8-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்
அன்னையர் தினம்
கல்லறையில் உறங்க
சொன்னால் கூட உறங்குவேன்
அம்மா நீ வந்து தாலாட்டு பாடினால்..!
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்..!
உலக அளவில் பல்வேறு அம்சங்களை அடிப்படையாக வைத்துப் பல்வேறு தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் அன்னையர் தினத்துக்கு மட்டும் ஒரு வித்தியாசமான தன்மை உள்ளது. இது ஒவ்வோர் ஆண்டும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. பழங்காலத்தில் கிரேக்கர்கள் வசந்த காலத்தின் துவக்கத்தை தாய் தெய்வத்தை வணங்கி கொண்டாடினார்கள். ரோமர்களும் சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். இயேசு வருகைக்கு பின்பு இந்த கொண்டாட்டம் இயேசுவின் தாயை மரியாதை செய்வதாக மாறியது. இப்போது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிறுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (மே 8) அன்னையர் தினம்.
உலக செஞ்சிலுவை தினம்
செஞ்சிலுவைச் சங்கம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு சர்வதேச மனிதநேய அமைப்பு. அதை கவுரவிக்கும் விதமாகவும், அதன் தன்னலமற்ற சேவை பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தி, அதன் மகத்தான சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்துடனும் மே 8 ஆம் தேதி சர்வதேச செஞ்சிலுவை தினம் நினைவு கூறப்படுகிறது. உலக நாடுகளிடையே செயற்பட்டுக்கொண்டிருக்கும் பக்கச்சார்பற்ற அமைப்பு இந்த செஞ்சிலுவை சங்கமாகும். இவ்வமைப்பை உருவாக்கிய ஹென்றி டுனான்ட் அடிப்படை நோக்கமே 'பக்கச்சார்பற்ற சேவையை இன மத பேதமின்றி அனைவருக்கும் வழங்கவேண்டும்" என்பதே. இன்றுவரை செஞ்சிலுவைச்சங்கம் தனது சேவையை செவ்வனே ஆற்றிவருகிறது.
1828 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டியூனாண்ட் பிறந்தார்.
உலகம் முழுவதும் ஆன்மீக வேதாந்தக் கருத்துகளைப் பரப்பிய சுவாமி சின்மயானந்தா 1916 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி பிறந்தார்.
1886 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.
1944 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி உலகின் முதல் கண் வங்கி நியூயார்கில் துவங்கப்பட்டது.
No comments:
Post a Comment