சிவமயம்
அட்டவீரட்டானக் கோயில்கள்
அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும்.சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.
பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும்சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.
1.திருக்கண்டியூர் :
சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
2.திருக்கோவலூர் :
அந்தகாகரனைக் கொன்ற இடம்
3.திருவதிகை :
திரிபுரத்தை எரித்த இடம்
4.திருப்பறியலூர் :
தக்கன் தலையைத் தடிந்த தலம்
5.திருவிற்குடி :
சலந்தராசுரனை வதைத்த தலம்
6.திருவழுவூர் :
கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக் கொண்ட தலம்
7.திருக்குறுக்கை :
மன்மதனை எரித்த தலம்
8.திருக்கடவூர் :
மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.
மேற்கண்ட எட்டு திருதலங்களிலும் எம்பெருமான் ஈசன் வீரனாட்டேஸ்வரர் என்ற திருநாமத்தோடு அழைக்கபடுகிறார்
No comments:
Post a Comment