WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
  1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
  2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
  3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
  4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
  5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
  6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
  பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
  G.V. Manikanda Sharma
  No.1/267, J.J. Nagar
  Mugappair East, Chennai - 600037.
  Tamil Nadu, India.
  Telephone:+91-9962225358, 7092103071/2.
  WhatsApp No : +91-7092103071.
  E-mail: manisharmajothidam@gmail.com.
  www.neelajothidam.blogspot.in.
  எங்கள் முகவரி .
  1 / 267, ஜெ.ஜெ.நகர்.
  முகப்பேர் கிழக்கு,
  சென்னை – 600 037.
  செல் : +91-9962225358, 7092103071/2.
  தமிழ்நாடு – இந்தியா.
  E-mail ID: manisharmajothidam@gmail.com.
  www.neelajothidam.blogspot.in.
  12 - எங்கள் சேவை .
  Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
  மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
 • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா 9600068631 - 9600068931 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
 • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9600068931 - 9600068931 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

  ஜாதகம் கணிக்க ரூ 500/- மட்டுமே

  ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

  திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 150/- மட்டுமே

  நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Thursday, 26 October 2017

முனிவர் ஒருவர்

#முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து,”மரத்தடியில் பார்த்தீர்களா?” என்றாள்.

#பார்த்தேன்” என்றார் பரமன்.

#பார்த்தபிறகு சும்மா எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்” என்றாள் அம்மை.

#அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம்”

#ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

#வணக்கம், முனிவரே!” என வணங்கினர் அம்மையும் அப்பனும்.

#முனிவர் நிமிர்ந்து பார்த்தார். “அடடே! எம்பெருமானும் பெருமாட்டியுமா! வரணும் வரணும்…” என்று வரவேற்றார் முனிவர். தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

#சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, “சரி, நாங்கள் விடை பெறுகிறோம்” என்றனர் அம்மையும் அப்பனும்.

#மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள், வணக்கம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.

#அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். “முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை.எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள்.கொடுக்கிறோம்” என்றார்.

#முனிவர் சிரித்தார். “வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

#அப்பனும் அம்மையும் விடவில்லை. “ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்” என்று பிடிவாதமாய் நின்றனர்.

#முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். “நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போகவேண்டும்; அது போதும்” என்றார்.

#இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர்.

#ஏற்கனவே ஊசிக்குப் பின்னால்தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்?”என்று அம்மை பணிவாய்க் கேட்டார்.

#அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே.இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தரவேண்டும்?”என்று கேட்டார் முனிவர்.

#முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

#இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.-----வள்ளுவர்.

#தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு,”நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு பிறக்கிறது.

#திருச்சிற்றம்பலம்.

Wednesday, 25 October 2017

யுகம் என்றால் என்ன

யுகம் என்றால் என்ன? எதை கொண்டு அவை நிர்ணயிக்கப்படுகிறது? அவற்றுக்கு அடிப்படை என்ன? எதை கொண்டு அவை பிரிக்கப்படுகிறது? மொத்தம் எத்தனை யுகங்கள் உள்ளது?

இவை அனைத்திற்கும் விடை “பிரம்மனின் காலம்”. சரி பிரம்மனின் காலம் என்றால் என்ன? யுகங்கள் எவ்வாறு பிரம்மனுடன் தொர்பு உடையதாகிறது?
இதை பற்றி ஒவ்வொருவரும் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நம் புராணங்களும் இதிகாசங்களும் இந்த பிரம்மனின் கால அளவை கொண்டே நிகழ்வுகளை குறிக்கிறது. எனவே இதை பற்றி சற்று விரிவாக அலசலாம்.

மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள்.

1 மனித வருடம் = 1 தேவ நாள்.
360 மனித வருடம் = 1 தேவ வருடம்.

இப்போது தேவர்களின் கால கணக்கை துவங்குவோம்.....

12000 தேவ வருடம் = 1 சதுர்யுகம் (43,20,000 மனித ஆண்டுகள்).

1 சதுர்யுகம் என்பது 4 யுகங்களை கொண்டது. அதாவது 12000 தேவ வருடங்களை நான்கு யுகங்களாக பிரிக்கலாம்.

கிருத யுகம் 17,28,000 மனித வருடம் / 4800 தேவ வருடம்.
திரேதாயுகம் 12,96,000 மனித வருடம் / 3600 தேவ வருடம்.
துவாபரயுகம் 8,64,000 மனித வருடம் / 2400 தேவ வருடம்.
கலியுகம் 4,32,000 மனித வருடம் / 1200 தேவ வருடம்.

அதாவது ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 மனித ஆண்டுகள் அல்லது 12,000 தேவ வருடங்கள். சதுர்யுகத்தை மஹாயுகம் என்றும் அழைப்பர்.

71 மகாயுகங்கள் = 1 மனுவந்தரம்.

