இலுப்பை மரம் :
இந்தியாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக வளர்கிறது. இதன் அறிவியல் பெயர் ஃபேசியா லேட்டி ஃபோலியா என்பதாகும்.
பொதுவாக ஆல் அரசு போன்ற பால் வடியும் மரங்களுக்கு மழை மேகங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. அந்த வகையைச் சேர்ந்ததுதான் இலுப்பையும்.
மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு இலுப்பை எண்ணெய் மூலம்தான் விளக்கு எரித்தார்கள். உலர வைத்த இலுப்பைப் பூவை சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்தினர்.
தட்பவெப்பநிலை :
மழைப்பொழிவு 800 - மி.மீ முதல் 1800 மி.மீ வரை உள்ள பகுதிகளில் இம்மரங்கள் செழிப்பாக வளர்கின்றன.
இலுப்பையின் அமைப்பு :
இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் பழபழப்பாக இருக்கும் இலைநுனியில் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்துக் கொத்தான வெண்ணிற மலர்களையும் முட்டை வடிவ சதைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய பால் போன்ற சாறுள்ள மரம்.
இலுப்பை பழத்தின் சுவை மணம் அனைத்தும் சப்போட்டா பழத்தை ஒத்திருக்கும்.
இலுப்ப பூவின் பயன்கள் :
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது பழமொழி.
இலுப்பைப் பூ இனிப்புச் சுவையுடையது. இலுப்பைப் பூவை பாகாக்கி சர்க்கரைக்குப் பதிலாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளதை இப்பழமொழி மூலம் அறியலாம்.
இலுப்பைப்பூவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இலுப்பைப்பூவை தினசரி சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.
இலுப்பைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
இப்பூவினால் பாம்பு கடித்த விக்ஷம் வாதநோய் ஆகியவை குணமடையும்.
இலுப்பைக் காயின் பயன்கள் :
இலுப்பைக் காயை கீறினால் பால் வெளிப்படும். அந்த பாலை உடலில் தோன்றும் வெண் படலங்களின் மீது தடவினால் வெண்படலம் விரைவில் குணமாகும்.
இலுப்பைப் பழத்தின் பயன்கள் :
இலுப்பைப்பழம் நல்ல இனிப்புச் சுவை உடையது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது.
இலுப்பை விதையின் பயன்கள் :
இலுப்பை விதையின் ஓட்டை நீக்கி உள்ளே உள்ள பருப்பை வதக்கி அரைத்து வீக்கங்களுக்கு கட்டினால் வீக்கம் விரைவில் குணமாகும். வெண்படலங்களின் மீது தடவினால் வெண்படலம் விரைவில் குணமாகும்.
இலுப்பை எண்ணெய் :
இந்த எண்ணெயை சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் சிறிது கசப்பு சுவையாக இருக்கும். கோயில்களில் விளக்கு வைக்க இந்த எண்ணெயை பயன்படுத்தினர். அதனால் சிவன் கோயில் உள்ள இடங்களில் இலுப்பை மரங்களை நட்டு வளர்த்தனர்.
எண்ணெய் நீக்கப்பட்ட சக்கையே பிண்ணாக்கு எனப்படும். இதை ஊறவைத்து நன்றாக அரைத்து வடிகஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்தால் சரும வியாதிகள் நீங்கும்.
இலுப்ப வேரின் பயன்கள் :
இலுப்பையின் வேரை இடித்து நீரில் கலந்து கொதிக்கவைத்து குடிநீராக அருந்தி வந்தால் இடுப்பு வலியைப் குணமாகும். உடலுக்கு வலுவைக் கொடுக்கும் .
மேற்கண்ட தொகுப்பில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள் :
எண்ணெய் - Oil
பழமொழி - Proverb
மின்சாரம் - Electricity
விளக்கு - lamp
No comments:
Post a Comment