6-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்
மோதிலால் நேரு
மோதிலால் நேரு மே 6, 1861 ஆம் ஆண்டு கா~;மீரி பண்டித் குடும்பத்தில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரும், வழக்கறிஞரும், இந்திய சுதந்திர போராட்ட வீரரும் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் தந்தை ஆவார்.
ஜெய்ப்பூரில் வசித்து வந்த இவரது தந்தை, டில்லியில் காவலராக பணிபுரிந்தார். இவரது பாட்டனார், ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனத்தின் முகலாயப் பேரரசு நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர். மோதிலால் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து, கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.
வழக்கறிஞராக வாழ்கையை ஆரம்பித்த மோதிலால் நேரு, காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசியக் காங்கிரஸில் சேர்ந்தார். 1919 - 1920 மற்றும் 1928 - 1929 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தார். அதோடு சுயாட்சிக் கட்சி மூலம் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராட்டமும் நடத்தினார். சைமன் குழுவிடம் பேச்சு நடத்த 1928 இல் அமைக்கப்பட்ட நேரு குழுவின் தலைவராகயிருந்தவர். மேலும், ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர் ஆவார். இவர் 1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் நாள் காலமானார்.
சிக்மண்ட் பிராய்ட்
நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் சிக்மண்ட் பிராய்ட் 1856 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி பிறந்தார். சிறு வயது முதலே அறிவுக் கூர்மையுடன் விளங்கினார். சிறந்த மாணவனாகத் திகழ்ந்த இவர், வியன்னா பல்கலைக்கழகத்தில் 1881இல் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.
தனியாக மருத்துவமனை தொடங்கி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார். சுயநினைவு இல்லாதது பற்றிய இவரது கோட்பாடுகள், மனம் தொடர்பான நுணுக்கங்கள், மனநோய்கள் குறித்த விளக்கங்கள், நோயாளி - மருத்துவர் உரையாடல் சிகிச்சை முறை ஆகியவை மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
தன் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் தனது சிகிச்சைகள் முறைகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். பல புத்தகங்களை எழுதியுள்ளார். இயக்கவியல் விதிகளை மனிதனின் ஆளுமைக்கும் அவனது சிகிச்சைக்கும்கூட பயன்படுத்த முடியும் என்பதை கண்டுபிடித்தது இவரது மிகப் பெரிய சாதனையாகும். இவர் தனது 83 வயதில் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி மறைந்தார்.
மனோதத்துவ மருத்துவர் மற்றும் இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண்ணான மரியா மாண்ட்டிசோரி அவர்கள்
1952 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி இறந்தார்.
1854 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி இந்தியாவின் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.
1967 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி ஜாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லீம் குடியரசு தலைவரானார்.
உலக பொருட்காட்சிக்கான நுழைவு வாயிலாக அமைக்கப்பட்ட ஈபிள் டவர் 1889 ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
No comments:
Post a Comment