சமையல் டிப்ஸ் !!
✩ கொழுந்து வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி நன்றாக அரைத்து நகத்தில் வைத்துக் கட்டினால் நகச்சுற்று குணமாகிவிடும்.
✩ கர்ப்பிணிப் பெண்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொண்டைக் கடலையைச் சுண்டல் செய்து சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஏற்படும்.
✩ மோர்க் குழம்புக்கு அரைக்கும் கலவையுடன் ஒரு ஸ்பூன் கடுகையும் சேர்த்து அரைத்து மோர்க் குழம்பு வைத்தால் வாசனையாக இருக்கும்.
✩ பயத்தம் பருப்புப் பூரணம் வைத்துப் போளி செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.
✩ அடைக்கு ஊறவைக்கும் அரிசி, பரப்புகளுடன் சிறிது கொண்டைக் கடலையையும் ஊறவைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும்.
✩ காராமணியை ஊறவைத்து அத்துடன் வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து, அரைத்து வடை சுட்டு, சுடச்சுட சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
✩ முட்டை கோஸ் வேகவைத்து நீரைத் தினமும் ஒரு டம்ளர் சாப்பிட்டு வந்தால் குடல்புண் ஆறும்.
✩ முருங்கைப் பூவை துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் வலுவடையும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.
✩ கோழி முட்டையை தினசரி உணவில் வேக வைத்துச் சாப்பிட வேண்டும். இப்படிச் செய்தால் பருவடைந்த இளவயதுப் பெண்களின் இடுப்பு எலும்புகளும், சினைப்பைகளும் வலுவடையும்.
✩ தினமும் சிறிதளவு அரிசி திப்பிலியை சாப்பிடுவாதல் இரைப்பை வலுப்பெறுகிறது. கப சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகின்றன. தாது நஷ்டம் நீங்கும்.
No comments:
Post a Comment