காஞ்சீபுரத்தில் காமாக்ஷி அம்மனுக்கு கும்பாபிஷேகம்.
கோவிலிருந்து பெரியவாளை அழைத்தார்கள்.
ஸ்ரீஜயேந்த்ர பெரியவாளும் வந்து கூப்பிட்டார்.
ஆனால் பெரியவா வரவில்லை என்று சொல்லிவிட்டார்
நான் பெரியவாளிடம்'நம் காமாக்ஷி அம்மனுக்கு
அபிஷேகம்..பெரியவா போகாமல் இருக்கலாமா?''
என்று கேட்டேன்.
கோவிலிருந்து பெரியவாளை அழைத்தார்கள்.
ஸ்ரீஜயேந்த்ர பெரியவாளும் வந்து கூப்பிட்டார்.
ஆனால் பெரியவா வரவில்லை என்று சொல்லிவிட்டார்
நான் பெரியவாளிடம்'நம் காமாக்ஷி அம்மனுக்கு
அபிஷேகம்..பெரியவா போகாமல் இருக்கலாமா?''
என்று கேட்டேன்.
அதற்கு பெரியவா 'இல்லை ஸ்ரீஜயேந்த்ர பெரியவா
என் குழந்தை..மடத்தை நிர்வாகம் செய்கிறார்,பூஜை
செய்கிறார்.அவர்தான் செய்யவேண்டும் அதுதான்
முறை'' என்று சொல்லிவிட்டார்
கும்பாபிஷேகம் ஆன மறு நாள் கோவிலிலிருந்து,
தீர்த்தம், சால்வை, புடவை எல்லாம் வந்தன
பெரியவா விபூதி ப்ரசாதத்தை இட்டுக் கொண்டார்
சால்வையைப் போர்த்திக் கொண்டார்.
புடவையையும் மேலே போட்டுக் கொண்டார்.
என்னைப் பார்த்து,'என்ன கோவிலுக்குப் போகலாமா?'
'நேற்றைக்கு கும்பாபிஷேகம் ஆகிவிட்டது, நான்
போகவில்லை, எனக்குக் காமாட்சியைப்
பார்க்கவேண்டும்; போகலாமா?' என்று கேட்டார்.
ஒரு குழந்தை தன் தாயைப் பார்க்க எப்படி
ஆவலாக இருக்குமோ அப்படி ஓர் ஆவல்!
'என்னை ஏன் கேட்கிறீர்கள், நீங்கள் விரும்பினால்
போகலாம் என்றேன்.
''நீதானே என்னை எங்கும் போகக் கூடாது என்று
இங்கு கலவையில் உட்கார வைத்தாய் என்று
நான் மூன்று வருஷங்களுக்கு முன் அவர் கால்
சக்கரங்கள் அழியாமல் இருப்பதற்காகச்
சொன்ன வார்த்தைகளை மீற முடியாமல்
என்னிடம் கேட்டார்.
அன்று மாலை நான்கு மணிக்கு நடக்க ஆரம்பித்து
மறு நாள் மாலை நான்கு மணியளவில் காஞ்சி
போய்ச் சேர்ந்தோம்.
கோவிலில் சென்று அம்பாளை தரிசித்துப்
புஷ்பம் போட்டு, மாலை சார்த்தி,புடவை
சாத்தி அழகு பார்த்தார். பின் எங்களுக்குப்
ப்ரசாதம் கொடுத்து ஆச்சார்யாள் சன்னிதிக்கு
வந்து தரிசித்து அங்கேயே வாய்திறந்தவாறு
படுத்துவிட்டார். அவ்வளவு அசதி. அப்போது
அவருக்கு தொண்ணூறு வயசு.பின் பழமும்
பாலும் கொடுத்து சாப்பிடச் சொன்னேன்.
மூன்று பழத்துண்டுகளும் பாலும் சாப்பிட்டு
துயில் கொண்டார். மறு நாள் கொட்டகைக்குச்
சென்று ஸ்னானம் செய்து ஈரத்துணியுடன்
காமாக்ஷிக்கு அங்கப்ரதக்ஷிணம் செய்தார்.
உடம்பெல்லாம் ரத்தப் புள்ளியாக தோற்றம்.
முதல் முதலாக காமாக்ஷியை அங்கப்ரதக்ஷிணம்
செய்தவர் பெரியவாதான்!
அதே வேகத்தில் கிளம்பி 25 கிலோ மீட்டர்
நடந்து கலவை சென்றுவிட்டார்!
சொன்னவர் பாலு ஸ்வாமிகள்.
இந்தத் தென்பும் மனோ திடமும் நம்மில் யாருக்காவது
வருமா? சாக்ஷாத் ப்ரத்யக்ஷ பரமேச்வரன்!
ஜய ஜய சங்கரா....
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு.உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது கருங்கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.நீர்: கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.காற்று: கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.இக்காரணங்களினால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன.இதுவே, கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.
No comments:
Post a Comment