பிறந்த கிழமைக்கான பலன்கள்
பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.
கிழமைகளும் பலன்களும் :
ஞாயிற்றுக் கிழமை :
ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போட்டிமனப்பான்மை, ஆளுமைதிறன் இருக்கும். செல்வம் உடையவராய் இருப்பார்கள். கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.
திங்கள் கிழமை :
திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் பொறுமையானவர்களாகவும், இளகிய மனம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பனவன். இனிய சொற்களால் யாரையும் மயக்கிவிடுவார்கள், சுற்றமும் நட்பும் நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள்.
செவ்வாய் கிழமை :
செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தின்மீது அதீத அன்பு கொண்டவர்கள். தந்திரக்காரனாய் இருப்பார். பிறர்க்கு உதவுபவர்கள். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள்.
புதன் கிழமை :
புதன் கிழமையில் பிறந்தவர்கள் இளமையான தோற்றம் கொண்டவர்களாகவும், இனிமையாக பேசுபவர்களாகவும் இருப்பார்கள். சிரித்த முகத்தினர். கல்வியறிவாளன், தெய்வபக்தி உள்ளவன், பிறரை மகிழ்விப்பார். நயமாகவும், விகடமாக பேசி அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். தன்காரியம் நடக்க எதையும் செய்வார்கள்.
வியாழக்கிழமை :
வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார். அறநெறியில் விருப்பம் உடையவராய் இருப்பார்கள். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள்.
வெள்ளிக்கிழமை :
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் கலைகளில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர் பாலினத்தினரை கவரும் இயல்புடையவர். வாகனங்கள் உடையவர். உயர்ந்த காரியங்களைச் செய்பவராய் இருப்பார். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், செயல் திறன் மிக்கவர்கள்.
சனிக்கிழமை :
சனிக்கிழமையில் பிறந்தவர் கடினஉழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் போராடி வெற்றிபெறும் குணம் இருக்கும். தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள், பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள். மேலும், இவர்கள் நேர்மையாக நடக்க ஆசைப்படுவார்கள்.
செய்வினை தோஷம் நீங்க..!
குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பௌர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால், ஒருவர் செய்த செய்வினை உங்களைப் பாதிக்காமல் நல்ல பலனை அடையலாம்.
No comments:
Post a Comment