சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி தரும் அட்சய திருதியை
நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனி சிறப்புகள் உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறைத் திருதியை அட்சய திருதியை என போற்றப்படுகிறது.
'அட்சயம்" என்றால் வளர்வது> குறையாதது என்று பொருள். அட்சய திருதியை தினத்தில் செய்கிற> ஆரம்பிக்கிற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியை பற்றிய புராணக் கதைகள் :
✧ பகவான் கிரு;க்ஷ்ணரின் பால்ய நண்பர் குசேலன் வறுமையில் வாடுகிறார். கிரு;க்ஷ்ணரை சந்திக்க முடிவெடுத்து ஒருபிடி அவலை தன் மேலாடையில் முடிந்துகொண்டு புறப்படுகிறார். அவரை நன்கு உபசரித்த கிருக்ஷ்ண பகவான் அவர் அன்போடு கொண்டு வந்த அவலை மகிழ்ச்சியுடன் எடுத்து உண்டு> அந்த அவலின் ருசியில் மகிழ்ந்து 'அட்சயம் உண்டாகட்டும்"
என்று வாழ்த்தி அனுப்புகிறார். அதே கணத்தில் குசேலனின் குடிசை வீடு மாடமாளிகையாக மாறுகிறது. அக்ஷ்;ட ஐஸ்வர்யங்களும் அவரது வீட்டில் குடிகொள்கின்றன. பகவான் கிருக்ஷ்ணர் இன்னொரு வாய் சாப்பிட அவலை எடுக்க..!
மகாலட்சுமியின் அம்சமான ருக்மணி தேவி> கிருக்ஷ்ணரின் கையை பிடித்து தடுக்கிறாள்.
'எனக்கு பிடித்த அவலை தின்ன விடாமல் ஏன் தடுக்கிறாய்?"
என்று கிருக்ஷ்ணன் கேட்க..!
'ஒரு பிடி சாப்பிட்டதற்கே குசேலனின் வறுமை நீங்கி> அக்ஷ்ட ஐஸ்வர்யங்களும் அவன் வீட்டில் குவிந்துவிட்டது. இன்னும் ஒரு பிடி சாப்பிட்டால்> மகாலட்சுமியான நானே அவன் வீட்டுக்கு போக வேண்டியதுதான்"
என்கிறாள் ருக்மணி. இந்த அற்புதம் நிகழ்ந்தது அட்சய திருதியை நாள் அன்று.
✧ கௌரவர்கள் சபையில் திரவுபதி துகிலுரியப்பட்டபோது ஆடைகளை அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் அட்சய திருதியை நாளே என்கிறது வியாச புராணம்.
✧ தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்த நாள்> சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள்> ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள்> சங்க நிதி> பத்மநிதியை குபேரன் பெற்ற நாள்> மகாவிக்ஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள் என பல சிறப்புக்களை உடையது அட்சய திருதியை நாள்.
அட்சய திருதியை நாளன்று செய்ய வேண்டியவை :☘ அட்சய திருதியை நாளில் நாம் செய்யும் தான தர்மங்கள் நமக்கு புண்ணியத்தை சேர்க்கும். இந்நாளில் சுயநலத்துடன் செய்கிற காரியங்களைவிட> பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும். ஏழை நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேட்டி> சேலை> போர்வை தானம் தரலாம்.
☘ அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. மேலும்> அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி> தங்கம் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். இப்படி செய்வதால்> கடன் வாங்கும் வழக்கம் மேன்மேலும் அதிகரிக்கக் கூடும்.
☘ அட்சய திருதியை அன்றைக்கு கைக்குத்தல் அரிசி வாங்குவது நல்லது. அந்த அரிசியை புடைத்து எடுத்து> பணப் பெட்டியில்> பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது. அதற்கடுத்து மஞ்சள்> இதில்தான் எல்லா மகிமையும் உள்ளது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம்> மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம்.
☘ அட்சய திருதியை அன்றைக்கு திதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி> வாழைக்காய்> பச்சரிசி> துணி> பணம் கொடுத்து திதி செய்தால் நல்லது.
☘ அட்சய திருதியை அன்று ரத்தினமங்கலம் அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோவில் சென்று வழிபடுவது நல்லது. இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு என தனியாக உள்ள கோவில் இது மட்டும் தான்.
No comments:
Post a Comment