மொத்தம் 14 மனுவந்திரங்கள் உள்ளன அவை :

1.சுவயம்பு
2.சுவாரோசிஷம்
3.உத்தமம்
4.தாமசம்
5.ரைவதம்
6.சாக்சூசம்
7.வைவசுவதம்
8.சாவர்ணி
9.தக்ச சாவர்ணி
10.பிரம்ம சாவர்ணி
11.தர்ம சாவர்ணி
12.ருத்திர சாவர்ணி
13.ரௌசிய தேவ சாவர்ணி
14.இந்திர சாவர்ணி

இப்போது நாம் இருப்பது 7 வது மனுவந்திரம்.
1 மனுவந்திரம் என்பது ஒரு மனுவின் ஆட்சிகாலம் என்பதை மட்டும் இப்போது நினைவில் வைத்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களை கட்டுரையின் கீழ் காண்போம்.

கல்ப காலம்:
ஒரு கல்பகாலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு.பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பும் நிகழ்வும் இருக்காது. எனவே பிரம்மனின் பகலை மட்டும் பிரம்மனின் ஒரு நாள் என்று பேச்சு வழக்கில் வந்தது.

பிரம்மனின் கல்பகாலத்தில் 14 மனுவந்திரங்கள் அடங்கும். அதாவது ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும் 1 மனு மற்றும் 1 இந்திரன் வீதம், 14 மனுக்கள் மற்றும் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள் (இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).

2 மனுவந்திரத்திர்க்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும்.
இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. ஸந்தியா காலத்தின் அளவு நான்கு கலியுகம் அளவு. அதாவது, 432000 X 4 = 1728000 மனித வருடங்கள்.

இதேபோல் 14 மனுவந்திரத்திர்க்கு பின்பு மீண்டும் ஒரு பெரிய இடைவேளை இருக்கும். அதுவே பிரம்மனின் இரவு.

எனவே பிரம்மனின் ஒரு பகலில், 71 X 14 மகாயுகங்களும்,15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.
14 மனுவந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 = 2,59,20,000 மனித ஆண்டுகள்.
2,59,20,000 = 6 மஹாயுகங்கள். ( 43,20,000 X 6 = 2,59,20,000).

ஆக பிரம்மனின் 1 பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர்யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும் கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர்.
இவ்வாறு 360 நாள் (அ) 360 கல்பம் (அ) 360 X 1000 சதுர்யுகம் என்பது பிரம்மனின் ஒரு வருடம்.

பிரம்மனின் 100 வருடம் = ஒரு பிரம்மனின் ஆயுள்.
அதாவது பிரம்மனின் ஆயுள் என்பது 155,520,000,000,000 மனித வருடங்கள்.
அவர் ஆயுள் முடியும்போது, இன்னும் பெரிய பிரளயம் ஏற்பட்டு அவரும் இறைவனிடம் ஒடுங்குவார்.

ஸ்ஸ்ஸ்ஸ்..... இப்பவே கண்ணை கட்டுதே....

யுகங்கள் என்றால் என்ன.... அவை எப்படி பிரம்மனோடு தொடர்பு கொண்டுள்ளது என்று ஓரளவிற்கு விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் கல்பம் அல்லது பிரம்மாவின் பகலுக்கு 'சுவேத வராஹ கல்பம்' என்று பெயர். இக்கல்பத்தினுள், 7-வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில், 28-வது மகாயுகத்தில், கலியுகம் நடந்துகொண்டிருக்கிறது. கி.பி.2015 என்பது கலியுக வருடம் 5116 – 17 என்பதை குறிக்கின்றது.

நவீன கால விஞ்ஞானம் இந்த உலகத்தில் உயிரினம் தோன்றிய காலத்தை கணித்து 1,972,944,456 வருடங்கள் என்று கூறுகிறது. மேலே உள்ள நமது யுகங்களின் கணக்கை வைத்து பார்க்கும் போது தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,972,944,456 வருடங்கள் என்பது தெளிவாகிறது. பிரம்மாவிற்கு இப்போது 51 வயது நடந்து கொண்டிருக்கிறது. பிரம்மாவின் ஆயுள் 100 என்றால், அதன் பின் பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அழியும் என்றால் இன்னும் ஜீவராசிகள் உயிர்வாழ 49 பிரம்மா ஆண்டுகள் பாக்கியுள்ளன. அதாவது 76,20,48,00,000,000 வருடங்கள் இன்னும் பாக்கியுள்ளது. நவீன அறிவியல் இந்த பிரபஞ்சத்தின் மீதம் உள்ள ஆயுள் என்று கணக்கிட்ட வருடங்களும் கிட்டத்தட்ட இதுவே... ஆச்சரியமாக இருக்கிறதா? நம்பிக்கை இல்லாவிட்டால் கூகிள் செய்து பாருங்கள்.....

நமது வேதங்களை மிஞ்சும் எந்த விஞ்ஞானமும் இவ்வுலகில் இல்லை என்பதை பெருமையுடன் சொல்லுவோம்.