9-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்
அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சௌபாக்கியங்களையும் தரவல்ல அட்சய திருதியை இன்று.
கோபாலகிருஷ்ண கோகலே
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் கோபாலகிருஷ்ண கோகலே 1866 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். மும்பை எல்பின்ஸ்டோன் கல்லூரியில் 1884 இல் பட்டப் படிப்பை முடித்தார். அதன்பின் சமூக மறுமலர்ச்சியாளர் மகாதேவ் கோவிந்த ரானடேவின் ஆதரவாளராக மாறினார். இந்திய தேசிய காங்கிரஸில் 1889இல் இணைந்தார்.
வன்முறையைத் தவிர்ப்பது, அரசு நிறுவனங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவது ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். மும்பை சட்டப் பேரவைக்கு 1899இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியர்களுக்குப் பொதுத்துறை வி~யங்களில் அதிக அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றுத்தர போராடினார். 1905இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார்.
முகமது அலி ஜின்னாவுக்கும் இவரே வழிகாட்டியாக விளங்கினார். அரசியலை ஆன்மீகமாக்கல், சமூக மேம்பாடு, அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவற்றின் மீது கோகலே கொண்டிருந்த திடமான நம்பிக்கை காந்திஜியை வெகுவாக கவர்ந்தது. 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் கோகலே தம்முடைய 49வது வயதில் மறைந்தார்.
1874 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1960 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை முதன்முதலில் அமெரிக்கா சட்டப்பூர்வமாக்கியது.
1985 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
No comments:
Post a Comment