வெள்ளரிக்காயின் பயன்கள்
❈ வெள்ளரிக்காயில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான பல வைட்டமின்கள் அடங்கியுள்ளது. வெள்ளரிக்காயில் உள்ள நீர், உடலில் இருக்கும் கழிவை நீக்க பெரிதும் பயன்படுகிறது.
❈ வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை கரையச் செய்யும். இந்த வெள்ளரிக்காய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
❈ வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும். ஏனென்றால் தோளில் தேவையான அளவு விட்டமின் சி உள்ளது. அதிலும் அன்றாட தேவைப்படும் அளவில் 12மூ அடங்கியுள்ளது.
❈ அதில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும் இது தண்ணீர் குடிக்காததை ஈடுசெய்யும். வெள்ளரிக்காயில் அதிக அளவில் சிலிகா உள்ளதால், தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்.
❈ வெள்ளரிக்காய் வயிறு எரிச்சலை கட்டுப்படுத்துகிறது, மேலும் வெள்ளரிகளை சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும். வெள்ளரிச் சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம் பெறும். வெள்ளரிச்சாறுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்து, ஊறிய பின் கழுவினால் முகம் பளபளப்புடன் அழகு பெறும்.
❈ வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து, அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு நீங்கி, நீர் எளிதில் பிரியும். வெள்ளரிப் பழத்தை அரைத்து பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்.
❈ வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி முகத்தில் வைத்து வந்தால் முகம் குளிர்ச்சி பெறும். தோல் சுருக்கம் நீங்கும். தயிர் அல்லது மோரில் வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டு சாப்பிடால் தாகம் தீரும். அஜீரணம் நீங்கும். வெள்ளரிக்காய் துண்டுகளோடு தக்காளி, கேரட், பீட்ரூட் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகு சேர்த்து சாலட் போல் சாப்பிட உடலுக்கு மிக நன்மை கிடைக்கும்.
❈ வெள்ளரிக்காயைத் தொடர்ந்து உண்டு வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். நரம்புகள் வலுப்பெறும். மஞ்சள் காமாலை குணமாகும். வெள்ளரியில் குறைவான அளவு கலோரி உள்ளதால் உடல் பருமனை குறைக்க சிகிச்சை எடுப்பவர்களுக்கு நல்ல பலனை தரக்ககூடியது.
❈ மேலும், வெள்ளரிக்காயுடன் விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் மிக குறைந்த நாட்களில் உடல் குறைந்து காணப்படுவார்கள். வெள்ளரிக்காய் சிறுநீர் நோயாளிகள் சாப்பிடலாம். வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகம் உட்கொள்வது வெயில் காலத்தில் உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ளும் ஒரு வழிமுறையாகும்.
❈ காலராநோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும். வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்
❈ வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும், சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. கபம், இருமல், நுரையீரல் தொல்லையுள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது நல்ல தல்ல.
No comments:
Post a Comment