நவகிரகங்களில் ஒன்றான சந்திர பகவான்
சந்திர பகவான் தயிர், சங்கு, பனி போன்று மேன்மையானவர்;. பார்கடலிலிருந்து தோன்றியவன். முயல் சின்னம் உடையவன். சேஷாமன் என்று வேதத்தில் அழைக்கப் பெறுபவன். சிவனது ஜடாமகுடத்தின் அணிகலனாக அமைய பெறுபவர் சந்திரன்.
சந்திரனின் வேறு பெயர்கள் :
நிலவு, சோமன், களங்கன், நிசாபதி, பிறை, கலையினன், உடுவின்வேந்தன், கலாநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயிலன்கூடு, பசுங்கதிர்த்தே, ரஜனிபதி, சுகுபராக, இந்து, மதி போன்றவை சந்திரனின் வேறு பெயர்களாகும்.
சந்திர பகவானின் பலன்கள்:
சந்திரனின் நட்பு வீடு மிதுனம், சிம்மம், கன்னி. சமவீடுகள் மேஷம், துலாம், தனுசு, மகம் கும்பம், மீனம், நீச்சவீடு விருச்சிகம். நட்பு கிரகங்கள் சூரியன், குரு.
சந்திரன் மாதுர்காரகன், அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறிய முடியும். சந்திரன் மனோகாரகனும்கூட, அதாவது மனதை ஆள்பவன்.
அமைதி, திருப்தி, கருணை, நிம்மதி, இரக்கம், காதல், கனிவு, சிந்தனைத் திறன், கற்பனை வளம் ஆகியவற்றை நிர்ணயிப்பது சந்திரனே.
சந்திரன் ஆதிக்கம் உள்ளவர்கள் கதை, கவிதை, இசை, நடனம், அனிமேஷன், கிராபிக்ஸ், வெளிநாட்டு வியாபாரம், தண்ணீர் சம்பந்தமான தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, கடல் சார்ந்த தொழில், கப்பல் துறைகள், கடற்படை, மனோதத்துவம், மனநலம், மனவசியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
விஷ்ணுவின் அம்சமான சந்திரனின் நற்பலன்களைப் பெற பௌர்ணமியன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து தங்கி வழிபடுவது நலம் பயக்கும்.
சந்திரனால் உண்டாகக் கூடிய யோகங்கள் :
சந்திராதியோகம் :
சந்திராதியோகம் இருந்தால் தைரியம், துணிவு, நீண்ட ஆயுள், எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.
சந்திர மங்கள யோகம் :
சந்திர மங்கள யோகம் இருந்தால் வீடு, வானம், செல்வாக்கு யாவும் உண்டாகும்.
சகடயோகம் :
சகடயோகம் இருந்தால் வாழ்வில் இன்பமும், துன்பமும் சரிசமமாக இருக்கும்.
அமாவாசை யோகம் :
அமாவாசை யோகம் இருந்தால் சுறுசுறுப்பாகவும், கல்வியில் சிறந்தவராகவும், வாழ்வில் சாதனைகள் செய்யக்கூடியவராகவும் இருப்பார்கள்.
அனபாயோகம் :
அனபாயோகம் இருந்தால் சொந்த முயற்சியால் முன்னேற்றம், உயர் பதவி உண்டாகும்.
சுனபா யோகம் :
சுனபா யோகம் இருந்தால் செல்வாக்கு, புகழ், பதவி யாவும் உண்டாகும்.
சந்திர பகவான் திருக்கோயில் :
சந்திரனுக்கு உண்டான முக்கிய திருத்தலம் திருப்பதி. இங்கு சந்திரனாகவே ஏழுமலையான் அருள்பாலிக்கிறார்.
திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில்.
பாத சனி தோஷம் நீங்க..!
திருநள்ளாறு சென்று எள் தீபம் ஏற்றி, வெய்யிலில் பாதம் புண்பட வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு பாத அணிகள் வழங்கினால் பாத சனிக்கு தோஷம் நீங்கும்.
No comments:
Post a Comment