14-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்
மார்க் சுக்கர்பெர்க்
உலகை இணைத்த சமூக வலைத்தளமான பேஸ்புக்கினை உருவாக்கிய மார்க் சுக்கர்பெர்க் 1984 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி பிறந்தார். சுக்கர்பெர்க் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவருடைய சக வகுப்புத்தோழர்களோடு இணைந்து பேஸ்புக்கை உருவாக்கினார். அதன்பின் பேஸ்புக்கின் CEO வாக பணியாற்றுகிறார். உலகின் அதிக செல்வாக்கு உள்ளவர்களுள் இவரும் ஒருவர். இவருக்கு தற்போதைய வயது 33 என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட இயக்குநர் மிருணாள் சென்
✍ இந்தியத் திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய இயக்குநர் மிருணாள் சென் 1923 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி பிறந்தார். கொல்கத்தா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் இயற்பியலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பயின்றார். படித்து முடித்தவுடன் திரைப்படங்களுக்கு விமர்சனங்கள் எழுதிவந்தார்.
✍ 1950 முதல் முழுநேர திரைப்படப் பணிகளில் இறங்கினார். இவர் தனது ஆரம்பகால திரைப்படங்களில் கம்யூனிசக் கொள்கைகளை வெளிப்படுத்தினார். இவரது முதல் திரைப்படமான 'ராத் போர்" வெற்றி அடையவில்லை. 2வது திரைப்படமான 'நீர் ஆகாஷிர் நீச்சே" இவருக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. குறைந்த செலவில் எடுக்கப்பட்டு 1969இல் வந்த 'புவன் ஷோம்" இவரை திரை உலகின் முக்கிய அடையாளமாக மாற்றியது.
✍ ஏறக்குறைய 30 திரைப்படங்கள், 14 குறும்படங்கள், 4 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இவரைப் பற்றியும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இவரது பல திரைப்படங்கள் உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதைகளை வென்றன. இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1998 முதல் 2003 வரை கவுரவ உறுப்பினராக இருந்தார். இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
1796 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.
இரண்டாவது மராத்திய பேரரசர் சாம்பாஜி 1657 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி பிறந்தார்.
1861 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859 கிராம் எடையுள்ள விண்கல் வீழ்ந்தது.
2002 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி விண்வெளியில் 60 வருடங்களுக்கு பிறகு 7 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்தது.
No comments:
Post a Comment