குளிர்ச்சியை தரக்கூடிய மருதாணியின் பயன்கள்
மருதாணி :
✔மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது.
✔இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும்> வெள்ளை> சிகப்பு> மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும்.
✔மருதாணி வாசனை உடையது. நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும்.
✔மருதாணி வரண்ட பின் சுமார் 45 விதைகள் இருக்கும். இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர்.
மருதாணியின் பயன்கள் :
✔மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்
✔உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு> மஞ்சள்> கற்பூரம் சேர்த்து அரைத்து> ஆணி உள்ள இடத்தில் பூசினால் கட்டி ஒரு வாரத்தில் குணமாகும்.
✔மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வைத்தால் உடல் வெப்பம் தணியும்.
✔கைகளுக்கு அடிக்கடி மருதாணி வைத்து வந்தால் மனநோய் ஏற்படுவது குணமாகும்.
✔மருதாணி இலை கிருமி நாசினி> கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து.
✔மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும். இலைகள் கை> கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள்> அழுக்குப்படை> கட்டி> பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.
✔மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.
மருதாணியின் மருத்துவப் பயன்கள் :
தோல் நோய்
தோல் பற்றிய அரிப்பு படை ஆகிய நோய்களுக்கு மருதாணி உதவுகிறது.
புண்கள் :
இதன் இலையை அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசினால் 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப் பூசலாம்.
முடிவளருதல் :
இள நரையை அகற்றுவதற்கு பயன்படுகிறது. இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். இந்த தைலத்தை நாள்தோறும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.
தூக்கமின்மை :
மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம்வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.
கை கால் எரிச்சல் :
கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதாணி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும் உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.
நகம் :
மருதாணியை அரைத்து நகத்தின் மீது பூசினால் நகம் பாதுகாக்கப்படும்.
நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று. புண். சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதாணி விளங்குகிறது.
நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதாணி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.
மேற்கண்ட தொகுப்பில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள் :
மருதாணி -
Henna
நகம் - Nail
தலைவலி - Headache
கிருமிகள் - Germs
தூக்கம் - Sleep
No comments:
Post a Comment