மழை பெய்ய பரிகாரங்கள்
மழை பெய்ய வேண்டும் என்றால் தேவலோகத் தலைவன் இந்திரனை பிரார்த்திக்க வேண்டும். அவனது அருள் கிடைத்தால் வருணனை அனுப்பி மழை பொழிய வைப்பார். ஒரு சமயம் காஞ்சி மகாபெரியவர், ஆடிமாதம் திருவையாற்றுக்கு அருகில் உள்ள காருகுடி என்னும் கிராமத்துக்கு வந்தார். அப்போது வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்கள், வறட்சியைப் போக்க வழி கேட்டு, மகாபெரியவரை தரிசிக்கச் சென்றார்கள். அப்போது மகா பெரியவர், இரண்டு ஸ்லோகங்கள் அருளினார்.
ஸ்லோகம் 1:
ரிச்யச்ருங்காய முநயே
விபண்டக ஸ{தாயச
நம: சாந்தாதி பதயே
ஸத்ய: ஸத் வ்ருஷ்டி ஹேதவே.
ஸ்லோகம் 2:
விபண்டகஸ{த: ஸ்ரீமாந்
சாந்தாபதி ரகல்மஷ்
ரிச்ய ச்ருங்க இதிக்யாத:
மஹாவர்ஷம் ப்ரயச்சது:
சிவனின் மழை மந்திரம் :
'நமசிவாயம் லங்க நமசிவாய" என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும்.
மிருகசீரிடம் நட்சத்திர தோஷம் நீங்க..!
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பௌர்ணமி விரதமிருந்து சந்திரனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். திங்கள+ர் சென்று வழிபட்டால் தீராத குறைகளெல்லாம் தீரும்.
No comments:
Post a Comment