இன்றைய ஸ்லோகம் .!
ஸ்ரீ குருவாயூரப்பா
அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே
த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
அநந்தபூமா மம ரோகராசிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ
விளக்கம்:
இவ்வுலகில் பரமனை போல் எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியத்தை அருள வேண்டும் என் ஐயனே.
குறிப்பு :
இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வர நமக்கு உள்ள அனைத்து நோய்களையும் தீர்ந்து நன்றாக வாழலாம். இந்த ஸ்லோகத்தை சொல்வதால் அந்த பரமாத்மவே நம்மை கண்டு ஆசீர்வதிப்பது போல் அமையும்.
தீப ஜோதி
தீப ஜோதி பரபிரம்ஹா
தீப ஜோதி ஜனார்தனா
தீப ஹரதுமே பாபம்
தீப ஜோதி நமோஸ்துதே!
விளக்கம்:
தீப ஜோதியே நீ பரபிரம்ஹத்தின் ரூபமாவாய், உலகை காக்கும் இறைவனின் வடிவமாய் இருக்கிறாய். நம்முடைய எல்லா பாவத்தையும் அழிக்க வல்லது இந்த தீப ஜோதி. ஆகவே இந்த ஜோதியை இரு கை கூப்பி வணங்குகிறேன்.
குறிப்பு :
பொதுவாக, வீட்டில் விளக்கேற்றும் போது இந்த ஸ்லோகத்தை சொல்வது நன்மையை தரும்.
புத்திர தோஷம் நீங்க..!
எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம். குலதெய்வ கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்து பௌர்ணமி அன்று அன்னதானம் கொடுத்து வந்தால் புத்திர தோஷம் நீங்கும்.
No comments:
Post a Comment