சந்தன மரம் :
சந்தனம் மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. இதன் அறிவியல் பெயர் சாந்தலம் ஆல்பம்
சந்தன மரம் அமைந்துள்ள இடங்கள் :
இதன் தாயகம் இந்தியா. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது. கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட சந்தன மரங்கள் அரசுக்கு சொந்தமானவை. மேலும் சந்தன மரத்தைவனத்துறையால் மட்டுமே வெட்ட முடியும்.
சந்தன மரத்தின் அமைப்பு :
சந்தனம் சுமாரான உயரத்துடன் கூடிய கிளைகள் எப்போதும் கீழ்நோக்கி தாழ்ந்த நிலையில் காணப்படும் மரம். சந்தன இலைகள் தடித்தவை. 4 முதல் 7 செமீ நீளத்தில் எதிர் எதிராக அமைந்தவை. ஆழ்ந்த பச்சை நிறமானவை. மேற்புறம்பளபளப்பாக காணப்படும்.
மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. மரம் வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது.
வெள்ளை சந்தனம் :
வெள்ளை சந்தன மரம் மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய சாதாரண சந்தன மரங்களுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. பல லட்சம் மரங்களுக்கிடையில் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் மட்டுமே வளரும். இம்மரத்தில் செய்யப்படக்கூடிய முருகன், சிவன், வேல் முதலான சிலைகள்சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன.
சந்தன மரத்தின் பயன்கள் :
சந்தன மரத்தின் தூள் சமய வழி பாட்டில் முக்கிய இடம் பெறுகிறது.
சந்தன மரம் மாற்றடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்டது. உலர்ந்த கட்டை நறுமணம் கொண்டது.
சந்தனம் சிவப்பு, மஞ்சள், வெண்மை என மூன்று வகைகளாக இதன் கட்டையின் நிறத்தை ஒட்டி பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று வகைக்கும் மருத்துவத் தன்மை ஒன்றுதான். சந்தனக் கட்டைகள், சந்தன எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, வெப்பக்கட்டிகள் ஆகியவற்றை குணமாக்கும்.
வெள்ளை சந்தனத்தூளுடன் நீர் சேர்த்து அதை காய்ச்சி 3 வேளை குடித்தால் காய்ச்சல், மார்புத் துடிப்பு, மாந்தம், இதயப் படபடப்பு குறையும்.இதயம் வலிமை பெறும்.
நெல்லிக்காய் சாற்றை சிறிதளவு எடுத்து அதனுடன் 5 கிராம் அரைத்த வெள்ளை சந்தனத்தைக் கலந்து உருண்டையாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
சந்தன கட்டையில் சித்திர வேலைபாடுகளுக்கும், கதவுகள், புகைப்பட பிரேம்கள் ஆகிய பொருட்கள் செய்யப்படுகின்றன. மேலும் சந்தன பவுடர்,சந்தன சோப்பு மற்றும் அகர்பத்தி தயாரிக்கப்படுகிறது.
சந்தன மரமானது சந்தனம் தயாரிக்கவும் துணி வகைகள் மற்றும் அலமாரி ஆகியவற்றிற்கு வாசனை பொருளாக பயன்படுகிறது.
சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச் சாற்றில் மைய அரைத்து பசைபோல செய்து கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் கண்கட்டி குணமாகும்.
சந்தனத் தைலத்தின் பயன்கள் :
சந்தனத் தைலத்தை சருமத்தின் மீது தடவினால் சரும நோய்கள் ஏதும் அணுகாமல் சருமத்தைப் பாதுகாக்கும். உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.
No comments:
Post a Comment