கிழக்கில் கண்ணகி வழிபாடு பிரசித்தமானது. இது ஒரு புராதன வழிபாடாகும். திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே கிழக் கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகியம்மன் வழிபாட்டில் காண்கிறோம்.
இத்தெய்வங்களில் கண்ணகை அம்மனுக்கு இலங்கையில் குறிப்பாக கிழக்கிலும் வன்னியிலும் ஆலயங்கள் அமைத்து வருடந்தோறும் பொங்கல் படைத்து குளிர்த்தி பாடி வழிபடுவதைக் காணலாம். பூம்புகாரைத் தலை நகராகக் கொண்டு சோழ நாட்டிலே பிறந்து பாண்டிய நாட்டிலே அரசியல் புரட்சி செய்து சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித்தெய்யோ என இன்றும் வழிபட்டு வருவதைக் காணலாம்.
கண்டியிலுள் தலதா மாளிகையில் கண்ணகி கோயில் இருப்பதும் கயபாகு மன்னன் இந்தியாவின் சேரநாட்டிலிருந்து கொணர்ந்த சந்தனக் கட்டை யாலான விக்கி; ரகமும் சிலம்பும் இன்றுமுள்ளது.
ஈழத்துக் கடைசித் தமிழ் மன்னனின் தலைநகர் கண்டி என்பதுடன் அது கண்ணகி வழிபாட்டின் உறைவிடமுமாகும்.இன்று கண்டியில் நடைபெறும் பெரஹரா பத்தினித் தெய்வமாம் கண்ணகிக்கு எடுக்கப்பட்ட விழாவேயாகும்.
மணிமேகலை சிந்தாமணி சிலப்பதிகாரம் வளையாபதி குண்டலகேசி ஆகிய ஜம்பெரும் காப்பியங்களுள் தமிழில் உருவான முதல் பெரும் காப்பியம் சிலப்பதிகாரமாகும்.இதனை இளங்கோவடிகள் சிருஸ்ட்டித் திருந்தார். சிலப்பதிகாரம் ஒரு சர்வசமய சமரச இலக்கியமான தமிழக்கா வியமாகும் .
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றுவது ஊஉம்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினைச் உருத்து வந்து ஊட்டும் என்பதும்
சூழ்வினைச் சிலம்பு காரணமாக சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள் மேற்படி மூன்றுஉண்மைகளிலும் தமிழ்ப் பண்பாட்டை நிலைநாட்டியுள்ளார் .
வேறெந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லாத வகையில் முடியுடை மூவேந்தரையும் அவர்தம் ஆளுகைக்குட்பட்ட தமிழ் நிலத்தையும் சமநோக்கோடு காண்கிறார்.
சங்ககாலத்திலே கன்னிப்பெண்கள் மட்டுமே காலிலே சிலம்பு அணிவது வழக்கம்.ஆனால் சற்று பின்வந்த சிலப்பதிகார காலத்திலே திருமணமான பெண்கள் சிலம்பணிந்தார்கள்.அச்சிலம்பிலே ஒரு சிலம்பு கழன்றாலோ உடைந்தாலோ கழட்டினாலோ அங்கு விபரீதம் நிகழும் என்பது நம்பிக்கை. அவ்வகையிலே கண்ணகையினதும் கோப்பெருந்தேவியினதும் ஒற்றைச் சிலம்புகளே சிலப்பதிகாரமாயின என்று கூறலாம். கண்ணகி தமிழரிடையே ஒரு புதுத்தெய்வமாக உருப்பெற்ற கதையை சிலப்பதிகாரம் சுவைபடக்கூறுகிறது.
வானோர் வடிவில் வந்த கோவலனோடு தெய்வ விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள்.
சிறு குடியீரே சிறு குடியீரே ....என்ற சிலப்பதிகார குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற் சடங்கு கண்ணகி சடங்காகும்.அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்குவந்தது.
சேரன்செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கங்கையில் நீராட்டி அக்கல்லிலிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலை நகராம் வஞ்சிமாநகரில் அமைத்த ஆலயத்தில் பிரதிஸ்டை செய்தான்.
இந்த விழாவிற்கு குடகக்கொங்கரும் மாளுவவேந்தனும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறிநிற்கிறது.
கிழக்கின் கரிகாலன் மோனத்தவமுனி முத்தமிழ் வித்தகன் இப்புண்ணிய பூமியில் அவதரித்த ஆண்டான 1892 இல்தான் சிலப்பதிகாரமும் முதன் முதலில் அச்சிடப்பட்டது.அதன் பின்பே அதன் புகழ் கற்றவர் மத்தியில் பரம்பியது.
சிலப்பதிகாரம் மானுடப்பெண்ணை தெய்வமகளாகச்செய்து நிற்க வழக்குரைப் பனுவல் தெய்வமகளை மானுடப் பெண்ணாகக் காட்டிச் செல்கின்றது.
கண்ணகி வழிபாட்டின் தோற்றம் பற்றி தமிழ் இலக்கிய நூல்கள் மட்டுமல்ல சிங்கள இலக்கிய நூல்களும் காணப்படுகின்றன.ராஜாவலிய ராஜரத்தினாகார பத்தினிக்கத்தாவ முதலிய சிங்கள நூல்கள் அவை.
வழக்குரைநூல் சிறிய மணிப்பரல் காரணமாகப் பெரிய போரினைக் கிளப்பிவிட்டுத் தமிழனைத் தமிழன் வென்ற செய்தியினை விரித்துச் செல்கின்றது.ஈழநாட்டிற்கும் சோழநாட்டிற்குமிடையே நடந்தேறிய இச் சண்டையில் திழன் தமிழனோடு சமாதானப்பட்டு வாழ்ந்த செய்தியினை ஈற்றில் நமக்குத் தெரிவித்து நம்மை மகிழ்விக்கின்றது.
வழக்குரைநூலில் வருகின்ற அணிகலன்கள் பலவற்றின் பெயர்கள் கிழக்கோடு தொடர்புடையவை.கொப்புவாழி தண்டை காலாழி பீலி உட்கட்டு மேல்வாளி கொப்புவாளி காறை கைக்கட்டு போன்ற நகைகளை அணிகின்ற வழக்கம் இன்றும் நடைமுறையிலிருக்கின்றது.
நாடுகாட்டுப் பரவணி;க் கல்வெட்டில் கண்ணகி வணக்கம் பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கண்ணகி வணக்கம் இலங்கையின் இரண்டு இனத்தாரிடையே (தமிழர் சிங்களவர்)வளர்க்கப்பட்டு வந்தது. கண்ணகை அம்மன் என்றும் பத்தினி தெய்யோ என்றும் வழங்கப்பட்டுவந்தது.
சிலம்புக்காதை பற்றியபாடல்களை மட்டக்களப்பிலே கண்ணகி வழக்குரை என்றும் திருமலையிலே கோவலன் காதை என்றும் வவுனியாவிலே சிலம்பு கூறல் என்றும் பாடுவர். கிழக்கில் காலங்காலமாக வணங்கப் பட்டுவரும் காளி துர்க்கை மாரி
No comments:
Post a Comment