எலுமிச்சையின் மகிமை !!
கோடைக்காலத்தில் அருந்த வேண்டிய உணவில் எலுமிச்சையும் ஒன்று. வெயிலின் தாக்கம் அதிகமவதால் நம் கடைகளில் விற்கும் பானத்தை வாங்கி குடிக்கிறோம். அதற்கு பதிலாக நம் வீட்டிலே எலுமிச்சையை வைத்து ஜூஸ் செய்து அருந்தினால் உடலுக்கும் நன்மை பணமும் மிச்சம்.
உடலுக்கு நன்மையை தரும் எலுமிச்சை :
❈ தினமும் அரைக் கப் எலுமிச்சைச் சாறு குடிப்பதன் மூலம் சிறுநீரில் உள்ள சிட்ரட் அளவை குறைத்து சிறுநீர்ப்பையில் கல் சேர்வதைத் தடுக்கிறது.
❈ எலுமிச்சை சாறுடன் சிறிது தேன் கலந்து குடித்தால் உங்களைத் தொல்லை செய்யும் தொண்டை கரகரப்பிலிருந்து விடுபடலாம்.
❈ தினமும் உங்கள் உணவில் ஏதேனும் ஒரு வகையில் எலுமிச்சைச் சாறை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடை குறையும்.
❈ பூச்சிகள் கடியால் உங்கள் தோலில் அரிப்பு ஏற்பட்டால், எலுமிச்சைப் பழத்தை சிறிதாக நறுக்கி கடி பட்ட இடத்தில் தடவவும். பூச்சிக் கடியால் ஏற்பட்ட அலர்ஜியை இது குறைக்கும்.
❈ காய்ச்சலால் உங்கள் உடல் வெப்பமாகினால் நீரில் எலுமிச்சைச் சாறை கலந்து குடிக்க வேண்டும். இது உடல் சூட்டைக் குறைக்கும்.
❈ எலுமிச்சைப் பழம் அமிலத் தன்மை உடையதாக இருந்தாலும். அது உங்கள் உடலிலுள்ள அழகை சீர்படுத்தும்.
❈ இளநீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்க வயிற்று வலி போகும். சளி பிடித்துள்ள நேரத்தில் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடித்தால் சளி குறையும்.
❈ தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கும். மோரில் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
❈ எலுமிச்சைச் சாற்றுடன் சிறிதளவு பூண்டுச் சாறு கலந்து தேய்த்து வந்தால் தேமல், படை போன்றவை மறையும். எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது.
❈ மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.
❈ வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சனை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.
No comments:
Post a Comment