் கைப்பற்றும் கட்சிகள் ---------------- என்றழைக்கப்படும் - மாநிலக் கட்சிகள் (அ) பிராந்தியக் கட்சிகள்
13.சில சமயங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் மரணமடையலாம், அல்லது பதவியை விட்டு விலகலாம் அத்தகையச் சூழ்நிலையில் அந்தத் தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெறும் இவ்வாறு நடைபெறும் தேர்தல்களுக்கு -------------- என்று பெயர் - இடைத் தேர்தல்
14.மக்களாட்சியின் வெற்றி என்பது ------------------ செயல்பாட்டை ஒட்டியே அமைகிறது - எதிர்கட்சிகளின்
15.எதிர்கட்சித் தலைவர் --------------- அமைச்சருக்கு சமமான அதிகாரங்களைப் பெற்றுள்ளார் - ஆளுங்கட்சி
16.அரசியல் சட்டப்படி வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைப் பெற்ற ஆளும் கட்சிகள் எவ்வாறு முக்கியமானதாகக் கருதப்படுகிறதோ, அது போலவே ----------------- இன் பங்கும் மக்களாட்சியில் இன்றியமையாததாகும் - எதிர்கட்சி
17.ஆளும் கட்சிகள் ஏதேச்சதிகார மனப்பான்மையுடன் செயல்படாமல் இருக்கவும், அவர்களின் அதிகாரங்களை வரையறுத்திடவும், அவர்களைக் கண்காணிக்கவும் ---------------- முக்கிய பணிகளை மேற்கொள்கின்றன - எதிர்கட்சிகள்
18.எதிர்கட்சிகளின் முக்கிய பணி ------------ கொள்கைகளை விமர்சிப்பதாகும் - ஆளும் கட்சி
19.கேள்வி நேரங்களில், ஆளும் கட்சியினரை விமர்சிப்பதன் மூலம், தவறான முறையில் ஆளுங்கட்சியினர் அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு ---------------- தடைக்கற்களாக இருக்கின்றனர் - எதிர்கட்சியினர்
No comments:
Post a Comment