14-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்
உலக சித்தர் தினம்
சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலக சித்தர் தினம் (றுழசடன ளுனைனாய னயல) கொண்டாடப்பட்டு வருகிறது.
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்
விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கிய டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் என்ற இடத்தில் பிறந்தார்.
1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த இவர், 1912 இல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர், பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.
1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக 'பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா" என்ற அமைப்பை நிறுவினார்.
ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி உயிர் நீத்தார்.
பகவான் ரமண மஹரிஷி
ரமண மஹரிஷி விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879 ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடராமன். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்றதன் மூலம் இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மஹரிஷி, 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. ரமணரின் முக்கியமான உபதேசம் நான் யார் என்னும் ஆன்ம விசாரம் ஆகும். இவர் 14 ஏப்ரல் 1950 இல் இறைவனடி சேர்ந்தார்.
1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.
1894 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.
1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிரிட்டிஷ்ன் பயணிகள் கப்பலான டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது.
No comments:
Post a Comment