சொந்த வீடு வாங்கும் யோகம் யாருக்கு உண்டு?
சொந்த வீட்டில் வாழ்வதென்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். அதுபோல நமக்கென ஒரு வீடு இருப்பதென்பது மனநிறைவை தரக்கூடியதுதானே. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது.
சொந்த வீடு அமைய :
☆ சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் நிறைவேறுமா? வீடு வாங்குவதற்கு வசதி இருந்தாலும் ஜாதகத்தில் அவர் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற யோகம் வேண்டும்.
☆ சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீடு ஒருவருக்கு நிலைக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்கவேண்டும்.
☆ சிலர் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களை வைத்துக் கொண்டு சொந்த வீட்டில் வாழும் யோகத்தைப் பெறுகிறார்கள். ஒரு சிலர் சிறுக சேமித்து ஒரு சொந்த வீட்டிற்கு அதிபதியாகவும் ஆகிவிடுகிறார்கள்.
பரிகாரங்கள் :
☆ ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று இருந்தால் வீடு அமையும் யோகம் தடைப்படும். அத்தடை நீங்க, சிவப்பு நிற மலர்களால் செவ்வாயை பூஜித்து வர விரைவில் சொந்தவீடு அமையும்.
☆ நிலம் அமைந்து, வீடு அமைய தாமதமாக ஆகும்போது ஒரு முறை “திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை” வணங்கி “ஓம் சரவண பவ” எனும் மந்திரத்தை உச்சரித்து, ஆலயத்திலே ஆறு மணி நேரம் தங்கி, அந்தக் கடல் நீரை எடுத்து வந்து மஞ்சளுடன் கலந்து, நீங்கள் வீடு கட்டுகின்ற நிலத்தைச் சுற்றி நீங்கள் தெளிக்க வேண்டும்.
☆ வீடு அமையாதவர்கள், நிலங்களே கிடைக்காதவர்கள், வீடு அமைவதே கஷ்டம் என்று ஏங்குபவர்கள் ஒரு முறை “சிறுவாபுரி முருகனை” ஒன்பது செவ்வாயன்று வணங்கி வர வீடு கட்டும் கனவு நிஜமாகும்.
☆ நிலம், வீடுவாங்கு யோகம் அமைய பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரவேண்டும்.
☆ வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்புப் பாத்திரங்களைத் தானம் கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் வீடு வாங்குவீர்கள்.
☆ ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்கக் கொடுத்தால் வீடு வாங்கவும், கட்டவும் முடியும் என்பது ஐதீகம்.
ஆயில்ய நட்சத்திர தோஷம் நீங்க..!
நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தைக்கு ஆயுஷ் ஹோமம் செய்வதும், ஏழை எளயவர்களுக்கு வஸ்திரம் அன்னதானம் செய்வதும் மிகவும் அவசியம். இந்த நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் சர்பேஸ்வரனை வணங்குவது நல்ல பலன்களை தரும். ஸ்ரீகாளகஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்வது சிறந்தது.
No comments:
Post a Comment