11-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்
தேசிய தொழில்நுட்ப தினம்
➤ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதத்திலும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் விதத்திலும், வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கிலும் மே 11ஆம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
➤ ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் 1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி, இந்தியா மூன்று அணுகுண்டு சோதனையும், மே 13 ஆம் தேதி இரண்டு அணுகுண்டு சோதனையும் வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக மே 11 ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது.
➤ விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இந்தியா முன்னேறி வருகிறது. பசுமை தொழில்நுட்பம், கல்வி, தண்ணீர் சேமிப்பு, மரபுசாரா எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் விவசாயத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்துவது போன்றவற்றில் நாம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது.
ஜார்ஜ் பீட்டர் மர்டாக்
மானிடவியலாளர் ஜார்ஜ் பீட்டர் மர்டாக் என்பவர் 1897 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி பிறந்தார். இவரது இளமைக்காலத்தை விவசாய வேலையில் கழித்தார். இதன் மூலம் பல வேளாண்மை முறைகளைப் பற்றி அறிந்து கொண்டார். மரபுவழிப் பண்பாடுகளில் இவருக்கிருந்த ஆர்வமும், இவரது ஆசிரியரிடமிருந்து கிடைத்த அகத் தூண்டுதலும் இவரை மானிடவியல் மீது ஆர்வம் கொள்ள வைத்தது. இதனால், யேல் பல்கலைக் கழகத்திலேயே மானிடவியலும் கற்றார். 1925 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்று, அந்த பல்கலைக் கழகத்திலேயே மானிடவியல் துறைக்குத் தலைவரானார். இவர் 1985 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி இறந்தார்.
1924 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர் மற்றும் கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.
1949 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என பெயர் மாற்றப்பட்டது.
1949 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேல் இணைந்தது.
1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி இந்தியாவின் பொக்ரான் பகுதியில் 3 அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டது.
1987ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி முதலாவது இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேரிலாந்தில் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment