கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் !!
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே எல்லோரும் குளிர்பானங்களை தேடி அழைவது வழக்கமாகும். பழ ஜீஸ், தயிர், மோர் என்று குளிர்ச்சியான உணவுகளை உண்ணும் போது, கோடைக்காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் அதிகமாக வெப்படைந்துவிடுகிறது என்பதற்காக, அதிகமான குளிர்ச்சி உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் சூட்டை கிளப்பிவிடும். அதனால், கோடையில் சில உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். எந்த விதமான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
❊ குளிர்காலத்தில் உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஆனால் கோடையில் இதனை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது தான் நல்லது.
❊ ஐஸ் தண்ணீர் உடலில் உள்ள கலோரிகளை கரைத்து, நச்சுக்களை வெளியேற்றினாலும், உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதில் முதன்மையான ஒன்று. ஆகவே கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
❊ கார உணவுகளை கோடையில் மட்டும் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகளை சாப்பிட்டால், உடல் வெப்பமானது அதிகரிக்கும். அதிலும் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்ற உணவிற்கு காரத்தைத் தரும் மசாலாப் பொருட்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.
❊ கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி செரிமானம் ஆவதற்கு நிறையநேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் இந்த நேரத்தில் உடல் வெப்பமானது அதிகரிக்கும். எனவே பகல் நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக சாதத்தை எடுத்துக் கொள்வது நல்லது.
❊ வேர்க்கடலையில் நியாசின் என்னும் வைட்டமின் பி3 அதிகம் உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மெட்டபாலிசத்தை உயர்த்தும். இத்தகைய வேர்க்கடலை உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதில் முக்கியமான ஒன்று. ஆகவே கோடையில் வேர்க்கடலை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
❊ காபியும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. எனவே இதனை முடிந்த வரையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பதே சிறந்தது.
❊ எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும், உடல் வெப்பம் அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையும் உண்டாகும்.
❊ உலர் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவைதான். அதே சமயம் அதில் உடலை வெப்பப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. எனவே இதனை கோடையில் அளவாக சாப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment