திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்
வைகாசி விசாகத் தேர்த்திருவிழா
ஏகனாய், அனேகனாய், எங்குமாய் எல்லாமாய் இலங்கி நிற்கும் இறைவன், கொங்கு தமிழ் பரப்பில் தொன்மை நலம் சார்ந்து 'திருக்கொடிமாடச் செங்குன்றூர்" என ஞானசம்பந்தர் பெருமானால் சிறப்புடன் வழங்கபெறும் இத்திருத்தலத்தில் மாதெருபாகனாய், செங்கோட்டு வேலவனாய், ஆதிகேசவப் பெருமானாய் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், இளங்கோவடிகள் முதலிய சான்றோர்களால் போற்றப் பெற்ற இத்திருக்கோவிலின் 'வைகாசி விசாகப் பெருந்திருவிழா" நிகழ்ச்சி சிறப்புற நடைபெற உள்ளது.
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா துன்முகி ஆண்டு 2047 சித்திரை 30 ஆம் நாள் (13.05.2016) தொடங்கி வைகாசி 13 ஆம் நாள் (26.05.2016) முடிவடைகிறது.
14 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவின் முதல் நாளான (13.05.2016) இன்று காலை 9.00 மணிக்கு மேல் சுக்லபட்சம், சப்தமி திதியும், ஆயில்ய நட்சத்திரமும், கூடிய சுபயோக நன்னாளில், திருமலையில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.
வழித்தடம் :
திருச்செங்கோடு மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 650 அடி உயரத்தில் இத்தலம் உள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவில் வரை 1206 படிகள் கொண்ட நடை பாதையும், வாகனங்கள் மேலே செல்ல மலை பாதையும் தனியாக உள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் பாதை 2.5 கி.மீ தொலைவு உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல கோவில் சார்பாக பேருந்து வசதியும் உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்துஇ டங்களில் இருந்தும் மலைக்குச் செல்ல பேருந்து வசதிகளும் உள்ளன. திருச்செங்கோட்டிற்கு அருகில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் இரயில் நிலையங்களும் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கிச் செல்ல அனைத்து வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகளும் உள்ளன.
இனிவரும் நாட்களில் தினந்தோறும் நடைபெறும் விழாக்களை 7.00 மணி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
திருச்செங்கோட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவிற்கு திருச்செங்கோட்டில் இயங்கி வரும் உங்களை வருக..! வருக..! என அன்புடன் வரவேற்கிறது.
No comments:
Post a Comment