ஊமைத்துரை
பிறப்பு :
ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய ஊமைத்துரையின் இயற்பெயர் குமாரசாமி. இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம் பெல்லாரி ஆகும். தந்தை ஜெகவீர கட்டபொம்மன் என்பவருக்கும்> தாயார் ஆறுமகத்தம்மாள் என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர் ஊமைத்துரை. சற்று திக்குவாய் கொண்டவர். இவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஆவார்.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை :
இவர் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர் புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். ஊமைத்துரையை விடுவிப்பதற்காக விறகு> வைக்கோல்> புல் முதலியவற்றை விற்பவர்கள் போல வீரர்கள் பாளையங்கோட்டை நகருக்குள் புகுந்தனர். மாலையில் சிறையை உடைத்து மன்னரை விடுதலை செய்தனர்.
இதன் பிறகுதான் பாஞ்சாலங்குறிச்சி சென்று 1801-ஆம் ஆண்டு முதல் போரில் அழிக்கப்பட்ட தமது பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை குண்டுகள் துளைக்காத கோட்டையாக மாற்றிக் கட்டினார். இந்தக் கோட்டையானது பதனீரையும்> கருப்பட்டிச் சாற்றையும் மண்ணில் குழைத்துக் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
1801ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் வெள்ளையர் ஆயுத பலத்தைப் பெருக்கிக்கொண்டு மீண்டும் கோட்டையை முற்றுகை இட்டனர். பீரங்கித் தாக்குதலில் கோட்டையில் விரிசல் விழுந்தது. அதைநோக்கி முன்னேறிய கும்பினிப்படை பெருத்த சேதத்துக்கு ஆளானது. மே மாதம்
23ஆம் நாள் கோட்டையை விட உயரமான மேடைகளைக் கட்டி> அதன்மேல் பீரங்கிகளை ஏற்றி> கோட்டைக்குள் குண்டு வீசிக் கோட்டையைக் கைப்பற்றினர்.
தப்பிச் சென்ற ஊமைத்துரை> மருது சகோதரர்களுடன் வெள்ளையரை எதிர்க்க ஆயத்தமானார்.
1801 ஜூன் முதல் செப்டம்பர் வரை கமுதி> திருபூவனம்> சிறுவயல் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் ஊமைத்துரை கொரில்லாப் போர் முறைகளைக் கையாண்டு> வெள்ளையருக்குப் பெருத்த சேதத்தை விளைவித்தார். பின்னர் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு 1801 நவம்பர்
16-ஆம் நாள் இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர்.
நினைவுகள் :
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர்pல்> குமாரபட்டி கிராமத்தின் அருகேயுள்ள காட்டுக்குள் ஊமைத்துரைக்குக் கோயில் அமைத்து ஊமையன் கருப்பர் என்ற பெயரில் இன்னும் வழிபட்டு வருகின்றனர். வாரந்தோறும் வெள்ளி> செவ்வாய் கிழமைகளில் ஊமையன் கருப்பர் (ஊமைத்துரை) கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
மேலும்> ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுநிலவு நாளில் நடைபெறும் பிரமாண்டமான திருவிழாவில் பங்கேற்கப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதன்படி மே மாதம் மூன்றாம் தேதி பவுர்ணமித் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெற்றது. அன்று இரவு வழக்கம் போலவே கட்டபொம்மன் நாடகம் மற்றும் ஊமையன் கருப்பருக்குப் பொங்கல் வழிபாடுகளும் செய்யப்பட்டன. ஆங்கிலேயரை எதிர்த்து வீர முழக்கமிட்ட ஊமைத்துரையின் தியாகத்திற்கு நன்றியைத் தெரிவிக்கும் வண்ணமாக ஊமையன் கருப்பர் ஆலயம் திகழ்கிறது.
No comments:
Post a Comment