துர்முகி தமிழ் வருஷம் 14-04-2016
முதல் 13-04-2017 வரை
விருச்சிக ராசி பலன்கள்.
விசாகம் 4-ம் பாதம் வரை, அனுஷம், கேட்டை, வரை,
ராசிபலன்
தோ, ந, நி, நு, நே, நோ, ய, இ, பூ
THO, NA, NEE, NOO, NAY, NO, YAA, YEE, YOO
பெயர் எழுத்து கொண்டவர்கள் (விருச்சிக ராசி) ராசி பலன்கள்
நகைச்சுவையுணர்வும், சிறந்த பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே!
உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள். இந்த துர்துகி ஆண்டில் ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால்
உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. இதுமட்டுமின்றி சுக ஸ்தானமான 4-இல் கேதுவும், 10-இல் ராகுவும்
சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி
பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து
வேறுபாடுகள் உண்டாகும். எல்லா இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு அலைச்சல்
டென்ஷன்கள் அதிகரிக்கும். தொடக்கத்தில் குருவும் 10-ல்
சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படும். வரும் ஆடி 18-ஆம் தேதி முதல் (02.08.2016) குரு லாப
ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை
மேன்மையடையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கை கூடும். பூர்வீக
சொத்துக்களால் அனுகூலங்களும், புத்திர வழியில் மகிழ்ச்சித் தர கூடிய சம்பவங்களும்
நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களும் சேரும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து
நடந்துக் கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு
சற்றே அலைச்சல்கள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிட்டும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை தடையின்றி அடைவார்கள்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமிது.
அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
கை கால் மூட்டுகளில் வலி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவையும் உண்டாகும்.
எல்லா இருந்தும் அனுபவிக்க இயலாமல் போகும். குடும்பத்திலுள்ளவர்களும்
நிம்மதியின்றி இருப்பார்கள்.
குடும்பம் மற்றும் பொருளாதார நிலை
திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின்
அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தொடக்கத்தில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் படிப்படியாக
முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம் போன்றவற்றால் வீண் செலவுகள் ஏற்படும். எல்லாம்
இருந்தும் அனுபவிக்க தடையை கொடுக்கும். சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும்.
கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.
உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகம்
பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின்
ஆதரவுகளால் எதையும் சமாளிக்க முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள்
கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். எதிர்பார்க்கும் சம்பள உயர்வுகளும்
கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
தொழில் , வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில்
கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள்
கிடைத்தாலும் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். பயணங்களால் தேவையற்ற
அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். தொழிலாளர்களை
சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
கொடுக்கல்,
வாங்கல்
தொடக்கத்தில் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால்
கொடுக்கல், வாங்கலில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பின்பு பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள்
படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை
காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்கு பிரச்சனைகளில் இழுபறியான நிலையே
நீடிக்கும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.
அரசியல்
பெயர் புகழ் மங்க கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை
கடைபிடிப்பது. மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக
நிறைய வீண் செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும் அதற்கேற்ற வருவாய்களும் கிட்டும்.
பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் சற்று அதிகரிக்கும்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராகத் இருந்தாலும் கிடைக்க வேண்டிய
லாபம் கிடைக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகள் ஏற்படும்.
தகுந்த நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காததால் அறுவடையில் தாமதம் உண்டாகும்
என்றாலும் ஒரளவுக்கு எதையும் சமாளித்து எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய
முடியும். அரசு வழியிலும் ஆதரவுகள் கிட்டும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்துக் கொண்டால் மட்டுமே
அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிக்க முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதோடு கடன்களும் குறையும். திருமணம் போன்ற சுப
காரியங்களும் கை கூடும். கணவனிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து
செயல்படுவது நல்லது.
மாணவ, மாணவியர்
கல்வியில் சற்று ஈடுபாடற்ற நிலை ஞாபகமறதி, உடல் நிலை
பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், எதையும் சமாளித்து
ஏற்றம் பெறுவீர்கள். கல்விக்காக சிலருக்கு அலைச்சல்கள் உண்டாகும். நல்ல
நட்புக்களாக தேர்ந்தெடுத்து பழகுவது மூலம் அனுகூல பலனை அடையலாம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் : 1,2,3,9
நிறம் : ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை : செவ்வாய், வியாழன்
திசை : தெற்கு
கல் : பவளம்
தெய்வம்: முருகன்
பரிகாரம்
குரு பகவான் ஆடி 18-ஆம் தேதி வரை 10-ஆம் வீட்டில்
சஞ்சாரம் செய்யவிருப்பதால் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய்
தீபமேற்றி கொண்டைக் கடலை மாலை சாற்றி வழிபடவும். சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால்
சனிக்கிழமை தோறும் சனிக்கு பரிகாரம் செய்வது, ஆஞ்சனேயரை வழிபாடு செய்வது நல்லது. கேது 4-ல் ராகு 1-ல்
சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில்
விளக்கேற்றி வழிபடுவது,
விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.
பூஜைக்குறிய யந்திரம்:
கணபதி யந்திரம், லட்சுமிகுபேர யந்திரம், சுதர்ஸன யந்திரம், ஷண்முக யந்திரம், அனுமான் யந்திரம், வியாபாரவிருத்தி யந்திரம், காரிய சித்தி யந்திரம், ஸ்ரீசக்கர யந்திரம், மஹாலட்சுமி யந்திரம், பைரவ யந்திரம், பிரத்தியங்கரா யந்திரம், வாராஹி யந்திரம்,
இவை
அனைத்தும் எங்கள்:
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து வழங்கப்படும்,
இந்த யந்திரம் பெறவிரும்பும் அன்பர்கள். கோத்ரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து வழங்கப்படும்,
இந்த யந்திரம் பெறவிரும்பும் அன்பர்கள். கோத்ரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
ஜோதிடர், புரோகிதர்.
G.V. மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
Mobile. 9962225358
Mobile.
7092103071
Mobile.
7092103072
WhatsApp No 9444226039
https://neelamatrimony.wordpress.com/WhatsApp No 9444226039
தொடர்பு கொள்ளவும். மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனைகளை தெளிவாக குறிப்பிடுடவும்.
No comments:
Post a Comment