பிரதோஷம்.
பால் ஆழி கடைந்து முதலில் வந்த விஷத்தை தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானிடம் கொடுக்க..
இறைவன் அதை குடித்து மூர்ச்சையாகி மயக்கநிலையில் இருந்ததும் அந்த விஷம் பெருமானின் வயிற்றுள் போகாத படி பராசக்தி சிவபெருமானின் கழுத்தை இருக்க படித்து விஷத்தை தடுத்ததும், நீலகண்டனாக ஈசன் மாறியதும் இந்த பிரதோஷ காலத்தில் தான் என்பார்கள். இது நடந்த உடன் என்ன செய்வதென்றறியாத தேவர்களும் அசுரர்களும் கைலாயத்தில் அங்கும் இங்குமாக ஓடினார்களாம். இதை சரி செய்ய நந்தியம் பெருமானிடம் முறையிட்டார்களாம்.. பிறகு தான் பரசக்தி சிவனை கண்டத்தில் பிடித்து காத்தாள் என்றும் கூறுவர்.
பிரதோஷத்தின் போது ஆலயங்களில் இப்படி மாற்றி மாற்றி சுற்றுவது வழக்கம்.
ஒரு மனிதன் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை அன்றாட வேலைகள் செய்து சோம்பல் அடைந்து விகார குணங்களும் வக்ரபுத்தியும் விஷமாக மாறி அவனை மயக்க நிலையில் தள்ளுவது இந்த சந்தியா காலம் என்னும் பிரதோஷ காலம் தான்... இந்த தோஷத்தை நீக்கி மனிதனை நெறிப்படுத்தவே நந்தி வழிபாடு கொண்டு வர ப்பட்டது. இது பகலும் அல்ல இரவும் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட காலம். சந்தியா வேளை.
இந்த வேளயில் மஇவைகள்.ன் இறை வழிபாட்டில் இருந்தால் அவனை பற்றியுள்ள அந்த விகார நோய் அகலும் என்பது பெரியவர்கள் வாக்கு.
சிவனுக்கு எந்த விஷமும் தீண்டாது.
மனிதனை நெறிப்படுத்த சொன்ன புராணமே இவை
No comments:
Post a Comment