12-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்
உலக விண்வெளி வீரர்கள் தினம்
ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர்கள் தினமாக உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் என்கிற விண்வெளி வீரர் விஸ்டாக் என்கிற விண்கலத்தின் மூலம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று விண்வெளிக்குச் சென்று இவர் பூமியை 1 மணி 48 நிமிடத்தில் சுற்றி வந்தார். யூரி ககாரின் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்த ஏப்ரல் 12 ஆம் தேதி உலக விண்வெளி தினமாகக் கொண்டாடப்படுகிறது. விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்ச்சி செய்வதாகும். மனித விண்வெளிப் பயணத்துக்கான உலக தினத்தை ஆண்டுதோறும் ஏப்ரல் 12 தேதி உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானத்தை நிறைவேற்றியது.
வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம்
உண்பதற்கும், உடுப்பதற்கும் அளவுக்கு அதிகமாக வைத்து அழகு பார்க்கும் பிள்ளைகளுக்கு மத்தியில் பெற்றோரால் கைவிடப்பட்டு, வீதியோரங்களில் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு வழிதேடும் சிறுவர்கள் ஆயிரமாயிரம். வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினமானது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்க, ஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி வீதியோர சிறுவர்களுக்கான சர்வதேச தினம் (ஐவெநசயெவழையெட னுயல கழச ளுவசநநவ ஊhடைனசநn) கொண்டாடப்படுகிறது. மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவார்த்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
1606 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி பிரிட்டனின் தேசிய கொடியாக யூனியன் ஜக் கொடி அங்கீகரிக்கப்பட்டது.
1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி டாக்டர் ஜோனாஸ் சால்க் என்பவர் கண்டுபிடித்த போலியோ மருந்து பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்டது.
1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி சோவியத் யூனியனின் அணுவாயுதங்களைக் கொண்ட நீர்மூழ்கியொன்று தீப்பற்றியதால் கடலில் மூழ்கியது.
1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி கம்போடியாவிலிருந்து அமெரிக்கா வெளியேறியது.
1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன், பாலியல் தொந்தரவு வழக்கில் பொய் கூறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டார்.
1983 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி காந்தி திரைப்படத்திற்கு 8 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது.
2007ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தியாவால் உருவாக்கப்பட்ட அக்னி ஐஐஐ ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
No comments:
Post a Comment