25-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்
குரு நானக் தேவ்
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் 1469 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி பிறந்தார். குழந்தையாக இருந்த போதே இவருக்கு ஆன்மீக நாட்டம் இருந்தது. சிறு வயதிலேயே தியானம் செய்து பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஒருமுறை, தியானம் செய்துகொண்டிருந்த இவர் மீது வெயில் படாமல் இருக்க கொடிய நச்சுப் பாம்பு படமெடுத்து குடைபோல நின்றிருந்ததை மக்கள் பார்த்து அதிசயித்தனர். இவர் சாதாரண பிள்ளை இல்லை என்று உணர்ந்தனர்.
தன் வாழ்வின் நோக்கம் இறையருளை மக்களுக்கு வழங்குவதுதான் என்பதை அறிந்தார். தொடர்ந்து தியானம் செய்தார். இவரது மகத்துவம் அறிந்து ஏராளமானோர் நாடி வந்தனர். 1499 இல் திடீரென்று காணாமல் போனார். நதியில் மூழ்கிவிட்டதாக எண்ணினர். மூன்றாவது நாள் மீண்டும் திரும்பி வந்தார். அன்று முதல் ஆன்மீக செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார்.
சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மீக, சமூக, அரசியல் தளத்தை உருவாக்கினார். நேர்மையாக வாழவேண்டும் என்றார். இவரது போதனைகள் அடங்கிய 'குரு கிரந்த் சாஹிப்" என்ற நூல் சீக்கியர்களின் புனித நூலாகத் திகழ்கிறது. இந்து - முஸ்லீம் என்ற இரு பிரிவினரின் அன்பையும் மதிப்பையும் பெற்று ஞானியாகத் திகழ்ந்த குரு நானக் 1539 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
ஆபிரகாம் லிங்கன்
ஆபிரகாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார். ஆபிரகாம் லிங்கன் அடிமைத்தனம் ஒழிக்கப் போராடிய உலகின் சிறந்த தலைவர்களுள் ஒருவர் ஆவார். மேலும், இவர் ஐக்கிய அமெரிக்காவின் 16வது குடியரசுத் தலைவர் ஆவார்.
அமெரிக்காவில் தலை விரித்தாடிய அடிமை முறையை எதிர்த்து குரல் கொடுத்ததுடன் அதை ஒழிக்கவும் செய்தார். 1860 இல் ஆபிரகாம் லிங்கன் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நின்று குடியரசுத் தலைவரானார். இதற்கு முன் இவர் அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களின் தலைவராக இருந்தார். அந்த காலத்தில் கருப்பின மக்கள் மிகக் கொடூரமாக அடிமைகளாக நடத்தப்பட்டனர். இதனால், தென் அமெரிக்காவை தனி ஒரு நாடாக உருவாக்க வேண்டும் என்ற கிளர்ச்சி எழுந்தது. இந்த கிளர்வு உள்நாட்டுப் போராக வெடித்தது.
நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் நடந்த இப்போரில் லிங்கன் வெற்றி கொண்டார். இவர் 1863 இல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் 13வது அரசியல் சட்ட திருத்தத்தின் படி அடிமைத் தனத்தை ஒழித்தார். 1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி வாஷ்ங்டன் டி.சி-யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவர் ஆபிரகாம் லிங்கனை சுட்டுக் கொன்றார்.
1452 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி மோனலிசா ஓவியத்தை வரைந்த உலகப் புகழ் பெற்ற ஓவியக் கலைஞர் லியொனார்டோ டா வின்சி பிறந்தார்.
1923 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கான மருந்தாக விற்பனை செய்யப்பட்டது.
1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது.
1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரிட்டிஷ்ன் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர்.
No comments:
Post a Comment